Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 14 December 2014

பதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டிப்ஸ்

பதட்டமின்றி பரிட்சை எழுத மாணவ, மாணவிகளுக்கு சில டிப்ஸ்
          பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வர கூட வாய்ப்புள்ளது. என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும் வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே இருப்பார்கள். இதுவே, பரீட்சை நன்றாக எழுத முடியாமல் போய்விடுகிறது.

           மேலும், பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரம் வந்துவிட்டது. அதுமட்டுமின்றி குளிர் காலமும் ஆரம்பித்துவிட்டது. சில மாணவர்கள் தேர்வு நேரங்களில் மட்டுமே விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலருக்கும் மற்ற நாளை விட தேர்வு நேரத்தில் தான், எங்கிருந்து இந்த தூக்கம் வருமோ தெரியாது. ஒரு வருட காலமாக ஆசிரியர் நடத்திய பாடங்கள் என்றாலும், சிலருக்கு பரீட்சைக்கு முதல்நாள் உட்காந்து விடிய விடிய படித்தால், தான் படித்த மாதிரி இருக்குமாம். சிலர் தேர்வு அறைக்கு செல்லும் வரை புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டும் மளமளவென படித்து ஒப்பித்துக் கொண்டு இருப்பார்கள். இப்படி இருப்பதனால் வீணாக மனதில் படப்படப்பு தான் ஏற்படுகிறது. முதலில் மாணவர்கள் தங்களால் நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்பதை நம்புங்கள். இதுவரை படித்த பாடங்களை மட்டும் ரிவைஸ் பண்ணினால் போதும்.
தேர்வு நேரத்தில் படிப்பை விட உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சத்தான உணவுகளை எடுத்து கொள்ளலாம். பசியுடன் படிக்க வேண்டாம். அதே சமயம் வயிறு முட்ட உணவுகளை உட்கொள்ளவும் கூடாது. பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக எண்ணெயில் செய்த உணவுகளை சாப்பிடவே கூடாது. இட்லி, தோசை, காய், பழ வகைகள் சாப்பிடலாம். இப்படி கட்டுப்பாடாக உணவுகள் சாப்பிட்டாலே, மனது லேசாகிவிடும். தேர்வு எழுதும் போது உற்சாகமாக இருக்கும். சில மாணவர்களின் பெற்றோர்கள் தனது குழந்தையின் படிப்பில் அக்கறை காட்டுவது என்பது சந்தேகம் தான். அப்படி இருக்காமல் தேர்வு நேரத்தில் உங்கள் குழந்தையோடு நீங்களும் கொஞ்சம் தயாராவது நல்லது. தேர்விற்காக படித்து இருக்கும் நேரத்தில், உங்கள் வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அல்லது உறவினர்கள் வந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களை தவிர்ப்பது நல்லது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்க சொல்லிவிட்டு அவர்கள் டி.வி. பார்ப்பது அல்லது போனில் பேசிக் கொண்டு இருந்தால், மாணவர்களின் மனம் மாறி படிக்க முடியாமல் போய்விடும்.
தேர்வுக்கு முதல் நாளே பேனா, பென்சில் போன்ற பொருட்களை கவனமாக எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக தேர்வு அட்டவணையை வீட்டு சுவரில் ஒட்டி வைக்கவும். சிலர் இன்றைக்கு என்ன பரீட்சை என்பதையே மறந்து, வேறு பாடம் படித்து செல்பவர்கள் பலருண்டு. பரீட்சை நேரத்தில் மட்டும் மாணவர்கள் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. காலையில் எழுந்து ஒருமுறை படித்து பார்க்கலாம். நண்பர்கள் சொன்னார்கள், என அந்த நேரத்தில் படிக்காத ஒரு கேள்வியை படிக்க தொடங்க வேண்டாம். அந்த வேள்வி வருமோ? வராதோ என்ற குழப்பத்துடன் படிக்கும்போது, ஏற்கனவே படித்த கேள்விகள் கூட மறக்க வாய்ப்புள்ளது. தேர்வு அறைக்கு முன்னதாக செல்ல வேண்டும். தேர்வு மையத்திற்கு வந்த பிறகு சிறிது நேரம் புத்தகத்தை திருப்பி பார்க்கலாம். நீங்கள் படித்த கேள்வியையே, வேறு மாதிரி கேட்டு இருப்பார்கள். அதைப் பார்த்து பதற்றமடைய வேண்டாம். நமது புத்தகத்தில் உள்ள கேள்வியாகத்தான் இருக்கும் என நம்பிக்கையுடன் பரீட்சையை எழுத வேண்டும்

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!
         சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.

1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது
சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளை யோசித்து கவலைக்கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்!
2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்;
நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும், நம்முடைய செயல்கள் சரியான இலக்கை அடைய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். நம்முடைய எல்லா பிரச்சனைகளை பற்றி கவலை அடைவதே நம மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ளது.
3) போராடுங்கள், விட்டு கொடுக்க கூடாது!
ஒரு சில நேரங்களில் நமக்கு எதிராக எல்லா செயல்களும் நடப்பது போல் அமையும். அந்த நேரத்தில் மனதை தளரவிடாமல் போராடி நமது இலக்கை அடைய வேண்டும். இந்த மனப்பக்குவமே சாதனையாளர்கள் மற்றும் சாதனையற்றவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.
4) மற்றொரு கோணத்தில் பாருங்கள்!
ஒரு பிரச்சினை நம்மை சூழ்ந்திருக்கும்போது, சில நேரங்களில் அது பெரியதாக தோன்றும். அந்த நேரத்தில் அந்த பிரச்சனைகளிலில் இருந்து விலகியிருந்து மற்றொரு கண்ணோட்டங்களில் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானதாகும். எனவே பிரச்சனைகள் எழும்போது நாம் அமைதியாக தூங்கி எழுந்தால் அந்த பிரச்சனைகள் மிக எளியதாக தோன்றும். மற்றொரு கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை பார்ப்பதன் மூலம் புதிய கோணத்தில் அதற்கொரு முடிவு கிடைக்கிறது.
5) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; தயாராக இருக்க வேண்டும்.
சிறந்த வாசிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால், மன அழுத்த காலங்களில் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
6) அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
நீங்கள் ஓய்வெடுக்கவும் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கை உரியவர்களிடம் உங்களின் நேரத்தை ஒதுக்கி செலவிடுவது, நீங்கள் ஓய்வெடுத்து கிடைப்பதைவிட மிக நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
7) உறங்குதல். உடற்பயிற்சி, தியானம்
உங்களின் உணர்வுசார் நுண்ணறிவை அதிகரித்து மூளையை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மன நிலைகளை நிர்வகிப்பதில் தூக்கம் முக்கியமானதாகும். உங்களுடைய சுய கட்டுப்பாடு, கவனம், மற்றும் நினைவகம் ஆகியவை உங்களின் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது, உங்களின் கண்களை மூடிக்கொண்டு, உட்கார்ந்து, மூச்சு சுவாச பயிற்சியை மேற்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி அடையும்.
8) தாழ்வாக நினைப்பதை நிறுத்தவும்
நம்மளை பற்றி நாமே எதிர்மறையாக அல்லது தாழ்வாக நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏதாவது தவறாக சென்றாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இதோடு உலகம் முடிவதில்லை. எப்போதும் உங்களை உயர்த்தியே எண்ணுங்கள்.