Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 24 October 2015

பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு!

பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு! அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுபோன்று, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட 39 பள்ளிகள்; வால்பாறையில், ஏழு பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண், 100 சதவீத வெற்றி பெற ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி வாரியாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க திட்டமிடப்பட்டது. காலாண்டுத்தேர்வில், 400 மதிப்பெண்ணுக்கு மேலாக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் குறித்த தகவல்கள் கல்வி மாவட்ட அளவில் அனுப்பப்பட்டது.

கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்கள், 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு கடந்த 10ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படுகின்றன. இதில், ஒவ்வொரு பாடத்திலும் தனித்திறன் படைத்த ஆசிரியர்களை கொண்டு, மேலும், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது.

'கல்வி மாவட்டத்தில், 100 பேர், காலாண்டு தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். அவர்களது பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 9:30 முதல் 12:30 மணி வரையும்; மதியம் 2:00 முதல் 4:00 மணி வரையும் இரண்டு பேட்ச் ஆக பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி மேலும் பயிற்சி அளித்தால், அவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்பதால் சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது.' என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

வால்பாறை இல்லை
வால்பாறையில் ஏழு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட பகுதி மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதால், மலைப்பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைக்கவில்லை. மலைப்பிரதேசத்தில் வசிக்கும் மாணவர்கள் வாழ்வாதாரத்திற்கு, கல்வி ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இப்பகுதியிலும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

'கல்வித்தரம் முன்னேற வேண்டும்'
கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது: படித்து, நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மேலும் அதிக மதிப்பெண் பெறும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், பாடத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவர்களும் தேர்வில் வெற்றி பெற வைக்க போதுமான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறு செய்தால், அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெறுவதுடன், அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை படைக்கவும் வாய்ப்பாக இருக்கும். பின்தங்கிய மாணவர்கள், எந்த பாடத்தில் பின் தங்கியுள்ளனர்; அவர்கள் கல்வித்தரம் முன்னேற என்ன செய்யலாம் என திட்டமிட வேண்டும். அவர்களுக்கு, எளிதாக பாடத்தினை கொண்டு செல்வது என்பது குறித்து திட்டமிட்டு, பயிற்சி அளிக்கலாம். நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது போன்று, பாடத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க அரசு திட்டம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கல்வி ஆர்வலர்கள் கூறினர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே

விண்ணப்பிக்க முடியும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தியாகிறவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்க தவறியவர்களும் பெயர் சேர்த்துக்கொள்வதுடன், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், இடம் மாறுதல் போன்றவற்றையும் செய்து கொள்ள இம்மாதம் 24-ந் தேதி (இன்று) வரை அலுவலக நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மீறீமீநீ௴வீஷீஸீ௳.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ/மீக்ஷீமீரீவீ௳௴க்ஷீணீ௴வீஷீஸீ என்ற இணையதளம் மூலமும் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய கூடுதல் வசதி செய்யப்பட்டிருந்தது.

21 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்த நிலையில், வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக, கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந் தேதியும், இம்மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்கள் ஆவார்கள். 3 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்டு விண்ணப்பித்துள்ளனர்.

புதிய வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான காலக்கெடு இன்று (சனிக்கிழமை) மாலையுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று முகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால், வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் சென்று விண்ணப்பம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆன்-லைன் மூலம் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

இனி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்துள்ள சுமார் 21 லட்சம் பேரின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள். இந்த பணிகள் முடிந்தவுடன் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். புதிய வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25-ந் தேதி, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வருகிற ஜனவரி மாதம் வெளியிடப்படும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு

ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.

பள்ளி கல்வித்துறை பதவிகளுக்கு, அந்தத் துறையின் ஒரு அங்கமான, தேர்வு துறையே பணி நியமனத்தை மேற்கொள்வதால், வெளிப்படைத்தன்மை இருக்குமா என, கேள்வி எழுந்தது. எனவே, 'எழுத்துத் தேர்வு என்பது தகுதித் தேர்வு மட்டுமே; நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் நியமனம் நடக்கும்' என, அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், 'எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், ஆட்களை தேர்வு செய்வது, நேர்மையற்ற நடவடிக்கை' என, உத்தரவிட்டார். இந்த உத்தரவு, ஜூனில் வெளியான நிலையில், ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிடாமல், கிடப்பில் போட்டு விட்டனர்.

