Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 9 September 2014

டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வு தர வரிசை

டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வு தர வரிசை பட்டியல் வெளியீடு..
            'டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வுக்கான, மாணவர்களின் தர வரிசை   பட்டியலை, மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அடுத்த வாரத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. தமிழகத்தில், 23 நர்சிங் கல்லூரிகள் உள்ளன.

            இதில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 8,200 பேர் வரை விண்ணப்பித்தனர். இதில், 8,101 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு உள்ளன. அடுத்த வாரத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இந்த நிலையில், மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பிரிவு பிரிவு படித்தோர் 6,799 பேர்; நர்சிங் தொழில் பிரிவு படித்தோர் 589 பேர்; இதர பிரிவுகளில் படித்தோர் 713 பேர் என, மொத்தம், 8,101 பேர் இடம் பெற்றுள்ளனர். 'இதுபற்றிய விவரங்களை, tn.gov.in, ttn.health.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு:

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு: நவம்பரில் பிரதான தேர்வு.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியாயின.இதில்,11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த 2013, டிச.1ம் தேதி குரூப்-2 தேர்வை நடத்தியது.
இதில், தொழிலாளர் உதவி ஆய்வா ளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறை யில் உதவிப் பிரிவு அலுவலர், கைத்தறி ஆய்வாளர், கூட்டு றவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிக ளுக்கான 1,047 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 4,98,471 பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப் பட்டது. இதில், 11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு பெற்றவர்கள் பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.இத்தகவல், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா வெளியிட்டுள்ளார் 11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி நடைபெறுகிறது.

மதிப்பெண் சான்று உண்மையா? : ஆன்-லைனில் அறிய வாய்ப்பு!!

மதிப்பெண் சான்று உண்மையா? : ஆன்-லைனில் அறிய வாய்ப்பு!!

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம்,'ஆன்-லைன்' முறையை, விரைவில் கொண்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்குகிறது.
பணியில் சேரும்போது, இந்த சான்றிதழ்கள் முக்கிய ஆவணம். இதன் உண்மை தன்மையை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, மீண்டும் அனுப்பி உறுதி செய்யப்படுகிறது. இது போல்,அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு, ஆயிரக்கணக்கான சான்றுகள் வருவதால், அவற்றை சரி பார்ப்பதில், பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதை தீர்க்க, ஆன்-லைன் மூலம், கல்வி சான்றுகளின் உண்மை தன்மை அறியும் வகையில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கல்வியாண்டுகள் வாரியாக,சான்றிதழ்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மதிப்பெண் சான்றிதழில் உள்ள மாணவர் பெயர், பிறந்த தேதி, கோடு எண் மற்றும் தேர்வு பதிவு எண்களை குறிப்பிட்டு விண்ணப்பித்தால், பதிலை, ஆன்-லைனில் உடனே உறுதி செய்து விடும் வகையில், திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

குரூப்–2 முதல்நிலை தேர்வு முடிவுகள்

1,047 காலி பணியிடங்களுக்கான குரூப்–2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

1,047 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்–2 முதல் நிலை தேர்வுமுடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

குரூப்–2

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு–2–ல்(குரூப்–2) துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர்நிலை–2, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப்பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 பணியிடங்களுக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி தேர்வு நடந்தது.இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 114 நகரங்களில், 2 ஆயிரத்து 269 தேர்வு மையங்களில் நடந்தது. 4 லட்சத்து 98 ஆயிரத்து 471 பட்டதாரிகள் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில், 11,497 பேர் தேர்ச்சி பெற்று, அடுத்தக்கட்ட முதன்மை தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களின் விவரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

11,497 பேர் தேர்ச்சி

குரூப்–2–ல் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான 1,047 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1–ந் தேதி நடந்தது. தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தேர்வு செய்யப்பட்ட 11,497 விண்ணப்பதாரர்களின் பதிபெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைவளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்து தேர்வு நவம்பர் 8–ந் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் மாதம் 8–ந் தேதி நடக்கும் முதன்மை தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள், அடுத்தபடியாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும்.