Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 18 October 2015

TAN EXCEL மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

TAN EXCEL மாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
கல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அதிக மதிப்பெண் பெற்ற, 100 மாணவர்களை தேர்வு செய்து, குறிப்பிட்ட மையத்தில் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாளில் பயிற்சி வழங்கப்படுகிறது. பொதுத்தேர்வுவரை, 50 நாட்களுக்கு, இப்பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மாவட்ட அளவில், ஒரே மையம் என்பதால், மாணவர்களுக்கு, போக்குவரத்து படியும், மாலை வரை வகுப்பு நடத்த வேண்டும் என்பதால், சிற்றுண்டி செலவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டை பார்த்த, ஆசிரியர்களுக்கு மயக்கம்வராத குறையாக புலம்புகின்றனர்.ஏனெனில், 50 நாள் பயிற்சி முழுவதும், மாணவர்கள் வந்து செல்ல மொத்தமாக, 100 ரூபாயும், சிற்றுண்டி செலவுக்கு, 50 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம், 25 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தினசரி, 2 ரூபாய் பயணப்படியும், 50 காசு சிற்றுண்டிசெலவினத்துக்கும், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:கல்வி மாவட்டத்துக்கு, ஒரு மையம் என்பதால், ஒன்று அல்லது இரண்டு பஸ்களை பிடித்து, மாணவ, மாணவியர் பயிற்சிக்கு வர வேண்டியுள்ளது. இதற்கு, இலவச பயண அட்டையையும் பயன்படுத்த முடியாது.அரசு பஸ்சில் குறைந்த பட்ச டிக்கெட்டே, 3 ரூபாய்; வந்து செல்ல குறைந்தது, 6 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை செலவிட வேண்டிஉள்ளது. ஆனால், அரசு, 2 ரூபாய் ஒதுக்கியுள்ளது.
சிற்றுண்டி செலவினத்துக்கு, தினசரி, 50 காசு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு பிஸ்கட் கூட வாங்க முடியாது. இதனால், பயிற்சிக்கு வரும் மாணவர்கள், பஸ்சுக்காக, தினசரி, 20ரூபாயும், மதிய உணவுக்காக, 50 ரூபாய் வரையும் செலவிட வேண்டியுள்ளது. வசதியில்லாத மாணவர்களுக்கு, இது ஒரு சுமையாகவே உள்ளது. அரசு பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள், ஆர்வத்துடன் சிறப்பு பயிற்சிக்கு வரும் போது, அவர்களுக்கு நல்ல முறையில் மதிய உணவும், போக்கு வரத்து செலவையும், அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்!

அழகப்பா பல்கலை: டிச.,26 முதல் தொலை தூர கல்வி தேர்வுகள் தொடக்கம்!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வி மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் அக்டோபர் 26-யிலிருந்து நவம்பர் 9-க்குள் www.alagappauniversity.ac.in இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையத்தில் தேர்வு கட்டணம் செலுத்தி உடனடியாக நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விருதுநகர் அழகப்பா பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வாயிலாகவும் கட்டணத்தை செலுத்தி நுழைவுச்சீட்டை பெறலாம். செமஸ்டர் முறை தேர்வு எழுதுபவர்களும், தேர்வு எழுதி தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு அழகப்பா பல்கலை விருதுநகர் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனமுதன்மை நிர்வாகி காசிராமன் தெரிவித்தார்.

அரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என,பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 5,000 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது.
பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும், தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன.இந்நிலையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளின் நுழைவு வாயிலில், 'அரசு உதவிபெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு வேண்டும்' என, பா.ஜ., மாநில சட்டப்பிரிவு செயலர் சந்தர், சென்னை முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார்.இதை பரிசீலித்த முதன்மை கல்வி அதிகாரி அனிதா, அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளும், அரசுஉதவிபெறும் பள்ளிக்கூடம் என, பள்ளி வாசலில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி

அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதுபோன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். 
இந்த நிலையைமாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் உச்சரிப்பு பயிற்சி போன்றவை, பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக தரப்படுகின்றன. அடுத்த கட்டமாக, பெங்களூரில் உள்ள தென்னிந்திய ஆங்கில பயிற்சி மண்டல மையத்தில், ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நவ., 2 முதல் டிச., 1 வரை, ஒரு மாதம் பயிற்சி தரப்படுகிறது. 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் இருந்து, தமிழகம் முழுவதும், 150 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
