Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 18 September 2014

VERY EASY METHOD

MIND TRICK TO REMEMBER PLANET NAME IN SEQUENCE >
** MY VERY EASY METHOD JUST SPEEDS UP NAMES **

நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு
                 நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டில்லியில் நடந்த, கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், முதல்கட்ட விவாதம் நடந்துள்ளது.
                  கடந்த 15ம் தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில், அனைத்து மாநிலங்களில் இருந்தும், கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குறிப்பாக, ஆசிரியர் கல்வி நிறுவன அதிகாரிகள், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.இக்கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை, அந்தந்த மாநில ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வருவது; பி.எட்.,
எம்.எட்., படிப்பை, இரு ஆண்டுகளாக அதிகரிப்பது; ஆராய்ச்சி திட்டங்களை வலுப்படுத்துவது; இடைநிலைக் கல்வி வகுப்புகளில், தொழிற்கல்வி வகுப்புகளை அறிமுகப்படுத்துவது ஆகிய, நான்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில், பி.எட்., எம்.எட்., படிப்புகளை, இரு ஆண்டுகளாக்கும் திட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, பலவகை ஆசிரியர் கல்வி படிப்புகளை, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.தமிழகத்தில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் என, தனித் துறை இயங்கி வருகிறது. இதன் கீழ், இரு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த துறையின் கீழ், 500 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இரு ஆண்டுகளில், அனைத்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலையின் கீழ் சென்றுவிடும். அப்போது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம், மூடப்படும் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஓரிரு ஆண்டுகளில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஆசிரியர் பல்கலையின் கீழ் வந்துவிடும். 'டேட்டா என்ட்ரி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர்' போன்ற, எளிய வகை தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை, 8, 9ம் வகுப்புகளிலேயே அறிமுகப்படுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது' என்றார்

64 வகையான பதிவேடுகள்;

64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்
              அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல், உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.
              தமிழகத்தில் ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை செலவிடுகிறது. ஆனால், அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், பள்ளி பராமரிப்புக்கான பள்ளி பதிவேடு, ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு, மாணவர் வருகை பதிவேடு, ஊதிய பதிவேடு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு பதிவேடு, வாசித்தல் திறன் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, இலவச பொருள் வழங்கும் பதிவேடு, மாணவர் திறன் பதிவேடு, தணிக்கை பதிவேடு, காலநிலை அட்டவணை என 64 வகையான நோட்டுகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி பராமரிக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகளை, ஆண்டுக்கு மூன்று முறை, வாடகை வாகனம் பிடித்து, கொண்டு வரவேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் கேட்டபோது, தலைமை ஆசிரியர்களுக்கு வெளியே சொல்ல முடியாத சிரமங்கள் நிறைய உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், என்றனர்.

கணித விளையாட்டு!

கணித விளையாட்டு!
62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on
======
4 + 9 + 1 +3  = 17
4913  = 173

=======
13 + 53 + 33 = 153 

கார்ப்ரேகர் எண்

தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை   6174         என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு   நிலையில் 6174     என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.
உதாரணம்;
எடுத்துக்  கொண்ட  எண்கள்;8,7,9,6
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;8730
சிறிய எண்;  0378
வித்தியாசம்;8352
8,3,5,2,இவற்றின் பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174
ஒரு  சில  எண்களுக்கு ஒரே  முறையிலும் ,வேறு  சில  எண்களுக்கு  நான்கைந்து  தடவைகளுக்குப்  பின்னும்  இந்த  6174  என்ற  எண்  வரும் .

அழகான பெருக்கல்

கீழேதரப்பட்டுள்ள பெருக்கல்களில் ஒருசிறப்பம்சம்உள்ளது.விடையில்வரும் எண்கள் எல்லாம் ஒரே எண்கள் திரும்பவும் வருகின்றன.அதுவும் வரிசையாக வருகின்றன.(same figures in the same order starting in a different place as if written round the edge of a circle)
142857 X2= 285714
142857 X3 =428571
142857X4 =571428
142857 X5 =714285
142857 X6=857142

அதிசய பெருக்கல்

கீழே உள்ள பெருக்கல்களைப் பாருங்கள் இடது புறமும் வலது புறமும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்கள் இடம் பெற்றுள்ளன.
51249876 X3=153749628
32547891X6=195287346
16583742X9=149253678

கீழே உள்ள வித்தியாசமான பெருக்கலைப் பாருங்கள்.இடது புறத்தில் உள்ள எண்கள் வலது புறத்தில் அப்படியே திரும்பி இருக்கின்றன.
10989 X 9 =98901.

விந்தை எண்

2519  ஒரு விந்தையான எண்
இதை 9   ஆல் வகுத்தால் 8   மீதி வரும்.
இதை 8    ஆல் வகுத்தால்  7    மீதி வரும்

இதை7    ஆல் வகுத்தால்6    மீதி வரும்
இதை 6    ஆல் வகுத்தால் 5    மீதி வரும்
இதை5    ஆல் வகுத்தால்4    மீதி வரும்
இதை4    ஆல் வகுத்தால்3    மீதி வரும்
இதை3    ஆல் வகுத்தால் 2   மீதி வரும்
இதை2    ஆல் வகுத்தால்1    மீதி வரும்

அதிசய எண்

ஒரு அதிசய எண்;12345679
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை ஒன்பதால் பெருக்கி வரும் விடையை இந்த அதிசய எண்ணுடன் பெருக்குங்கள்.விடை நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணின் வரிசையாக இருக்கும்.
1x9x12345679=111111111
2x9x12345679=222222222
3x9x12345679=333333333
4x9x12345679=444444444
5x9x12345679=555555555
6x9x12345679=666666666
7x9x12345679=777777777
8x9x12345679=888888888
9x9x12345679=999999999

நினைத்த எண் எது?

ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.
அதனை தொடர்ந்து அதே எண்ணை மீண்டும் எழுதி ஆறு இலக்க எண்ணாக  ஆக்குங்கள்.
அதை ஏழு கொண்டு வகுங்கள்.
வந்த விடையை பதினொன்றால் வகுங்கள்.
கிடைத்த எண்ணை பதிமூன்றால் வகுங்கள்.
இப்போது கிடைத்த விடை நீங்கள் முதலில் நினைத்த எண்.சரிதானா?
உதாரணம்;
மூன்று இலக்க எண்   =               369
மீண்டும் எழுதினால்   =               369369
ஏழு கொண்டு வகுத்தால்=         52767
பதினொன்றால் வகுத்தால் =   4797
பதிமூன்றால் வகுத்தால்      =   369

அதிசய சதுரம்

இது   ஒரு   அதிசய சதுரம்.இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ், குறுக்காக  எப்படிக் கூட்டினாலும் 264   வரும்.

          96   11   89   68
          88   69   91   16
          61   86   18   99
          19   98   66   81

அது மாத்திரமல்ல.இந்த சதுரத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப் பாருங்கள்.

           18   99   86   61
           66   81   98   19
           91   16   69   88
           89   68   11   96

இப்பொழுதும் இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ்,குறுக்காக கூட்டிப் பாருங்கள்.அதே விடை தான் வரும்.264