Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 16 August 2017

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் படித்து எழுதி பழக உதவும் வார்த்தைகள்!!


தமிழகத்தில் 'நீட்' தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஆய்வு செய்கிறது.

 'நீட்' அவசர சட்ட வரைவுக்கு ஒப்புதல் பெற சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மத்திய சுகாதாரத்துறை, உள்துறை மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை இன்று சந்தித்து, கூடுதல் ஆவணங்கள் வழங்க உள்ளனர். மேலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் சட்ட வல்லுனர்களும் தமிழக அரசின் சட்ட வரைவு அம்சங்களை இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பெற்ற பின் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து மத்திய அரசு முடிவு செயயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம்

இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி மருத்துவ மாணவர்

சேர்க்கையை ஆக., 31க்குள் முடிக்க வேண்டும். தற்போதைய நிலையில் இன்னும் 15 நாட்களில் கவுன்சிலிங்கை முடிப்பது

சாத்தியமில்லை. நீட் தேர்வு விலக்கு கோரிக்கைக்கும் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. அதனால் ஆக., 31க்கு பிறகும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கூடுதல் அவகாசம் கேட்க தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான

மனுவை சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவில் சமர்ப்பிக்க உள்ளனர்.

இன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்

இன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்., 1ல் அனைத்து தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் வகுப்புகளை துவங்க உள்ளன. இரண்டு வாரங்களுக்கு, மாணவர்களுக்கு இன்ஜினியரிங் முன் தயாரிப்பு பயிற்சி வழங்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, ஆங்கில மொழித்திறன் பயிற்சி, தொடர்பு ஆங்கிலம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இடம் பெற்றுள்ள, கணிதம், இயற்பியல் போன்ற அடிப்படை பாடங்களை நடத்த, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

'சமீபத்தில் நடந்து முடிந்த, அண்ணா பல்கலையின் தேர்வில், இயற்பியலில், 70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதன் எதிரொலியாகவே, கணிதம், இயற்பியலில், இந்த ஆண்டு முதல், முன் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது' என, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆகஸ்ட் 18&19 ஆம் தேதி நடைபெறும்!!

Google GBoard தரவிறக்கம் செய்து தமிழில் பேசுங்கள் தானாக தட்டச்சு செய்யும்.

கூகுளின் தமிழ் குரல் தேடல் ( voice search ) மற்றும் தமிழில் நாம் சொல்ல சொல்ல டைப் செய்வதை ( voice typing) நம் திறன் பேசிக்கு சில அமைப்பு முறை மாற்றம் ( settings change) மற்றும் ஓர் மென் பொருள் நிறுவல் ( application install) மூலம் எளிமையாக செய்யலாம்.   அந்த மென் பொருளின் பெயர் கூகுள் " ஜீபோர்ட் " ( Gboard) .
Google voice search, YouTube voice search, app store voice search ஆகியவற்றில் தமிழில் குரல் தேடலில் ஈடுபட Gboard தேவையில்லை. இதற்கு அமைப்பு முறையில் சில மாற்றங்களை செய்தால் மட்டும் போதுமானது.
ஆனால் facebook , WhatsApp ஆகியவற்றில் voice typing எனப்படும் குரல் தட்டச்சினை மேற்கொள்ள Gboard எனும் மென்பொருள் நிறுவலும்  பின்பு, அமைப்புமுறையில்  (settings) language & inputs settings ல் சில மாற்றங்களும் செய்தல் அவசியம். அதற்கு கீழே உள்ள படங்களையும் அதற்கான caption களையும் படித்து படிநிலைகளை  தெரிந்துக்கொள்ளவும்.
இந்த குரல் தேடல் மற்றும் குரல் தட்டச்சில்  கீழ்கண்ட நேரங்களில் அது உங்களுக்கு பலன் அளிக்காமல்  போகலாம்.
1.இதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் இவ்விரண்டும் செயல்படாது.
2. உங்கள் திறன்பேசியில் settings ல் language @ input ல் google voice typing எனும் option இருந்தால் மட்டுமே இது செயல்படும்.
3. Mic ஐ உபயோகிக்கும் application process நிகழும் போது இந்த voice search மற்றும் voice typing நிகழாது.  உதாரணமாக screen recording செய்யும் போது இதை பயன்படுத்த முடியாது.


