Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 20 December 2014

தொகுப்பூதிய கணினி பயிற்றுநர் நியமனம் ரத்து

தொகுப்பூதிய கணினி பயிற்றுநர் நியமனம் ரத்து

நடப்பு கல்வி ஆண்டில் (2014-2015) அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி பயிற்றுநர்களை தேர்வுசெய்ய சற்று காலம் ஆகும் என்பதால் அதுவரையில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக டிசம்பர் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், 652கணினி பயிற்றுநர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் தொகுப்பூதிய நியமனம் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா இதை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 15-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு

பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு

பாலிடெக்னிக்குகளுக்கான பாடத் திட்டத்தை வருகிற 2015-16-ஆம்கல்வியாண்டில் மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறன், செய்முறைப்பயிற்சி ஆகியவற்றை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான பாடத் திட்டம் வரும் 2015-16-ஆண் கல்வியாண்டில் மாற்றியமைக்கப்பட உள்ளது.முதல் கட்டமாக, முதலாம் ஆண்டு பாடத் திட்டம் தலைசிறந்த வல்லுநர் குழுவால் வரையறுக்கப்பட்டு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ற்ங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், தொழில்துறை மாணவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை dote.mscheme@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக் தேர்வு முடிவு 22ல் வெளியீடு.

பாலிடெக்னிக் தேர்வு முடிவு 22ல் வெளியீடு.

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம்இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய அக்டோபர் 2014 பட்டயத் தேர்விற்கான முடிவுகள் www.tndte.com மற்றும் http://intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் நாளை மறுதினம் (22ம் தேதி) வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்திவைப்பு

கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்திவைப்பு

தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புதாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு டிசம்பர் 24 முதல் 30 வரை மாநிலம் முழுவதும் 6 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரைப் பட்டியல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து வந்த கடிதத்தின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாற்றப்பட்ட தேதிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் எனவும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு.

மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு.

புதுடில்லி: கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,மாணவர்களின் பலத்தை, 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க,மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், லோக்சபாவில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அதற்காக, அனைத்து மாணவர்களுக்கும், என்.சி.சி., பயிற்சி கொடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதையடுத்தே, மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை பிரிவுகளில், 10 முதல் 12 சதவீதம் பேர், என்.சி.சி.,யிலிருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர். இதை அதிகரிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்.சி.சி., படைப்பிரிவுகளில், 26 சதவீதம் பேர் பெண்கள். அடிப்படை வசதிகள் கிடைப்பதை பொறுத்து, எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளில், என்.சி.சி.,யை வரம்புக்கு உட்பட்டு கட்டாயமாக்குவது குறித்து, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு, பாரிக்கர் கூறினார்.