இது குறித்து, தேர்வு எழுதிய பட்டதாரிகள் கூறுகையில், '85 லட்சம் பேர், வேலைக்காக காத்திருக்கும் நிலையில், 4,000த்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பணி நியமனம் நடப்பது, இதுவே முதல் முறை; எனவே, தேர்வு முடிவை விரைவில் வெளியிட வேண்டும்' என்றனர்.
அதிகாரிகள் கூறும்போது, 'விடைத்தாள் திருத்தப்பட்டு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன; அரசு உத்தரவிட்டால், அடுத்த நிமிடமே வெளியிட தயார்' என்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே

விண்ணப்பிக்க முடியும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தியாகிறவர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்க தவறியவர்களும் பெயர் சேர்த்துக்கொள்வதுடன், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், இடம் மாறுதல் போன்றவற்றையும் செய்து கொள்ள இம்மாதம் 24-ந் தேதி (இன்று) வரை அலுவலக நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், மீறீமீநீ௴வீஷீஸீ௳.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ/மீக்ஷீமீரீவீ௳௴க்ஷீணீ௴வீஷீஸீ என்ற இணையதளம் மூலமும் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய கூடுதல் வசதி செய்யப்பட்டிருந்தது.

21 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்த நிலையில், வேலைக்கு செல்பவர்கள் வசதிக்காக, கடந்த மாதம் (செப்டம்பர்) 20-ந் தேதியும், இம்மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய இதுவரை மொத்தம் 21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்கள் ஆவார்கள். 3 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மட்டும் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்டு விண்ணப்பித்துள்ளனர்.

புதிய வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்குவதற்கான காலக்கெடு இன்று (சனிக்கிழமை) மாலையுடன் முடிவடைகிறது. ஆனால், இன்று முகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால், வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் சென்று விண்ணப்பம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆன்-லைன் மூலம் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

இனி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பம் செய்துள்ள சுமார் 21 லட்சம் பேரின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள். இந்த பணிகள் முடிந்தவுடன் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். புதிய வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி 11-ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25-ந் தேதி, தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வருகிற ஜனவரி மாதம் வெளியிடப்படும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:

தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:
உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லி, கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில், 207 அடி உயர கொடிக் கம்பத்தில், 60 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது.

இது தான், நாட்டின் மிக உயரமான கொடிக் கம்பத்தில் பறக்க விடப்படும், பெரிய தேசியக் கொடி என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்தசாதனையை, உ.பி.,யிலும் தொடர, முதல்வர் அகிலேஷ் யாதவ் முயற்சி மேற்கொண்டுள்ளார். தலைநகர் லக்னோவில் உள்ள பூங்கா ஒன்றில், 207 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.அதில், கன்னாட் பிளேசில் பறக்க விடப்படும் அளவிலான தேசியக் கொடி,விரைவில் பறக்கவிடப்பட உள்ளது.

அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி தலைவருமான முலாயம் சிங் யாதவின் பிறந்த நாளான, நவ., 22ல், 207 அடி உயர கம்பத்தில், பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்க விடப்பட உள்ளது.'தேசியக் கொடி ஏற்றுவதற்கான விதிமுறைகளின்படி, இரவில் கொடியை பறக்கவிடக் கூடாது. ஆனால், இந்த பிரம்மாண்ட கொடிக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது. எனவே, இரவு, பகலாக தொடர்ந்து பட்டொளி வீசி இந்தக் கொடி பறக்கும்' என, உ.பி., மாநில அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
-RK KALVI

அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு:

அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு:
தமிழகத்தில், அரசு பஸ்சை இயக்கிய, முதல் பெண் டிரைவர் என்ற பெருமைக்கு உரியவர் வசந்தகுமாரி, 57. துவக்கத்தில், பஸ் டிரைவர் பணியில் சேர முயன்ற போது, உயரம் குறைவு எனக்கூறி ஓரம் கட்டப்பட்டார்; தொடர் முயற்சியால், தன், 34 வயதில், அரசு பஸ் டிரைவரானார்.

அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, 'சிறப்பாக செயல்படு; ஆதரவாக இருப்பேன்' என்று கூறிய வார்த்தைகளை உள் வாங்கி, பஸ்சை இயக்க துவங்கினார். தற்போது, நெல்லை கழகமாக செயல்படும், அப்போதைய நேசமணி போக்குவரத்து கழகத்தில், 1993ல் பணியில் சேர்ந்தார். பயணிகளும், பணியாளர்களும் வியக்கும் அளவிற்கு சிறப்பாக பஸ்சை இயக்கினார்.துவக்கத்தில், நகர பஸ், நிறுத்தமில்லா பஸ் என இயக்கியவர், பின், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே பஸ்சை இயக்கி வந்தார்.23 ஆண்டுகள் கடுமையாக உழைத்தவருக்கு, வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.சர்க்கரை வியாதி, தலைசுற்றல், முதுகு வலி என, அடுத்தடுத்த பாதிப்பிற்கு ஆளான அவர், பணிமனைக்குள் பஸ்களை இயக்கி முறைப்படுத்தும், மாற்று பணி கேட்டார்; நிர்வாகம் தர மறுத்து விட்டது. வேறு வழியின்றி, மாதத்தின் சில நாட்கள் மட்டும் வேலை பார்த்து வந்தார். ஒரு கட்டத்தில் வேலைக்கே செல்ல முடியாத அளவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.விளைவு, ஏழு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் உள்ளார். இவரது கணவர் செபஸ்டின் இறந்து விட்டதால், மகன் அகஸ்டின் வீட்டில் இருக்கிறார். பிழைப்புக்கு, மகன் கூலி வேலை செய்கிறார். இதனால், மொத்த குடும்பத்தையும் வறுமை வாட்டி வதைக்கிறது.

