Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 16 October 2015

தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

RTE FULL DETAILS AND IMPOTANT POINTS:

1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்


அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்
குறியீட்டு எண்ணுடன்

3.நீங்கள் முன்னர்
எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின்
விபரம்பார்வைஎன்ற தலைப்பின் கீழ்

4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்என்ற
கேள்வி

5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்

6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம்ரூ.10/-
செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற
வில்லை எனில்(court fees stamp) மனுவின்
மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)

7.நீதிமன்ற வில்லையை[court fees stamp]
(ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல்
(xerox) எடுத்து வைக்கவும்

8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன்
கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
(மெல் முறையீட்டின் போது ஒப்புதல்
அட்டை முக்கியம்.
தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த
தகவல்கள் கேட்கலாம்?.
( What type questions can be asked in RTI act
2005 )
1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.
( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்
(Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information
stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்
(All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும்
பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and
records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take
Xerox) ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்
முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்
தரவில்லையென்றாலோஅல்லது அவர் அளித்த
தகவல் திருப்திகரமாக
இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில்
பிரிவு 19ன் கீழ் உள்ள மேல்
முறையீட்டு அதிகாரியிடம் 30
நாட்களுக்குள் முதல் மேல்
முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில்
திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க
ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல்
ஆணையரிடம் இரண்டாவது மேல்
முறையீடு செய்யலாம்.
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயசாலை,
ஆலையம்மன் கோவில் அருகில் ,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act
தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் &
ஒழுங்கு நடவடிக்கை
பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும்
செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும்
துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக
வேண்டிவரும்
1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம்
வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால்
(30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய
எண்ணத்துடம் மறுத்தால்
4. தவறானமுழுமையுறாததவறான
எணத்தை தோற்றுவிக்கும் வகையில்
தகவலை தெரிந்தே கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்
பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250
வீதம் அபராதம்
ரூ 25,000 உயர்த பட்ச அபராதம்
பிரிவு 20 (2) படி துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை
மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம்
மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல்
அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான்
தண்டனை விதிக்க முடியும்
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட
பொது தகவல் அலுவலர்
மீது தண்டனை விதிக்க இயலாது.
குறிப்புபொதுவாக தகவல் ஆனையகம்
தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது
தண்டனைகள் (பிரிவு-20)
மாநில தகவல் ஆணையமானதுபுகார்
அல்லது மேல்முறையீடு எதனையும்
தீர்மானிக்கும்போது:
1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம்
ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம்
ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர்
காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க
மறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான
கோரிக்கையினை உள்நோக்கத்துடன்
மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்த
தகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர்,
தகவலை அளிப்பதை எந்த முறையிலும்
தடுக்குமிடத்தும்அந்த விண்ணப்பம்
பெறப்படும் வரை அல்லது தகவல்
அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும்
ரூ.250/- தண்டமாகஅந்த பொது தகவல்
அலுவலர் மீது விதிக்கப்படும்.
எனினும்மொத்த தண்டத்
தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல்
இருக்க வேண்டும்இருப்பினும்தண்டம்
விதிக்கப்படுவதற்கு முன்புசம்மந்தப்பட்ட
பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான
வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பொதுத்தகவல் அலுவலர்தான் நியாயமாகவும்,
கவனத்துடனும்,
செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு,
அவரையே சார்ந்ததாகும்.
மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில்,
பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக,
அவருக்கு பொருந்தத்தக்க
பணிவிதிகளின்படி,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட
துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்
Thanks – thagaval ariyum sattam 2005
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலத்தில்
இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற
முடியும்இன்னும் சில இடங்களில் கால்
செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையதளங்கள்: http://
www.righttoinformation.gov.in http://
www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://
www.rtination.com என்ற தளத்தைப்
பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம்சாலை மேம்பாடு,
அடிப்படை கட்டமைப்புபாஸ்போர்ட்டுக்கான
போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல்
புகார்கள்
ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம்
கேட்கின்றனர்.
தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய
தளம் http://www.tn.gov.in/rti/
தகவல் அறியும் உரிமை பற்றி மத்திய அரசின்
இணையத்தளம் http://rti.gov.in/
மேலும் தகவல்
உரிமை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் http://
persmin.nic.in/RTI/WelcomeRTI.htm
முறையாக தகவல் கேட்பது எப்படி? http://
www.rtiindia.org/
கிராம மற்றும் பஞ்சாயத்து நிர்வகாம்
பற்றி அரசாங்கத்தின் கோப்புhttp://
www.tn.gov.in/rti/proactive/rural/

குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு கலந்தாய்வு

 குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


        குரூப் 2 தொகுதியில் அடங்கிய பணிகளுக்கு (நேர்காணல் அல்லாத) 2012-ஆம் ஆண்டு நவம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.அதில், தேர்வானவர்களுக்கு இதுவரை 5 கட்டமாக கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. மேலும், காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு ஆறாவது கட்டமாக கலந்தாய்வு சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு விரைவஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்காகக் காத்திருக்க வேண்டாம்:வந்துவிட்டது புதிய முறை

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் இனிக் கவலைப்பட வேண்டாம்.இனி நம் வசதிக்கேற்ப வேறு ரயிலுக்கு மாற்றிக்கொள்ளலாம்.ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தும், காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் அந்த டிக்கெட்களை அப்படியே மற்ற ரயிலில் இருக்கும் சீட் அல்லது பெர்த் வசதிக்கேற்ப மாற்றி தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 'அல்டர்நேடிவ் டிரைன்ஸ் அக்காமடேஷன் ஸ்கீம்' (Alternate Trains Accommodation Scheme) என்ற திட்டத்தை நவம்பர் 1-ம் தேதி ரயில்வே துவங்க உள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மாற்று ரயில்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு-முதல்வரின் செய்திகுறிப்பு



தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியீடு(தமிழில்...)

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS 16-10-2015

🔴🔵🔴🔵🔴🔵🔴🔵🔴
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
16-10-2015
📚📚📚📚📚📚📚📚📚

📚4900 பணியிடங்கள் கொண்ட குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

📚BT TO PG PROMOTION : கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,

📚முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று நடைபெற உள்ள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

📚அகஇ - 6,7,8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குபள்ளி அளவிலான ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் கடிதம்.

📚தொடக்கக்கல்வி - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூரில் ஒரு மாதம் "ஆங்கில மொழி பயிற்சி வகுப்பு" - விருப்பமுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - - இயக்குநர் செயல்முறைகள்

📚650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு இன்று  சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

📚ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வருகிற 06.11.2015 அன்று விசாரணைக்கு வருகிறது???

📚திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 55 பேராசிரியர் பணி.

📚2004 - 2006 தொகுப்பு ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் தொகுப்புதிய காலத்தை பணி வரன்முறை செய்தால் பெறப்படும் நிலுவைத் தொகை (ARREAR)விவரம்

📚தொடக்கக்கல்வி - "தேசிய எரிசக்தி விழிப்புணர்வு ஓவியப் போட்டி" - தொடக்க/நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்

📚அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு

📚வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு அபாயம்

📚ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு

📚சாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு

📚TNPSC: அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்-அருள்மொழி அறிவிப்பு.

📚ஆசிரியர்களுக்கு வாடகை படி உயருமா?

📚சிறப்பு விருந்தினர்களை வரவேற்க மாணவ, மாணவிகளை ஈடுபடுத்த தடை: உயர் நீதிமன்றத்தில் சுற்றறிக்கை தாக்கல்

📚குறைந்த செலவில் டி.என்.பி.எஸ்.சி-க்கு, பொது சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்: க.அருள்மொழி பேட்டி

📚5 ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் ஆங்கிலப்பாடங்கள் ஒலி வடிவில்.

📚அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள்தொடக்கம்
📚📚📚📚📚📚📚📚📚