DEE - 2017-18 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க - மானக் அறிவியல் ஆய்வு விருது சார்பு - இயக்குநர் செயல்முறைகள்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 'ஆண்ட்ராய்டு ஆப்' - தேர்தல் ஆணையம் அசத்தல்

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈரோ-நெட் (ERO-NET) என்ற இணையதளம் மற்றும் 'ஆண்ட்ராய்டு ஆப்'-ஐ அறிமுகம்செய்திருக்கிறது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநிலத் தேர்தல் அலுவலகத்தில், இந்த 'ஆப்'-ஐ மாநிலத் தேர்தல் ஆணையர் கந்தவேலு அறிமுகப்படுத்தினார்.

 
அப்போது பேசிய அவர், ''தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும் இந்த 'ஆப்' உதவியாக இருக்கும்.மேலும், வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தை National Voters Service Porters ( www.nvsp.in ) என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய முடியும். அப்படிப் பதிவுசெய்யப்படும் விண்ணப்பங்கள் UNPER (Unified National Photo Electoral Rolls) என்ற தகவல் அறையில் பராமரிக்கப்படும். அனைத்து மண்டல மொழிகளிலும் இந்த 'ஆப்' செயல்படும். இதன்மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயரைச்சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவுடன்

அவருக்கு ஒரு தனிப்பட்ட எண் அவரது செல்போனுக்கு வரும்.அந்த எண்ணைக்கொண்டு அந்த விண்ணப்பத்தின் பல்வேறு நிலைகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் வாக்காளருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த விண்ணப்பத்தின் அப்போதைய நிலை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். அதிகாரிகள், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கவும், வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கவும் மற்ற மாநில வாக்காளர் பதிவு அதிகாரிகளை எளிதில் தொடர்புகொண்டு, சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளைச் செய்யும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தவறுகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவுசெய்வது தவிர்க்கப்படும். மேலும், ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்ளலாம். இந்த வசதியை இணையதளம் மூலமாகவும் 'ஆண்ட்ராய்டு 'ஆப்' மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" என்றார்.

பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு

பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
இதன்படி, தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்தாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னரே தேர்வு தொடங்கும் தேதி, முடியும் தேதி, முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றைப் பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரத்யேக படிவம் ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரப்பி பள்ளிகளில் வழங்க மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் படிவத்தில் ஆதார் எண், தந்தையின் செல்போன் நம்பர், மாற்றுத் திறனாளிகள் மாணவர் பற்றிய கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் பள்ளி கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு அவை கம்யூட்டரில் ஏற்றப்பட உள்ளன. இதனால் நடைமுறை சிக்கல் வெகுமாக குறைவதாகத் தேர்வு துறையினர் தெரிவிக்கின்றனர்.

Tuesday, 15 August 2017

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவினை முன்னிட்டு 16.08.2017 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கல்விசிறகுகளின் 71 வது இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

இந்த வார புதியதலைமுறை கல்வி இதழில்...... எனது தாயார் படித்தவுடன் கண் கலங்கி கூறிய மறு வார்த்தை இதை பார்க்க உங்க அப்பா இல்லையே பா.....

இந்த வார புதியதலைமுறை கல்வி இதழில்......

எனது தாயார் படித்தவுடன் கண் கலங்கி கூறிய மறு வார்த்தை இதை பார்க்க உங்க அப்பா இல்லையே பா.....

நன்றி திரு.மோ.கணேசன் அவர்கள்....

Chief sub-Editor புதியதலைமுறை கல்வி..

இவை அனைத்தும் செய்வதற்கு எவ்வளவு இன்னல்களை சந்தித்தேனோ அந்த அளவிற்கு மனதில் மகிழ்ச்சி....நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது......இதற்காக என்னுடன் இணைந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த நண்பர்களுக்கும்......எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

S.சதீஷ்குமார் M.Sc.,M.Phill.,M.Ed.,

பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)

அரசு மேல்நிலைப்பள்ளி 

பூவாளூர் 

திருச்சி மாவட்டம் - 621712

WhatsApp & Mobile - 9843477770


அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்கள்: ஆர்வமுடன் பயிலும் மாணவர்கள்- அரசுப் பள்ளிகளுக்கு பெருமை சேர்க்கும் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி

வகுப்பறைகளில் நடைபெறும் சரளமான ஆங்கில உரையாடல்கள்; நடுத்தர குடும்பங்களின் குழந்தைகளும் நிறைந்துள்ள வகுப்பறைகள்; அரசுப் பள்ளிகளில் தரமான ஆங்கில வழிக் கல்வி

கிடைக்குமானால், தனியார் பள்ளிகளை விடவும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறது ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி.

இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் செயல்படுகின்றன. பெயரளவில் இல்லாமல் முழுமையான ஆங்கில வழி வகுப்புகள் செயல்படுவது வகுப்பறை நடவடிக்கைகளை பார்க்கும்போது தெரிகிறது. தனியார் பள்ளிகளை விடவும் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் தரமான ஆங்கில வழிக் கல்வியை அளிக்க முடியும் என இந்தப் பள்ளி ஆசிரியர்கள் நிரூபித்து வருகின்றனர். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்கவும், எழுதவும், உரையாடவும் முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ளனர். ஆங்கிலம் மட்டுமின்றி, தமிழிலும் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும், உரையாடவும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதிலும், அவர்களிடம் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதிலும் ஆசிரியர்கள் காட்டும் ஆர்வமும், அக்கறையும் பள்ளி வளர்ச்சிக்கு பிரதான காரணமாக திகழ்கிறது. மாணவர்களை உளவியல் ரீதியாக அணுகுவதில் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் நன்றாகவே பயிற்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு வரை தனியார் பள்ளியில் படித்தவர் அ.அமத்சியா பாருக். தற்போது 5-ம் வகுப்பில் இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். இங்கு சேர்ந்த முதல் நாளிலிருந்து அந்த மாணவரின் முகத்தில் எப்போதும் உற்காசமும், மகிழ்ச்சியும் காணப்படுவதாக வகுப்பாசிரியர் கூறுகிறார்.

“இதற்கு முன் படித்த பள்ளியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை. இங்கு முதல் நாளிலேயே பல நண்பர்கள் கிடைத்தார்கள். இவ்வளவு அன்பான ஆசிரியர்களை இதற்கு முன் பார்த்ததில்லை. வீட்டுப் பாடமாக அவ்வப்போது பல ப்ராஜக்ட் பணி கொடுப்பார்கள். அந்த ப்ராஜக்ட் அழகாக, நேர்த்தியாக செய்திருக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பார்கள். மாணவர்களால் அவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான ப்ராஜக்ட் பெற்றோர்களால்தான் செய்யப்படும்.

ஆனால், இந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன், எவ்வளவு மோசமாக இருந்தாலும் ப்ராஜக்ட் பணி என்பது மாணவர்களால்தான் செய்யப்பட வேண்டும் என்று எனது புதிய ஆசிரியர் கூறியது மிகவும் வியப்பாக இருந்தது. எனது ப்ராஜக்ட் பணியை இப்போது நானே மகிழ்ச்சியாக செய்கிறேன். முன்பைவிட இப்போது நன்றாகப் படிப்பதாக நானே உணர்கிறேன். இங்குள்ள பரந்த திடலில் நிறைய நேரம் விளையாட அனுமதிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் சேர்ந்ததில் இருந்து நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என தனது மகிழ்ச்சிக்கான காரணங்கள் பற்றி கூறுகிறார் பாருக்.

வயதுக்கேற்ற மன வளர்ச்சி இல்லாத சிறப்புக் குழந்தை பெனாசிர் பேகம். தனியார் பள்ளியில் படித்து வந்தாள். எனினும் தமது குழந்தைக்கு ஆசிரியர்களின் கூடுதல் கவனம் தேவை என கருதிய அவரது பெற்றோர் கடந்த ஆண்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேர்த்தனர். நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட சிலரைத் தவிர மற்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் கூட சிரமப்படும் குழந்தை, கடந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழா மேடையில் நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். தங்கள் குழந்தையிடம் மறைந்திருந்த திறமையை இப்பள்ளி ஆசிரியர்கள்தான் கண்டுபிடித்து, வெளிக்கொண்டு வந்ததாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

இத்தகைய ஆற்றல் மிகுந்த ஆசிரியர்கள் பணியாற்றும் இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 120 மாணவர்கள் பயின்றனர். இந்த ஆண்டு 184 ஆக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

பள்ளியின் வளர்ச்சிப் போக்கு பற்றி தலைமை ஆசிரியர் தே.எஸ்தர் வேணி கூறியதாவது:

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2009-ம் ஆண்டு நான் பொறுப்பேற்றேன். தனியார் பள்ளிகளின் செல்வாக்கால் மற்ற பள்ளிகளைப் போலவே எங்கள் பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சுற்றியுள்ள பகுதிகளை விட பள்ளி வளாகம் தாழ்வாக இருந்ததால் மழைக் காலங்களில் தண்ணீர் பெருகி விடும். முழங்கால் அளவுக்கு மேல் தேங்கும் மழை நீர் வடிய பத்து நாள் கூட ஆகும். இதுவும் மாணவர் எண்ணிக்கை குறைய காரணமாக இருந்தது. 2011-12ல் 75 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டது.

