Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 10 September 2014

உதவியாளர் பணியிடஎழுத்து தேர்வு :

உதவியாளர் பணியிடஎழுத்து தேர்வு : மதிப்பெண் பட்டியல் வெளியீடு - தினமலர்
கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள, உதவியாளர் பணியிடங்களுக்கு, 2012 டிசம்பர், 9ம் தேதி நடந்த, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, கூட்டுறவு மாநில ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய, 2012 டிசம்பர் 9ம் தேதி, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில், எழுத்து தேர்வில் பெறப்பட்ட, மதிப்பெண் அடிப்படையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, விண்ணப்பதாரர் பட்டியல்; வகுப்பு வாரியான குறைந்தபட்ச மதிப்பெண்; தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், நேர்முகத் தேர்வு அட்டவணை, ஆகியவை, http;//www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை

புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை - தினமலர்
புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும்' என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இதில் 100 பேர் வரை 'ஆப்சென்ட்' ஆனதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில் 'ஆப்சென்ட் ஆனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சம்பந்தபட்டவர்கள் 'ஆப்சென்ட்' ஆனதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்' என

தெரிவித்தது. இதற்கிடையே 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை புதிய ஆசிரியர் பணியில் சேர இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும் எனவும் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

தகுதித் தேர்வு விவகாரம்

தகுதித் தேர்வு விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஆதரவு 29ம் தேதி உண்ணாவிரதம் - தினகரன்
"பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு "

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யும் முறையை அமல்படுத்த ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் ஆசிரியர்களின் போராட்டம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று தஞ்சாவூரில் நடந்தது. சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல குளறுபடிகள் உள்ளன. இதனால் பல ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போர் வேலை கிடைக்காமல் உள்ளனர். தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் அதேநிலைதான்.

இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. இதை தமிழக முதல்வர் பரிசீலித்து யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்கனவே இருந்த பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

கடந்த 2010ம் ஆண்டில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட 6000 பேருக்கும் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்று நியமனம் பெற்றவர்கள் போக மீதம் உள்ள 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மாணவர்களின் விடைத்தாளில் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கக்கூடாது

மாணவர்களின் விடைத்தாளில் ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கக்கூடாது - தினகரன்
மாணவர்களின் விடைத்தாளில் மிக நன்று, மோசம் என்று கருத்து தெரிவிக்கக்கூடாது என ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரம் குறித்து தேர்வு வைத்து பரிசோதிக்கப்படுகிறது. இதனால் வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்கள் மாணவர்களை சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன்படி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மிக நன்று, சராசரி மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நன்று, குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கவலை அளிக்கிறது என விடைத்தாளில் எழுதுவது வழக்கம்.

இதேபோல், அறிவியல் செய்முறை நோட்டு புத்தகங்கள் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் வரை படங்களை குறித்தல் போன்றவற்றில் ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பது பள்ளி அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்படும் ஆசிரியர்களின் கருத்துக்கள் மாணவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்படி ‘மிக நன்று’ அல்லது ‘நன்று’ என குறிப்பிட்டால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, ‘மோசம்’ அல்லது ‘மிக மோசம்’ என குறிப்பிட்டால், மாணவர்கள் நாள் முழுவதும் கவலைப்படுவதுடன் படிப்பில் கவன சிதறல் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற எதிர்மறையான குறிப்புகளை மாணவர்களுக்கு அளிக்கக்கூடாது என கல்வியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய உயர்நிலை கல்வி ஆணையத்தின் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்களின் கருத்துக்களை தெரிவிப்பதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப மிக நன்று, நன்று, மோசம், கவலை அளிக்கிறது என ஆசிரியர்கள் குறிப்பு எழுதி வந்தனர். வருங்காலங்களில் ஆசிரியர்கள் இதுபோன்று எழுதக்கூடாது. கருத்து தெரிவிக்க வேண்டாம் மாறாக மாணவர்களை கவரும் வகையில் நட்சத்திரம், ஐந்து நட்சத்திரம், சித்திரங்கள் (கார்ட்டூன்) போன்றவற்றை குறிப்பிட்டு ஊக்குவிக்க வேண்டும். இதனால் ஒரு தேர்வில் சரியாக படிக்காத மாணவர்கள் கூட மறு தேர்வில் நன்றாக படித்து விடையளிக்க முடியும்.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மத்தியில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை நீக்கலாம். இதேபோல் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாமல் தடுக்கலாம். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.