Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 28 October 2015

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு
தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளதா என உறுதி செய்யவேண்டும்.

மழையில் இருந்து காத்துக்கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்ககூடாது எனவும், அதனால் இடி, மின்னல் மூலம் ஆபத்து ஏற்படும் என அறிவுறுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும்.மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும்போதும், திரும்பிசெல்லும்போதும் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் பாதையை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்கக்கூடாது எனஅறிவுரை வழங்க வேண்டும்.பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்கள், அறிவியல் ஆய்வு கூடங்கள், கணினி அறைகளில் அறுந்து அல்லது துண்டித்த நிலையில் மின்வயர்கள் உள்ளதா என தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். சுவிட்ச்கள் சரியாக உள்ளதா, மழைநீர் படாத வண்ணம் உள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக்கூடாது.பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்கள், வகுப்பறை, கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கட்டிட பராமரிப்பு பணி மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்லதடை விதிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்

மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாடத்துடன் நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு இந்தியாவில் முதல் முதலாக புத்தகம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ளன. அவை விரைவில்வினியோகிக்கப்பட உள்ளது.பள்ளிக்கல்வித்துறையின் கீழ் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குனரகம் முன்பு ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் என்று அழைக்கப்பட்டது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறியதாவது:-

கல்வியுடன் நல் ஒழுக்கம்

ஒரு சமுதாயம் மேம்பட வேண்டும் என்றால், எல்லா மனிதர்களும் நற்பண்புகளை பெற்றிருக்கவேண்டும். இன்று ஒவ்வொரு மனிதனின் மனமும் விரிவடையவேண்டியது அவசியமாகும். நற்பண்புகள் என்பது ஒவ்வொருவருக்கும் தேவை. சமூகம் மேம்பட, சமத்துவம் நிலைத்திட, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக நாடும், வீடும் நலம்பெற நல்லொழுக்கம் உள்ளிட்ட நற்பண்புகள் மனிதர்களிடம் இருக்கவேண்டும்.எனவே பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் கல்வியுடன் நல் ஒழுக்கத்தை ஆசிரியர்கள் கற்பித்து வருகிறார்கள். இருப்பினும் நல் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்து நல் ஒழுக்கம் உள்ளிட்ட பல நற்பண்புகளைமாணவ-மாணவிகளிடம் கற்பிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

முதியோரிடம் அக்கறை செலுத்துதல்

அதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரகம் சார்பில், தனியாக புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் முதியோரிடம் அக்கறை செலுத்துதல், நாட்டுப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, நன்றி உணர்வு, சுறுசுறுப்பு, நேரம் தவறாமை, கடின உழைப்பு, உணவு பழக்கவழக்கம், சேமிப்பு, இனியவை கூறல், நட்பு, ஒழுக்கம், நேர்மை, கற்றல், நம்பிக்கை, கற்பனை திறன், மகிழ்ச்சி, உதவி, பொறுமை, மன உறுதி, அன்பு, விடா முயற்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கதைகள் உள்ளன.புத்தகத்தில் உள்ள இந்த கதைகளை மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் கூறி பாடம் நடத்த உள்ளனர். கதை சொல்வதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கேட்பார்கள். மனதிலும் ஆழமாக பதியும். அந்த புத்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட உள்ளன.

பயிற்சி

இந்த புதிய புத்தகத்தில் உள்ளதை எப்படி மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என்றுஆசிரியர்களுக்கு பயிற்சியும் நடத்தப்பட உள்ளன. பயிற்சி, முதலில் மாநில அளவில்100 பேர்களுக்கு நடத்தப்படுகிறது. பயிற்சி பெறும் அந்த ஆசிரியர்கள் மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர்களிடம் எடுத்துக்கூறுவார்கள். பின்னர் தாலுகா மற்றும் வட்டார அளவில் நடத்தப்படும் ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துக்கூறுவார்கள். பிறகு ஆசிரியர்கள் வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள். இந்த புத்தகங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் இயக்குநர்ரமணன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது.

பருவமழை இயல்பு நிலையில் இருக்கும்.அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறாமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.நேற்று (செவ்வாய்கிழமை) நிலவரப்படி அதிகபட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் 9 செ.மீ மழை பெய்துள்ளது" என்றார்.

ALAGAPPA UNIVERSITY DISTANCE EDUCATION EXAMINATIONS, DECEMBER 2015

ALAGAPPA UNIVERSITY                            
DISTANCE EDUCATION EXAMINATIONS,  DECEMBER 2015

NOTIFICATION

>Submission of applications through online commences on                                                                                          26.10.2015   

>Last date for receipt of filled in  Examination Applications                                                                           -  without fine  16.11.2015

>Last date for receipt of filled in Examination  Applications                                                              - with a fine of Rs.200/-      23.11.2015   

>Date of commencement of Examinations    26.12.2015      

>Submit the examination application form through ONLINE only. 

For details visit www.alagappauniversity.ac.in

அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுத்துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணிக்கு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் கணினிசான்றிதழ் தேர்வு (கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப் பிக்கும்போது கணினி தகுதி தேர்ச்சி பெறாவிட்டாலும் பணி கிடைத்தால் தகுதிகாண் பருவத்துக்கு முன்பாக கண்டிப்பாக கணினி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.இந்த நிலையில், டிசம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிற அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவம்பர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அறிவித்துள்ளார்

DGE- National Talent Search Examination - 2015

DGE- National Talent  Search Examination - 2015

NTSE EXAM - 2015 - HALL TICKET DOWNLOAD (SCHOOL LEVEL)  from today Oct 28

Exam will  conduct on Nov 08.11.15

Using USER ID & PASSWORD Concern School HM's download the Hall ticket in the website www.tndge.in

RK TODAY'S NEWS..

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
RK TODAY'S NEWS..
28:10:2015
📚📚📚📚📚📚📚📚📚

🍁STATE LEVEL ACHIEVEMENT SURVEY REPORT 2014-2015 ALL DISTRICTS...

🍁அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

🍁ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்

🍁பகுதி நேர ஆசிரியர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தனிபிரிவில் அளித்துள்ள கோரிக்கை மனு

🍁1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

🍁சாதனை ஆசிரியர்களுக்கு சல்யூட்!புத்தகம் வெளியிட்டு கவுரவிக்க கல்வித்துறை திட்டம்...

🍁25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்த பள்ளிகளுக்கு 10 நாளில் நிலுவைத் தொகை: அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் உறுதி

🍁உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரேயொரு பெண்ணுக்காக நடந்த உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு

🍁தற்காலிக பணியாளர்கள், தகுதிகாண் பருவத்தினர், தகுதிகாண்பருவம் முடித்தவர் ஈட்டிய விடுப்பு இருப்பு வைத்தலுக்கானவிதிகள்...

🍁அரசு கணினி தகுதித் தேர்வுக்கு நவ.23 வரை விண்ணப்பிக்கலாம்

🍁சட்டசபையில் 110வது விதியில் அறிவித்த 959 பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை?

🍁வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

🍁பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு

🍁சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

🍁எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்

🍁நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

🍁குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை

🍁இ .பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

🍁இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணிடங்களை மறைப்பதாகக் கூறி ஆசிரியர்கள் தர்னா

🍁ஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு
📚📚📚📚📚📚📚📚📚