Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 25 December 2014

கற்பித்தலில் ஆசிரியர்களின் புதிய உத்திகளை பதிய வேண்டுகோள்

கற்பித்தலில் ஆசிரியர்களின் புதிய உத்திகளை பதிய வேண்டுகோள்

பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2012 முதல் பள்ளிக் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை மேலும் வலுப்படுத்த வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் மேம்படுத்துவதற்காகவோ, மாணவர்களின் முழுமையான திறன் வளர்ச்சிக்காகவோ, பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவோ ஏதேனும் புதிய உத்திகளை செயல்படுத்தியிருப்பார்கள்.அந்த உத்திகளை மற்ற ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்ள பள்ளிக் கல்வித் துறைதிட்டமிட்டுள்ளது. ஆசிரியர்கள் இதுபோன்ற உத்திகளை வெளிப்படுத்த இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (tnscert.org/innovation) பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலும் இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, 9942173355 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TRB- கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள்

TRB- கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும்.
ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

181 வனப் பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமனம்

181 வனப் பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமனம்

தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள தாக மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வனத்துறையில் வனவர் (ஃபாரஸ்டர்), வன காப்பாளர் (ஃபாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (ஃபாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்ய தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வு வாரியம் இருப்பதைப் போல வனத் துறை ஊழியர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற புதிய தேர்வு வாரியத்தை தமிழக அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்வு வாரியம் மூலமாக முதல்முதலாக 165 வனவர்களும், அரசு ரப்பர் கழகத்துக்கு 16 கள உதவியாளர்களும் (மொத்தம் 181 காலியிடங்கள்) தேர்வு செய் யப்பட இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மாநில வன சீருடை பணியாளர் தேர்வுக்குழு வெளி யிட்டுள்ளது. பிஎஸ்சி, பி.இ. பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக் கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் எழுத்துத் தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்கு உடல்திறன் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் விற்பனை செய் யப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பம் வழங்கப்படும் தபால் அலுவலகங்கள், தேர்வு முறை, பாடத்திட்டம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங் களை தமிழக அரசின் வனத்துறை இணையதளத்தில் (www.forests.tn.nic.in) தெரிந்து கொள்ளலாம் என்று மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித் துள்ளது.

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?

புதிதாக ரேசன் கார்டு பெறுவது எப்படி ?
☉புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

☉குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.
மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

☉விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

☉ விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
( விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம். )

தேவையான ஆவணங்கள் :

1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

☉மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

☉ புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

தபால்காரர், தபால் காப்பாளர் தேர்வு:

தபால்காரர், தபால் காப்பாளர் தேர்வு: இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியீடு
            தபால்காரர், தபால் காப்பாளர் (மெயில் கார்டு) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.

             இதுகுறித்து தமிழக அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவர் டி.மூர்த்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சலக கோட்டம், அஞ்சல் பிரிப்பக கோட்டங்களில் 797- தபால்காரர், 9-தபால் காப்பாளர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழக அஞ்சல் வட்டத்தால், நவம்பர் 15-ஆம் தேதி காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கான தேர்வு டிசம்பர் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

இந்தத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு www.dopchennai.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தேர்வர்கள் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கான இடமும், நேரமும் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்2 காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு:

குரூப்2 காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு
               தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர் மற்றும் நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கான எழுத்து தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 29ம் தேதி நடத்தியது.

                  இத்தேர்வு தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிராட்வே பேருந்து நிலையம் அருகே உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 29ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலருக்கான (2013-14) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்

நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்
          மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித் துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.