இது பற்றி நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். 2013-14ம் கல்வியாண்டின்போது, பள்ளி வளாகத்தை நகராட்சி நிர்வாகத்தினர் மேடுபடுத்தினார்கள். பள்ளி மைதானம் முழுவதும் அழகான கற்களை பதித்தார்கள். சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஏற்கெனவே மரங்கள் நிறைந்து காணப்படும் எங்கள் பள்ளி வளாகம், இந்த புதிய வசதிகளால் பொலிவு பெற்றது. 2012-13ம் கல்வியாண்டில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்கினோம்.

இதற்கிடையே எங்கள் பள்ளியில் அளிக்கப்படும் கல்வி பற்றி ராமநாதபுரம் நகரம் முழுவதும் எங்கள் ஆசிரியர்கள் பிரச்சாரம் செய்தனர். எங்கள் ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்பு மிக்கவர்கள். மே மாதத்தில் முதல் பத்து நாட்கள் மட்டுமே கோடை விடுமுறையை செலவிடும் ஆசிரியர்கள் மீதம் 20 நாட்களும் தினமும் பள்ளிக்கு வந்து விடுவார்கள். மாலை 3 மணி தொடங்கி இரவு 7 மணி வரை நகரின் ஒவ்வொரு வீடாகச் சென்று எங்கள் பள்ளியின் சிறப்பு பற்றி எடுத்து கூறுவோம். எங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன்களை தனியார் பள்ளி மாணவர்களோடு பெற்றோர்களே ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர். இதனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 77 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்ட முதல் நாள், புதிய மாணவர்கள் அனைவரையும் நகரின் முக்கிய வீதிகள் வழியே மேள, தாளங்கள் முழங்க, மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தோம். இதுபோன்ற காரணங்களால் எங்கள் பள்ளி நாளுக்கு நாள் பிரபலமடைகிறது. இனி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கை கட்டாயம் அதிகரிக்கும். இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

இப்பள்ளிக்கு மேலும் பல வசதிகள் தேவைப்படுகின்றன. தற்போது பல அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை வசதி இந்தப் பள்ளிக்கும் கிடைத்தால், மாணவர்களின் கற்றல் திறனை இன்னும் அதிகப்படுத்த முடியும். மாணவர்களுக்கான இருக்கை வசதிகள் அதிகம் தேவைப்படுகிறது. அரசு அதிகாரிகளிடம் இது பற்றி முறையிட்டுள்ள ஆசிரியர்கள், நல்லெண்ணம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவி கிடைக்குமா என்றும் தேடி வருகிறார்கள்.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 82202 77641.

Inspire Award-15-08-2017க்குள் பள்ளிகள் பெயர்களை இணையத்தில் பதிய இயக்குனர் உத்திரவு!!


TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயி ரம் பேர் ஆன்லைனில் விண் ணப்பித்திருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஆசிரியர் தேர்வு வாரியத் தின் தலைவருமான (பொறுப்பு) டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். மறு அறிவிப்பின் படி எழுத்துத் தேர்வானது செப்டம்பர் மாதம்16-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

1325 காலியிடம் இதற்கிடையே, தையல், ஓவி யம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப் பாசிரியர் பதவியில் 1325 காலி யிடங்களை நிரப்புவதற்கான எழுத் துத்தேர்வு செப்டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

MINORITY SCHOLARSHIPS 2017-2018 | இந்திய அரசு -சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் , மெரிட் கம் மீன்ஸ் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் 2017-2018

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்


சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார். 
போட்டித்தேர்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி'? என்பது குறித்து அனுபவம் மிகுந்தவர்களை அழைத்து ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டு போட்டி தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், மாணவர்களிடம் கேள்விகளை கேட்டு அவர்களுக்கு தான் எழுதிய நூல்களை பரிசாகவும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வை பட்டப்படிப்பு முடித்த யார் வேண்டுமானாலும் எழுதலாம். கிரிக்கெட், சினிமா உள்ளிட்ட எந்த சிந்தனையும் இல்லாமல் 2 ஆண்டுகள்முழுமனதுடன் படிக்க வேண்டும். தேர்வில் 70 சதவீத கேள்விகள் தினசரி நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் இருந்து தான் கேட்கப்படுகிறது.

