Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 28 March 2014

ஏழைச் சிறுவன்

ஒரு பணக்காரரின் விலையுயர்ந்த கார் தெருவில் நின்றுகொண்டிருந்தது....
ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்....

அதனை கவனித்த அந்த பணக்காரர் சிறுவனிடம் சென்று,
“என்னடா அப்படி பார்க்குற...? “ என்றார்...

அவன் சொன்னான்,
“ இல்லைங்க சார், கார் அழகா இருக்கு அதான் பார்த்தேன் “ என்றான்....

அவர் சிரித்துக்கொண்டே அந்த சிறுவனிடம்,
“இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது... நல்லா இருக்கா..??” என்றார்..

சிறுவன் வியப்புடன் அவர் சொல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்....

அதனைக்கண்டவர்
“உனக்கும் அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா...?” என்றார்.

சிறுவன் சொன்னான்,
“இல்லை சார்...! அப்படியோர் அண்ணனாக நான் வளர வேண்டுமென்று விரும்புகிறேன் ” என்று...