              தமிழகத்தில் 2007ல் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு தற்போது மாவட்ட கல்வி அலுவலருக்கான (டி.இ.ஓ.,) பதவி உயர்வு பேனல் தயாரிக்கப்படுகிறது. மாநில அளவில் 600 பேர் வரை இந்த பேனலில் உள்ளனர். தகுதியுள்ள தலைமையாசிரியர்கள் பெயர்களை பேனலில் சேர்க்க தற்போது டி.இ.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில் டி.இ.ஓ., ஆக விருப்பமா அல்லது மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியராக விருப்பமா என முன்கூட்டி தெரிவிக்க வேண்டும் எனவும் டி.இ.ஓ., பதவி உயர்வு கோரியவர் அவர் தலைமையாசிரியராக பணிபுரிந்த காலத்தில் இருந்த டி.இ.ஓ.,க்கள் வழங்கும் நற்சான்று இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல டி.இ.ஓ.,க்கள் பணி ஓய்வு பெற்று சென்றதால் அவர்களை தேடி தலைமையாசிரியர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர்.உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:2007 முதல் 2014 வரை ஒரு தலைமையாசிரியர் பல டி.இ.ஓ.,க்களின் கீழ் பணியாற்றியிருக்கலாம். அவர்களில் பலர் தற்போது ஓய்வு பெற்று எங்கு இருக்கிறார்கள் என தெரியாது. அவர்களை தேடி பிடித்து நற்சான்று பெறுவது கடினமான விஷயம். அவர் பணியாற்றிய காலத்தில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் குறித்து அவர் அளித்திருக்கும் நற்சான்றை அதிகாரிகள் தற்போது ஏற்றுக்கொள்ள வேண்டும். 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டு பேனலுக்கு தகுதியானவர்களிடமும் தற்போதே விருப்ப பதவி உயர்வு கேட்டிருப்பதை பரிசீலிக்க வேண்டும் என்றார்.

பாஸ்போர்ட்தாரர்களுக்கு சென்னையில் 27ம் தேதி சிறப்பு முகாம்

பாஸ்போர்ட்தாரர்களுக்கு சென்னையில் 27ம் தேதி சிறப்பு முகாம்
          கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில்  வரும் 27ம் தேதி நடக்கிறது. கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள், ஒட்டப்பட்ட புகைப்படம் கொண்ட பாஸ்போர்ட்டுகள் சர்வதேச அளவில் கடந்த மாதம்  24ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

          இத்தகைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை வெளிநாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி  மறுப்பதுடன் அத்தகையவர்களுக்கு விசாவும் வழங்க மறுக்கிறது. எனவே, குறிப்பிடப்பட்ட அந்த தேதியையும் தாண்டி கையினால் எழுதப்பட்ட  பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் வேறு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

           அதேபோல, பாஸ்போர்ட் காலாவதியாக 6 மாதம் இருக்கும் பட்சத்தில் சர்வதேச பயணம் செய்யும் பாஸ்போர்ட்தாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை கட்டாயம்  புதுப்பிக்க வேண்டும். மேலும், சில நாடுகள் பாஸ்போர்ட்டில் இரண்டு பக்கங்களுக்கும் குறைவாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, சர்வதேச  பயணிகள் வெளிநாட்டு பயணத்திற்கு முன் தங்கள் பாஸ்போர்ட்டை சோதித்து கொள்வதுடன், குறைவான பக்கங்கள் இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட்டை  புதுப்பித்துக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கு தொடர் பயணம் மேற்கொள்பவர்கள் 64 பக்கங்கள் கொண்ட “ஜம்போ“ பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து  பெற்றுக்கொள்ளலாம்.

கையினால் எழுதப்பட்ட பாஸ்போர்ட், காலாவதியாக 6 மாதம் மற்றும் அதற்கும் குறைவாக இருக்கும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், இரண்டு மற்றும்  அதற்கும் குறைவான பக்கங்களே உள்ள பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. இந்த  பாஸ்போர்ட் சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நடக்கிறது. இதற்கு, நேற்று முதல்  விண்ணப்பம் தொடங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கட்டணம்

தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
          தனியார் கல்லூரிகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

           விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வமணி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,

உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது.

