Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 17 January 2014

மனநோய்க்கு மருந்தாகும் சீரக கசாயம்

சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.

சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

சீரகத்தில் உயர்தர இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ஆக்சிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்த உதவுகிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது.

வயிறு மந்தத்தைப் போக்கும்

உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

மார்பு வலி நீங்க

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு

மனநோய் குணமாகும்

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் குணமடையும்

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

கர்ப்பிணிகளுக்கு கசாயம்

சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து உடல் லேசாகும், வர பிரசவம் எளிதாகும். இது நோய் எதிர்ப்பு சக்தி-

தமிழ் கற்க :

சில சொற்களும் பயன்படுத்தும் விதத்தில் அவற்றின் வேறுபாடும்.

பண்டிகை - வீட்டில் கொண்டாடப்படுவது
விழா - வெளியிடத்தில் கொண்டாடப்படுவது

குழாம் - சிறு கூட்டம்
கூட்டம் - பலர் முறையாகக் கூடியிருப்பது
கும்பல் - முறையின்றிக் கூடுவது

பசுப் பால் - பசுவினது பால்
பசும் பால - பசுமையான பால்

இவன் - இங்கே இருப்பவனை குறிப்பிடுவது
இவண் - இங்ஙணம்

# நான் இத்தனை நாட்களாக பசுப் பால் என்று பயன்படுத்த வேண்டிய இடத்தில் பசும்பால் என்றும், கும்பல் என்று பயன்படுத்த வேண்டிய இடத்தில் கூட்டம் என்றும் தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
Like · ·

சிரிக்க சிந்திக்க

ஒருவர் இறந்து அடக்கம் செய்ய பட்டது..

அவருக்கு இரு மகனும் ஒரு மகளும் உண்டு, இரவில் மகன்கள் ரூமில் சத்தம் அதிகமாக கேட்டதால் மகள் கூர்ந்து கவனித்தாள்..

தம்பி சொன்னான்,
"அண்ணா, நீதான் மூத்தவன் எனவே 2 லட்சத்தை நீயும் மீதி ஒரு லட்சத்தை நானும் எடுத்து கொள்ளுகிறேன்" என்று.

அண்ணா சொன்னார்,
"இல்லைடா தம்பி ஆளுக்கு பாதி ஒன்றரை லட்சத்தை சமமாக எடுத்து கொள்ளுவோம்".

இதை கேட்டதும் தங்க்கை ஓடி வந்து,
"நானும் உங்கள் கூட பிறந்தவள் தானே .. ஆளுக்கு ஒரு லட்சம் என பிரிப்போம்"

சகோதர்கள் சொன்னார்கள்,
"நீ திருமணம் ஆகி போய் விட்டாய், உன் கண‌வன் இதற்கு ஒப்பு கொள்ள மாட்டார் ... வேண்டாம்"

"இல்லை இல்லை சமமாக தான் பிரிக்கணும்" அடம்பிடித்தாள் தங்கை.

உடனே அண்ணன் சொன்னான்,

"சரி ... அப்படியானால் ஆளுக்கு ஒரு லட்சம் என அப்பா வைத்து சென்ற 3 லட்சம் கடனையும் பிரித்து கொள்ளுவோம்" ""

பழைய சாதம்

இன்றைய நவீன மயமான உலகில் பழைய சாதத்தை வீணாக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்த பழைய சாதத்தில் உடலுக்கு தேவையான பலன் இருக்கு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முதல் நாள் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் நாம் சாப்பிடும் இந்த பழைய சாத்தில் தான் பி6 பி12 அதிகமாக இருக்கிது என் கூறுகின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். குறிப்பாக நமது உடலின் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் அதிகமாகி நமது உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்.

ொதுவாக கிராமத்தில் கஞ்சி சாப்பிடும்போது கஞ்சியுடன் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது தான் வழக்கம். சிறிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் வைரஸ் காய்ச்சல் என எந்த ஒரு காய்ச்சலும் நம்மை அணுகாது. பழைய சாதத்தில் என்ன பயன் இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

இரவு வேளையில் தண்ணீர் ஊற்றி வைப்பதால் சாதத்தில் அதிகளவு நல்ல பாக்டீரியாக்கள் உருவாகுகிறது.

இதனை காலை வேளை உணவாக எடுத்துக்கொள்வதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு குடல்புண், வயிற்றுவலி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.. இந்த பணியோடு நின்றுவிடாமல் நார்ச்சத்து, மலச்சிக்கல், பிரச்சனைகளை தீர்த்து உடலை சீராக இயங்கச் செய்கிறது.

உடலை சோர்விலிருந்து மீட்டு சுறுசுறுப்பாக இயங்கச்செய்யும். அதற்காக சூடாக தயாரித்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி சாப்பிடக்கூடாது. முதல் நாள் இரவு மிஞ்சிய சோற்றை எடுத்து நல்ல தண்ணீர் ஊற்றி முடிவிட வேண்டும். மறுநாள் சாப்பிடும் முன் சாதத்தை நன்கு பிழிந்து மோர் சேர்த்து வெங்காய் வைத்து சாப்பிடலாம்.