Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 30 October 2015

மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை:

மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறைக்கு என அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. அதனால் பணம் எதுவும் செலவளிக்காமல் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், விலை இல்லா நோட்டு புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், சைக்கிள் உள்பட 14 வகையான விலை இல்லா பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் நிறையபேர் 100-க்கு 100 மதிப்பெண் பெறுகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த மாணவர்கள் புரிந்து படித்திருக்கவேண்டும். பாடப்புத்தகங்களின் பின்னால் கொடுக்கப்படும் கேள்விகளை மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு சிலமாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள்.எனவே அனைத்துமாணவர்களும் பாடத்தை புரிந்துபடிக்கவேண்டும் என்பது அரசு தேர்வுத்துறையின் முடிவு. மனப்பாடம் செய்து படிக்காமல் புரிந்து படித்து தேர்வுஎழுதும் முறை அரையாண்டு தேர்விலேயே முதல்முதலாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

அரையாண்டு தேர்வுக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடக்கும். அரையாண்டு தேர்வு தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொருந்தும்.அரசு தேர்வுத்துறை அரையாண்டுக்கு வினாத்தாள்களை சி.டி.வடிவில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும். அவர் அதை காப்பி எடுத்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பிரிண்ட் எடுத்துக்கொடுப்பார்.ஆனால் சில தனியார் பள்ளிகள் அரசு தேர்வுத்துறை நடத்தும் பொது அரையாண்டு தேர்வை நடத்தாமல் அவர்களே தனியாக தேர்வை நடத்துகிறார்கள். அவ்வாறு நடத்தும் பள்ளிகள் எந்த எந்த பள்ளிகள் என்று கணக்கு எடுத்து அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பள்ளிகளும் அரசு தேர்வுத்துறை நடத்தும் அரையாண்டு தேர்வை நடத்துங்கள். அதுவே மாணவ-மாணவிகளுக்கு நல்லது.இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை

திறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை
தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது;ஆசிரியர்களாக பணிபுரிவோர் மற்றும் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதில் சேரலாம். மொத்தம், 1,000 பேர் சேர்க்கப்படுவர். இதற்கு, நவ., 30க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என,பல்கலை அறிவித்துள்ளது. 'கலந்தாய்வு டிசம்பரில் நடக்கும்; ஜனவரி முதல், வகுப்புகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு

தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

பெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'

ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்!'
பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது.

மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தான் இந்த திட்டம் அறிமுகமானது. 'படிப்படியாக மற்ற பள்ளிகளிலும், இந்தத் திட்டத்தை சோதனை முறையில்அமல்படுத்த தடையில்லை' என, கல்வித்துறை அதிகாரிகளும் வாய்மொழியாக ஒப்புதல் அளித்தனர்.ஆனாலும், இதுவரை எந்த பள்ளியிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதுபற்றி விசாரித்த போது, 'ஆசிரியைகளே, 'ஓவர் கோட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை' என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியைகள் சிலர் கூறும்போது, 'ஒரு சில மாணவர்கள் தவறாக நடக்கின்றனர் என்பதற்காக, இதுவரை பின்பற்றிய உடை விதிகளை மாற்ற எங்களுக்கு ஆர்வமில்லை. மாணவர்களை திருத்த வேண்டும்; பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, அவர்களை நல்லவர்களாக வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாறாக, இதுபோன்ற தடுப்புத் திட்டங்கள் கொண்டு வந்தால், தவறான மாணவர்களின் செயல்பாடு அதிகரிக்குமே தவிர, கட்டுக்குள் வராது' என்றனர்.

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை

கர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை
தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொருஅலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்களுக்கு, சுய விவர படிவங்கள் வழங்கி, விவரம் சேகரிக்கப்படுகிறது.

