Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 4 August 2012

அறிவியல் செய்திகள்

கீரை வகைகளில் முருங்கைக் கீரையில் தான் அதிக புரதமும், கலோரிகளும் கிடைக்கின்றன.

வெறும் பச்சை நிறத் துணிதான் லிபியா நாட்டின் தேசியக்கொடி.

ருவாண்டோ நாடு தன் நாட்டு தேசியக் கொடியில் ‘ஆர்’ என்ற எழுத்தை இடம் பெறச் செய்துள்ளது.

ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பாக முட்டையிடும்.

கிளிகளுக்கு பேசும் சக்தி அதிகம் உண்டு.

ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும்.

நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது.

நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன.

தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம்.

பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும்.

23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி.

யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன.

சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.

திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள.

மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை.

தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது.

சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன.

ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார்.

எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது.

பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின்.

விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம்.

1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது.

சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா.

தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.

சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் சீனா, இந்தியா, தைவான்.

கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்குமுந்தைய மம்மியின் செயற்கை உறுப்பு

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை ஆராய்ச்சியாளர் ஜாக்கி பின்ச் எகிப்து நாட்டின் புகழ் பெற்ற மம்மிகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார். அதில் மனித உடலின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள மம்மி ஒன்றின் வலது கால் பெருவிரல் ஒன்று உறுப்பு மாற்று சிகிச்சையின்படி ஒன்றிணைக்கப்பட்டு உள்ளதாக கின்ச் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கார்பன் ரேட்டிங் அடிப்படையில் அதன் காலம் கி.மு. 600 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி பின்ச் கூறுகையில், "3 பங்கு மரத்தாலும் மற்றும் தோலாலும், ஒரு மனிதனின் 40 சதவீத உடல் எடையை தாங்க கூடிய அளவில் அந்த வலது கால் பெருவிரல் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது உலகின் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை பெறுகிறது என்றார். எனினும், இந்த செயற்கை உறுப்பு குறிப்பிட்ட அந்த மனிதனால் பயன்படுத்தப்பட்ட ஒன்றா? அல்லது மம்மியாக மாற்றுவதற்கு என வடிவமைக்கப்பட்டதா-? என்ற அடிப்படையில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றும் அவர் கூறினார். இதுவரையில், சில நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ரோமானிய செயற்கை கால் மிக பழமையான செயற்கை உறுப்பு என்ற பெருமையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 15.2.2011