அதில், பாலிடெக்னிக் கல்லூரிகள் விடுபட்டன. எனவே, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கட்டண நிர்ணயக் குழு அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைத்து, கடந்த மாதம் 18-ஆம் தேதி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டணம் தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரைகள் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற அரசு துறைகள் தயாராக உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC

TNPSC : அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக தேர்வு முடிவுகள் அமையட்டும்
          தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர்.அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.

        இத்தேர்வில், எழுத்துத் தேர்வு முடிந்து, அதில் தேர்வு பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு உண்டு என்பதால், அதிக ஆர்வம் இருக்கலாம்.தவிரவும், 'அரைக்காசு என்றாலும் அரசு வேலை' என்ற பழைய தமிழ் பழமொழி, எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் மனதில் நிலைத்து நிற்கிறது.இத்தேர்வு முடிவுகள், இன்னும் மூன்று மாத கால அவகாசத்தில் வெளியாகும். வழக்கப்படி உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் அடுத்த கட்டமாக அமையும்.இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் உட்பட சில பதவிகள் கொண்ட இந்த குரூப் - 4 பணியாளர்களுக்கு, மாதச் சம்பளம் முதலில், 17 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பணியும் நிரந்தரமாகும்.இத்தேர்வுக்கு, கல்வி அடிப்படை வரம்பு, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முன்னணி யில் இருக்கிறது. ஆகவே, பட்டதாரிகள், மற்ற தொழிற்கல்வி, கணினி கல்வி படித்த பட்டதாரி கள், அரசு வேலை என்பதால், ஆர்வமாக முயற்சித்திருக்கலாம். இத்தேர்வில், பெண்கள் ஆர்வமாக பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்கது.இனி, விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயிரக்கணக்கானோர், கூடுதல் சதவீத மதிப்பெண் பெற்றோர் வரிசையில் இடம்பெற்று, கடைசி கட்ட பணியாளர் தேர்வு பரபரப்பாக அமையும்.

இன்று, அரசு நிர்வாக நடைமுறைகள் அதிகமாக மாறி, பணியாளர்கள் தங்களது பணியில் புதிய நடைமுறைகளை பின்பற்றியாக வேண்டிய நிலை உருவாகி வருகிறது.குறிப்பாக, உயர்மட்ட மேலதிகாரிகள் அதிக அளவில் பணி நேரத்தை செலவழித்து, கோப்பு களை முடிக்க வேண்டிய கட்டாயம் அமலாகிறது. அந்த பாதிப்பு, இவர்கள் மீது அதிகமாக இருக்கும். தமிழகத்தில் குரூப் - 4 பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் தேவை இருக்கிறது என்பதும், அதில் ஆர்வமாக பணியாற்ற, அதிக அளவு முதற்கட்ட தகுதியுள்ளவர்கள் உள்ளனர் என்பதையும் இத்தேர்வு காட்டுகிறது.

இத்தேர்வில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்கவில்லை. அவர்களில் பலருக்கு இப்பணியில் கிடைக்கும் மாத சம்பளத்தைவிட, தற்போது அதிகமாக இருக்கலாம் அல்லது அடுத்த பதவி உயர்வு மூலம் அதிக வேலைவாய்ப்பை பெறலாம் என்ற கண்ணோட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம்.மேலும், வேலைவாய்ப்பகங்களில் பதிந்து விட்டு, முடிவின்றி பல ஆண்டுகள் காத்திருக்கும் நடைமுறை மாறி, எழுத்து தேர்வு, அதற்குப்பின் ஒளிவு மறைவற்ற நேரடித் தேர்வு, தகுதி அடிப்படையில் அரசு வேலை என்பது நல்ல அம்சமாகும்.இத்தேர்வு முடிவுகளால், திறன்மிகுந்த பலர் அரசுப்பணியில் சேர்ந்தால், அரசு இயந்திரம் சற்று வேகமாக செயல்பட உதவிடும்.