தன் நிலை குறித்து வசந்தகுமாரி கூறியதாவது:அண்ணா தொழிற்சங்கத்தில், பொருளாளராக பதவி தந்தனர். பஸ்சை இயக்குவதுடன்,அந்த பணியையும் பார்த்து வந்தேன்; பின், பொருளாளர் பதவியை இழக்க நேரிட்டது. தற்போது கழுத்து எலும்பில் தேய்மானம் பிரச்னை உள்ளது. கையை உயர்த்தினால் வலி ஏற்படுகிறது. பணியில் இருக்கும்போது பல நேரங்களில், தலைச்சுற்றல் ஏற்பட்டு, பாதியிலேயேவீடு திரும்பி உள்ளேன். உடல் நலம் குன்றிய தொழிலாளர்களுக்கு மாற்று பணி தர வேண்டும் என்பது ஊழியர் ஒப்பந்தத்தில் இருக்கிறது. மாற்று பணி தர அதிகாரிகள் முன் வந்தாலும், சில அரசியல்வாதிகள் குறுக்கீட்டால் தருவதில்லை. முதல்வரை மீண்டும் சந்தித்து முறையிடலாம் என்றால், அனுமதிதருவதில்லை. அவரை நான் பார்த்து விடாமல் இருக்கும் வகையில், சிலர் செயல்படுகின்றனர். என் நிலை குறித்து முதல்வர் அறிந்தால்,எனக்கு மாற்று பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில், 'ஆன் டூட்டி' என்ற பெயரில், தொழிற்சங்க பணி எனக்கூறி விட்டு பணியே செய்யாமலும்; 'அதர் டூட்டி' என்ற பெயரில் எளிமையான மாற்று பணியிலும், 5,000 பேர் இருக்கின்றனர். ஆனால், நோயில் சிக்கிய பெண் ஊழியருக்கு, மாற்று பணி தராமல் இழுத்தடிப்பது வேதனைக்குரியது என, சக ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-RK KALVI

அக்டோபர் - 24ம் தேதி ஐக்கிய நாடுகள் தினம்:

🍁🍁🍁🍁🍁🍁அக்டோபர் - 24ம் தேதி ஐக்கிய நாடுகள் தினம்:
🍁🍁🍁🍁🍁🍁

2ம் உலகப்போரை நிறுத்த உருவானது ஐ.நா.

🍁‘ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் என்பதைத்தான் சுருக்கமாக ஐ.நா. என்கிறோம். 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம்தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. அமைப்புக்கு முன்னதாக இதுபோன்ற பல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன. அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தை பேணுதல் என்ற பிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே 2ம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது. 2ம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.

🍁ஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது. 2ம் உலகப்போரின்போது எதிரி நாடுகளுடன் போரை தொடர்ந்து நடத்துவதற்கு 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதி தந்தார்கள். பிறகு 1945ம் ஆண்டு 50 நாடுகள் அடங்கிய மாநாடு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைப்பெற்றது. அமெரிக்க, இங்கிலாந்து, சோவியத் யூனியன் மற்றும் சீன நாட்டு பிரதிநிதிகள் கொடுத்த ஆலோசனையின்பேரில் 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் டம்பார்ட்டன் ஓக்ஸ் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தின் உள்ளடக்கங்கள் முடிவு செய்யப்பட்டது.

🍁1945ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி 50 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த போலந்து நாடு பிறகு தன்னுடைய கையெழுத்தை இடத்தின் மூலமாக அவற்றின் எண்ணிக்கை 51ஆனது. 1945ம் ஆண்டு இந்தியா ஐ.நா.வின் உறுப்பினராக ஆனது. 

🍁1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும். ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும். ஐ.நா. என்பது அதில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ளது. தலைமையகம் 39 மாடிகளை கொண்ட செயலகக் கட்டிடம், உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச்சபை கட்டிடம் மற்றும் டாக்ஹாமர்ஷீல்ட் நூலக கட்டிடம் என்று 3 முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. 
ஐ.நா.சபை சிறுவர்களை பராமரிக்கும் யுனிசெப் நிறுவனம், அகதிகளை பராமரிக்கும் நிறுவனம், மேம்பாட்டு திட்டங்களுக்கான நிறுவனம், மக்கள் தொகை நிதியம் போன்ற சர்வதேச உதவி வழங்கும் பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது. 

