Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 10 May 2015

கடுக்காய்

கடுக்காய் கடுக்காயை மருந்தாக்குவது எப்படி? கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம். கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள் கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள். "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.' காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தென்னாட்டவருக்கு திரிபலா... திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம். உடல் வலிமை பெற... நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும். பல் நோய்கள் தீர... கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும். மூல எரிச்சல் தீர... கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்
RKs Kalvi
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

🌺ஓய்வூதியம், 2 காப்பீட்டுத் திட்டங்கள் மோடி தொடங்கி வைத்தார்

🍀எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?

🌺ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது மே 11-ல் தீர்ப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு

🌺தட்டச்சு தேர்வு முடிவுகள் மே 11-ல் வெளியாகும்

🍀தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: திருவள்ளூர் மாவட்டத்தில்மே 19-க்குள் விண்ணப்பிக்கலாம் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று கடைசி

🌺ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய தமிழகம்கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி.,MD.,MLA அழைப்பு..!

🍀கொந்தளிக்கும் ஆசிரியர் பயிற்றுநர்கள்
அண்ணாமலை

🌺பல்கலை.,க்கு புது துணைவேந்தர்

🍀மதுரையில் நாளை எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச பயிற்சி: தினமலர் நடத்துகிறது

🌺கலை, அறிவியல் கல்லூரிகளை ஒரே நாளில் திறக்க உத்தரவு

🍀சட்ட கல்லூரி விண்ணப்பம் விற்பனை திடீர் ஒத்திவைப்பு

🌺வரும் 12, 13ம் தேதிகளில் சி.இ.டி., தேர்வு: முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பம்

🍀17 புதிய மருத்துவ கல்லூரிகள்: மத்திய அரசு அறிவிப்பு

🍀8ம் வகுப்பு பொது தேர்வு: ஹால் டிக்கெட் அறிவிப்பு
இடமாறுதல்

🌺கவுன்சிலிங்கை மே மாதம் நடத்த வேண்டும ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

🌺196 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 3 மாணவியர் 1,172 மதிப்பெண்

🍀தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்

🌺பிளஸ் 2 மறு கூட்டல்: முதல் நாளிலேயே 20,000 பேர் விண்ணப்பம்

🍀பி.இ., விண்ணப்பம்: மூன்று நாட்களில் 1 லட்சம் விற்பனை

🌺தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்'கலக்கத்தில் மாணவர்கள்

🌺தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள்: ஆலோசனை பெற இலவசத் தொலைபேசி எண் அறிமுகம்