எனவே தினசரி 2½ மணி நேரம் செய்தித்தாள் கண்டிப்பாக படிக்க வேண்டும். தமிழ் மொழியில் தேர்வு எழுதலாம் என்றாலும் ஆங்கில அறிவு என்பது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடபுத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டும். நேர்மையான இளைஞர்களின் பங்களிப்பு அரசு பொறுப்புகளுக்கு தேவைப்படுவதால், அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகளை கூறிகொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நூலகர் காமாட்சி வரவேற்றார். மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலரும் கலந்து கொண்டனர். நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Monday, 14 August 2017

ICT NATIONAL AWARD 2016 AWARDEES FROM TAMILNADU

ICT NATIONAL AWARD 2016 AWARDEES FROM TAMILNADU:

 

This time we got all the three awards. 

1. Nesamani Vengatachalam
2. Sakthivel Murugan 
3. Kalpana

Wishes to all the Three Awardees.. 

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தினந்தோறும் SMS அனுப்ப உதவும் MOBILE  APP

Click here

அரசு பள்ளியை மேம்படுத்த முகநூல் மூலம் வெற்றி கண்ட ஆசிரியர்

மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி!

"மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி" - திருச்சி மாவட்டம் , தொட்டியம் ஒன்றியம், எம்.களத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் குருமூர்த்தி,         ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப கற்பித்து வருவதால் இவருடைய கற்பித்தல் செயல்பாடுகளைப் பார்த்து அவ்வூரில் தனியார் பள்ளிக்குச் சென்ற பல மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளார்கள். மக்கள்தொகை 440 பேர் மட்டுமே கொண்ட இவ்வூர் பள்ளியில் 26 மாணவர்கள் பயின்று வந்தனர். அதனால் பள்ளியின் மாணவர் சேர்க்கையை உயர்த்த பிற பகுதிகளிலிருந்தும் மாணவர்களை சேர்க்கும் வண்ணம் "மெல்ல கற்கும் மாணவர்களையும் படிக்க வைக்கும் பள்ளி" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து மக்களுக்கு வழங்கினார். அதை முகநூலிலும் பதிவேற்றினார். அதைப் பார்த்து சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு பெற்றோர் இவரை தொடர்புகொண்டு, மூன்றாம் வகுப்பு படிக்கும் தன் மூத்த மகன் கற்றலில் பின்தங்கி உள்ளதாகவும், இதுவரை மூன்று தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தும் கற்றலில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முகநூலில் பார்த்த துண்டு பிரசுரம் தனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். பின்பு அப்பெற்றோரையும் அவர்களின் மகன்களையும் பள்ளிக்கு வரவழைத்து, மூத்த மகனின் கற்றல் நிலையை சோதித்தபோது அம்மாணவனுக்கு ABCD மட்டுமே தெரிந்திருந்தது. தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை.

 

      கணக்கில் ஓரிலக்க கூட்டல் கணக்கு கூட தெரியாமலிருந்ததை அறிந்துகொண்ட ஆசிரியர் குருமூர்த்தி, மூன்று மாதங்களில் தங்கள்  மகனை படிக்க வைத்துவிடுவேன் என உறுதியளித்தபோது அப்பெற்றோர் அகமகிழ்ந்தனர். தற்போது அவர்களுடைய மகன்கள்  இருவருமே தாத்தா , பாட்டியுடன் அவ்வூரிலேயே தங்கி அப்பள்ளியில் படித்து வருகிறார்கள். ( மூத்த மகன் நான்காம் வகுப்பிலும் , இளைய மகன் மூன்றாம் வகுப்பிலும் படிக்கிறார்கள் ). இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களுடைய மகன்களின் கற்றலில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு அப்பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர். அம்மகிழ்ச்சியை முகநூலிலும் பகிர்ந்துள்ளனர்.

       மேலும் எம். களத்தூர் அஞ்சலகத்தில் பணிபுரியும் "பேபி" என்ற உதவியாளர் இப்பள்ளிக்கு தபால் கொடுக்க செல்லும்போதெல்லாம் இப்பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்து , தன் மகளை இப்பள்ளியில் சேர்ப்பதற்காகவே இவ்வூருக்கு குடிபெயர்ந்து வந்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.

       கற்றல் - கற்பித்தல் மட்டுமல்லாமல் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள். தன்னார்வலர்கள் மூலம் பள்ளிக்கு தரை ஓடு பதித்தல், வட்டமேசை மற்றும் நாற்காலிகள், 32' LED TV, ஒலி பெருக்கி, நூலகம் ஆகியவற்றை 

அமைத்துள்ளனர். 

        இப்பள்ளியின் தலைமை ஆசிரியர். திருமதி. சித்ரா அவர்களும் , உதவி ஆசிரியர் குருமூர்த்தியும் பள்ளியின் வளர்ச்சிக்கும் , மாணவர்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்