Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 19 September 2014

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் மதுரை மனோன்மணியம் சுந்தரனார்

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கூடுதல் தேர்வாணையர் மாதவன் தெரிவித்துள்ளதாவது:

இப்பல்கலை தொலைநிலை கல்வி மூலம் மே 2014ல் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.முடிவு அறிவிக்கப்பட்ட பாடப் பிரிவுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், உரிய விண்ணப்ப படிவத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, கட்டணத்துடன் 'கூடுதல் தேர்வாணையர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, நெல்லை-12' முகவரிக்கு செப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவு வெளியாகாத பாடப் பிரிவுகளுக்கு அவற்றின் முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

டிப்ளமோ நர்சிங் படிப்பில் காலி இடம் இல்லைஇன்று மருத்துவம் சார் படிப்பு கலந்தாய்வு

டிப்ளமோ நர்சிங் படிப்பில் காலி இடம் இல்லைஇன்று மருத்துவம் சார் படிப்பு கலந்தாய்வு
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முடிந்தது. எல்லா இடங்களும் நிரம்பி விட்டதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்று, மருத்துவம் சார் பட்டப் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.

தமிழகத்தில், 23 அரசு நர்சிங் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, 8,101 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் 15ம் தேதி துவங்கியது.நேற்று, நான்காவது நாளாகவும் கலந்தாய்வு நீடித்தது. நேற்று மட்டும், 514 பேர் இட ஒதுக்கீடு பெற்றனர். நேற்று மாலை, கலந்தாய்வு முடிந்த நிலையில், மொத்தம் இருந்த 2,000 இடங்களும் நிரம்பி விட்டன; காலி இடங்கள் ஏதும் இல்லை என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் இன்று துவங்குகிறது. இந்த கலந்தாய்வு, 26ம் தேதி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் படிப்பு: இக்னோ அறிவிப்பு

சான்றிதழ் படிப்பு: இக்னோ அறிவிப்பு
:மதுரை இக்னோ கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் குமரன் தெரிவித்துள்ளதாவது:
இக்னோவில் சட்டம் சார்ந்த சான்றிதழ் படிப்பிற்கான தேர்வு டிசம்பரில் நடக்கிறது.
மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செப்., 30க்குள், ஒருங்கிணைப்பாளரின் கையொப்பம் பெற்று மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கல்வி மைய ஒருங்கிணைப்பாளரை 94431 26668 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'

கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'தினமலர்' செய்தி எதிரொலி
மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல்
நடந்தது.
அப்போது மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட உபரி(சர்பிளஸ்) ஆசிரியர்களை 'பணி நிரவல்' அடிப்படையில் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டம் தோறும் கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.இக்கூடுதல் இடங்களில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டனர்.
மதுரையில் 29 ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் பணியில் சேர்ந்த பின், நிதித்துறை ஒப்புதல் கிடைக்காததால், ஜூலை, ஆகஸ்ட் மாத சம்பளம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், கூடுதல் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்களாக அடுத்தடுத்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கல்வித் துறையின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்

கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்
பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:டி.என்.பி.எஸ்.சி., மூலம் 213 தட்டச்சர்கள், பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை பணி நியமனம் செய்வதற்கான, 'ஆன் - லைன்' கலந்தாய்வு, 20ம் தேதி (நாளை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடக்கிறது.வேலைக்கு தேர்வு பெற்றவர்கள், தங்கள் முகவரி சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குச் சென்று, கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.கலந்தாய்வுக்கு, ஒரு மணி நேரம், முன்னதாக வர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., வழங்கிய துறை ஒதுக்கீட்டு உத்தரவு கடிதம், கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை, தவறாமல் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.