Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 2 January 2015

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் "EARLY LITERACY PROGRAMME என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் "EARLY LITERACY PROGRAMME என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக
05.01.2015 அன்று கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிகளில் நடைமுறைபடுத்தி அடுத்தபடியாக 19.01.2015, 27.01.2015 மற்றும் 03.02.2015 ஆகிய தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

British council English Training for Primary Teachers-3 batch dates

>1st batch-Jan 5,19,27 & Feb 3

>2nd batch-Jan 6,20,28 & Feb 4

>3rd batch-Jan 7,21,29 & Feb 5

பாடநூல்- கல்வியியல் கழக செயலராக அறிவொளி நியமனம்

பாடநூல்- கல்வியியல் கழக செயலராக அறிவொளி நியமனம்
           தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் பொறுப்பு க.அறிவொளியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் இயக்குநராக அறிவொளி உள்ளார்.

                 பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக இருந்த அன்பழகன், கடந்த 31-ஆம் தேதியன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பு கூடுதலாக, அறிவொளியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில்2014ன் நோபல் பரிசு விபரம் சேர்ப்பு

ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில்2014ன் நோபல் பரிசு விபரம் சேர்ப்பு
           ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், கடந்த, 2014ல் நோபல் பரிசு பெற்றவர்கள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற இந்திய வீரர்கள் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

                  தமிழக அரசு, ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவ அறிவியல், சமூக அறிவியல் பாட புத்தகங்களில்,குழந்தைத் தொழிலாளர் மீட்பு மற்றும் அவர்களுக்கு எதிரான அடக்கு முறைக்காக போராடிய இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான்

பெண் கல்வி நல ஆர்வலர் மலாலா யூசப்சாய்.இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், இயல் வேதியியல் மற்றும் உடற்செயலியல் போன்ற துறைகளில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்கள், குறித்த தகவல்களும் படத்துடன் இடம் பெற்றுள்ளன.

கடந்த, 2014ல் தென்கொரியாவில் நடந்த, 17வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 11 தங்கம், 10- வெள்ளி, 36 வெண்கலம் என, 57 பதக்கங்களுடன், இந்திய வீரர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி, இந்தோனேஷியாவில் உள்ள ஜகார்த்தாவில் நடக்கும் என்ற தகவலும் உள்ளது.

இது, கல்வியாளர்கள், டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி

வீட்டில் பயன்படுத்தும் வைபையை பாதுகாப்பது எப்படி

வைபைவசதி மூலம் வயர் இல்லாமல் கணினி, லாப்டாப் மற்றும் மொபைல்களில் இன்டெர்நெட் பயன்படுத்த முடியும். இது பலருக்கும் வசதியாக இருப்பதால் இன்று அனைவரும் வைபை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
சிலர் அஜாக்கிரதையாக இருப்பதால் வைபை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது.கவலை வேண்டாம் பிரச்சனைகளை சந்திக்காமல் பாதுகாப்பாக இன்டெர்நெட் பயன்படுத்த உங்கள் வீட்டு வைபையை பாதுகப்பது எப்படி என்று பாருங்கள்..

ரவுட்டர் செட்டிங்ஸ்

முதலில் வயர்லெஸ் ரவுட்டர் செட்டிங்ஸ் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உங்களது வெப் ப்ரவுஸரில் '192.168.1.1'என டைப் செய்து பதிவு செய்யப்பட்டுள்ள பெயர் மற்றும் அதற்கான பாஸ்வேர்டை சரியாக கொடுக்க வேண்டும்.

பாஸ்வேர்டு

லாக் இன் செய்த பின் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும், இம்முறை சற்று வித்தியாசமான பாஸ்வேர்டை கொடுக்க வேண்டும்.

நெட்வர்க் SSID பெயர்

பரவலாக இந்த பெயர் டீபால்ட் அல்லது ரவுட்டர் நிறுவனத்தின் பெயர் தான் இருக்கும். இது பாதுகாப்பாக இருக்காது, இதனால் நெட்வர்க் SSID பெயரை மாற்றுவது நல்லது.

நெட்வர்க் மறையாக்கம்

உங்களது நெட்வர்க்கை வேறு யாரும் பயன்படுத்தாமல் இருக்க நெட்வர்க்கை மறையாக்கம் செய்வது நல்லது. இதன் மூலம் உங்களது வைபை நெட்வர்க் இருப்பது வேறு யாருக்கும் தெரியாது.

MAC முகவரி
வைபை பயன்படுத்தும் மொபைல்கள் மற்றும் அனைத்து கருவிகளுக்கும் ப்ரெத்யேக MAC முகவரி இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் கருவிகளின் MAC முகவரிகளை மட்டும் உங்களது வைபை ரவுட்டரில் பதிவு செய்யுங்கள். அதன்பின் நீங்கள் பதிவு செய்த முகவரி கொண்ட கருவிகளில் மட்டும் தான் உங்களது வைபையைபயன்படுத்த முடியும்.

வயர்லெஸ் சிக்னல்

நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டர் அதிக தூரம் சிக்னல் இருந்தால் உங்களுக்கு தேவைப்பட்ட சுற்றளவு வரை வைபை சிக்னலை குறைக்க வேண்டும்.

ரவுட்டர் ஃபர்ம்வேர் அப்டேட்

சீரான இடைவெளியில் உங்களது ரவுட்டரை அப்டேட் செய்ய வேண்டும். தற்சமயம் பயன்படுத்தும் ஃபர்ம்வேரின் நிலையை ரவுட்டரின் டேஷ்போர்டில் பார்க்க முடியும்.மேற்கண்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் உங்களது வீட்டு வைபையை உங்களை தவிற வேறு யாரும் பயன்படுத்த முடியாது.