Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 21 November 2014

2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு

2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு
           அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக  அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது.
          2015-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஜனவரி 1 (வியாழன்) ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 4 (ஞாயிறு) மீலாதுநபி
ஜனவரி 15 (வியாழன்) பொங்கல்
ஜனவரி 16 (வெள்ளி) திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 (சனி) உழவர் திருநாள்
ஜனவரி 26 (திங்கள்) குடியரசு தினம்
மார்ச் 21 (சனி) தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்ரல் 1 (புதன்) வங்கிகள் கணக்கு முடிவு
(வணிக-கூட்டுறவு வங்கிகள்)
ஏப்ரல் 2 (வியாழன்) மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 3 (வெள்ளி) புனித வெள்ளி
ஏப்ரல் 14 (செவ்வாய்) தமிழ்ப் புத்தாண்டு- அம்பேத்கர் பிறந்த நாள்
மே 1 (வெள்ளி) மே தினம்
ஜூலை 18 (சனி) ரம்ஜான்
ஆகஸ்ட் 15 (சனி) சுதந்திர தினம்
செப்டம்பர் 5 (சனி) கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 17 (வியாழன்) விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 24 (வியாழன்) பக்ரீத்
அக்டோபர் 2 (வெள்ளி) காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21 (புதன்) ஆயுத பூஜை
அக்டோபர் 22 (வியாழன்) விஜயதசமி
அக்டோபர் 23 (வெள்ளி) மொகரம்
நவம்பர் 10 (செவ்வாய்) தீபாவளி
டிசம்பர் 23 (புதன்) மிலாதுநபி
டிசம்பர் 25 (வெள்ளி) கிறிஸ்துமஸ்

பகுதிநேர ஆசிரியர் சம்பளம்:ரூ.7,000 ஆக உயர்த்தி உத்தரவு

பகுதிநேர ஆசிரியர் சம்பளம்:ரூ.7,000 ஆக உயர்த்தி உத்தரவு
          பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக, உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

              அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், கடந்த, 2011ல், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், உடற்பயிற்சி, இசை ஆகியவற்றிற்கு, 16,549 பகுதி நேர ஆசிரியர், 5,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.குறைந்த சம்பளம், நீண்டதுார பயணம் உள்ளிட்ட பிரச்னைகளால், 2,000த்திற்கும் மேற்பட்டோர், ராஜினாமா செய்து விட்டனர். 2,000 பணியிடம், காலியாக உள்ளது. தற்போது, 12 ஆயிரம் பேர் மட்டுமே, பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கான சம்பளத்தை, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அமலுக்கு வரவில்லை.இதுகுறித்து, சில நாட்களுக்கு முன், அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும், கல்வித்துறை செயலர், சபிதாவிடம், கோரிக்கை மனு கொடுத்தனர்.அதையடுத்து, சபிதா வெளியிட்ட உத்தரவில், 'அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும், கடந்த ஏப்., முதல், 7,000 ரூபாய் சம்பளம் என கணக்கிட்டு, நிலுவை தொகையுடன் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்...

சிகரெட் இல்லாமல் ஒருவரால் வாழமுடியும்...
ஆனாலும், சிகரெட் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.
மதுவில்லாமல் ஒருவரால் வாழமுடியும்...
ஆனாலும், உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.
மொபைல் இல்லாமலும் ஒருவர் வாழமுடியும்...
ஆனாலும், மொபைல் உற்பத்தியாளர் பணக்காரராக இருக்கிறார்.
உணவில்லாமல் எவரும் வாழமுடியாது!...
ஆனாலும், உணவு உற்பத்தியாளர்களான விவசாயிகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்...