🍁ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் கடைபிடிக்கப்படும் உலக மக்கள் தொகை தினம், உலக சுற்றுச்சூழல் தினம் போன்ற சர்வதேச தினங்களை அறிவிப்பதும் இதன் பணிகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் டிசம்பர் 10ம்தேதி கொண்டாடப்படும் ‘மனித உரிமை தினம்‘தான் ஐ.நா. அறிவித்த முதல் சர்வதேச தினம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை 6 முக்கிய அமைப்புகளைக் கொண்டது. இதில் சர்வதேச நீதிமன்றம் தவிர மற்ற 5 அமைப்புகளும் நியூயார்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்திலிருந்தே இயங்கி வருகிறது.

🍁1. ஐ.நா. பொதுச்சபை: இது ஐக்கிய நாடுகளின் முக்கியமானதொரு அங்கமாகும். இதில் எல்லா நாடுகளுக்கும் சம உரிமை அளிக்கப்படும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்பு சபைக்கு தேர்ந்தெடுப்பதும், பொதுச்சபையின் தீர்மானங்களை பரிந்துரைப்பதும் இச்சபையின் முக்கிய கடமைகளாகும்.

🍁2. ஐ.நா. பாதுகாப்பு மன்றம்: சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பது இதன் முக்கிய கடமையாகும். ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைதி காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு பொருளாதார தடைகளை விதித்தல் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற அதிகாரங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளன.

🍁3. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக சபை: பொருளாதார மற்றும் சமூக தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா. அமைப்பிலுள்ள ஏஜென்சி நிறுவனங்களுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

🍁4. ஐ.நா. பொறுப்பாட்சி மன்றம்: இது ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடுகள் மற்றும் பகுதிகளை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். பெரும்பாலான நாடுகள் 2ம் உலகப்போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில நாடுகள் விடுதலை பெற்றுள்ளன. சில நாடுகள் தன்னாட்சி அடைந்து விட்டன. சில நாடுகள் அண்டை நாடுகளுடன் இணைந்து கொண்டன.

🍁5. ஐ.நா. செயலகம்: ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்கு வேண்டிய ஆய்வுகள், தகவல்கள் மற்றும் வசதிகளை ஒருங்கிணைத்துத் தருகிறது. மேலும் ஐ.நா. நிறுவனத்தின் பிற அமைப்புகள் இடுகின்ற பணிகளையும் நிறைவேற்றுகிறது. இதன் ஊழியர்கள் செயல்திறன் மற்றும் நேர்மையின் அடிப்படையில் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இதன் சாசனம் வலியுறுத்துகிறது.

🍁6. சர்வதேச நீதிமன்றம்:  ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மையான அமைப்பாகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான தி ஹேக்கில் உள்ளது. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், அனைத்துலக அமைப்புகள் முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதி மன்றத்தின் முக்கிய பணிகளாகும்.

🍁ஐ.நா.சபைக்கு வருமானம் என்பது அதன் உறுப்பு நாடுகள் செலுத்தும் தொகைதான். அனைத்து உறுப்பு நாடுகளும் தமக்கு விதிக்கப்பட்ட தொகையைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகையின் அளவு அந்த நாட்டின் பொருளாதார பின்னணி, தேசிய வருமானம், மக்கள் தொகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஐ.நா.வின் ஆண்டு வருமானத்தில் ஐக்கிய அமெரிக்கா 22%, ஜப்பான் 19.6%. ஜெர்மனி 9.8%, பிரான்சு 6.5% தொகையைச் செலுத்துகின்றன. உலகத்தின் சமாதானத்துக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றும் அளப்பரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. எனினும் ஐ.நா. சபையின் பல முடிவுகள் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு உட்பட்டவையாக இருக்கிறதே தவிர அப்பாவி மக்களை பாதுகாப்பதாகவோ, சிறிய நாடுகளின் இறையாண்மைக்கு உத்திரவாதம் அளிப்பதாகவோ இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. எல்லா நாடுகளின் மக்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. சபைக்கு உண்டு என்பது அனைத்து நாட்டு மக்களின் கோரிக்கையாகும். 

🍁ஐ.நா.வின் முக்கிய நோக்கங்கள்

🍁* உலக நாடுகளில் அமைதியை நிலை நிறுத்துவது.

🍁* நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பது.

🍁* ஏழை மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பசி, பிணி, கல்லாமை ஆகியவற்றை ஒழிக்கவும் கூட்டாக முயற்சி செய்தல்.

🍁குறிக்கோள்களை எய்துவதில் உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஒரு பொது அரங்கமாக செயல்படுதல்.