தேர்தல் பணியில், யார் யார் ஈடுபட வேண்டும், யார் யாருக்கு விதிவிலக்கு என, தேர்தல்கமிஷன்அறிவித்துள்ளது.
* அதன்படி, கர்ப்பிணி அலுவலர்கள், முதல் மூன்று மாதமாகவோ அல்லது எட்டாவது மாதமாக இருந்தாலோ, தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்* குடிநீர், மின்சாரம், மருத்துவம், தீயணைப்பு துறைகளில் உள்ள அலுவலர்களுக்கும், தேர்தல் பணியில் விலக்கு உண்டு
* ஆனால், தேர்தல் காலத்தில், 4, 5, 6, 7 மாத கர்ப்பிணியாக இருந்தால், பணியில் ஈடுபட வேண்டும். பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், 'மைக்ரோ அப்சர்வர்'களாக, வங்கி உயர் அதிகாரிகள் நியமிக்கப்படுவர். கடந்த தேர்தலில், சில இடங்களில், கடைநிலை ஊழியர்களை, வங்கிகள் அனுப்பின. இதனால், சிக்கலான நேரங்களில் சரியான முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது
* இந்நிலை, வரும் தேர்தலில் ஏற்படக் கூடாது என்பதற்காக, வங்கி உயர் அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இத்தகவலை, தேர்தல்கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு

'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'
'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது;ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தகுதி பெற்றவர்களின் தேர்வெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அவர்களில், இளநிலை உதவியாளர் பணிக்கு, நவ., 16; தட்டச்சருக்கு டிச., 4; சுருக்கெழுத்து நிலை -3 பதவிக்கு, டிச., 14ல் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை, http://www.tnpsc.gov.in/results.html இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது

ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது
முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வுநடந்துள்ளது.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்விஆசிரியர்கள், பட்டப்படிப்பு முடித்திருந்தால், அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் இந்த பதவி உயர்வுக்கு, 372 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வுடன் இடமாறுதல் வழங்குவதில் எந்த முறைகேடும் இருக்கக் கூடாது என, அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்
தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.அதேபோல் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு உத்தரவு எண்: 175ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.

கடந்த ஜூனிற்கு முன், ஒவ்வொரு ஐந்தாண்டு அல்லது ஆண்டு தோறும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், ஜூனிற்கு பின் ஒவ்வொரு மாதமும் நிதித்துறைசார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் தான், சம்பளம் வழங்கப்படுகிறது.இதனால் ஆறு மாதங்களாக தாமதமாக சம்பளம் பெறுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் முடியும் தருவாயிலும், அதற்கான நிதித்துறைஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால், நவ.,10 தீபாவளியை புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்கி இவர்களால் கொண்டாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ., உட்பட பல திட்டங்களில் பணியாற்றம் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது.

நிதித்துறை ஒப்புதல் அதிகபட்சம் ஒவ்வொரு ஐந்து அல்லது குறைந்தபட்சம் ஓராண்டுக்கு ஒருமுறையாவது அளிக்க வேண்டும்.மாதத்தில் 20ம் தேதிக்குள் நிதித்துறை ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே, ஒன்றாம் தேதிக்குள் சம்பளம் பட்டுவாட செய்ய முடியும். வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னை ஆசிரியர்களுக்கு ஏற்படாமல் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் திட்டப் பணிகளில் ஆசிரியர்கள் பணிக்கு செல்ல தயங்குவர், என்றார்.

ஆர்கே கல்விச்சிறகுகளின் கல்வி தலைப்புச்செய்திகள்

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
ஆர்கே கல்விச்சிறகுகளின் கல்வி தலைப்புச்செய்திகள்
📚📚📚📚📚📚📚📚📚

📚BT TO PG PHYSICS ADDITIONAL PROMOTION PANEL RELEASED BY DSE TO FILL 41 P0STS RELINQUISHED ON 16.10.2015

📚TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED

📚பிள்ளைகளிடம் சேமிப்புப் பழக்கம்: பெற்றோர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

📚பள்ளிக்கல்வி - தமிழ் மொழியை எளிதாக கற்பிக்க"குறைந்தபட்ச கற்றல் கையேடு" - இயக்குனர் செயல்முறைகள்

📚பள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - ONLINE - ல் மாணவியரின் விவரம் பதிவு செய்யும் வழிமுறை

📚1591 PG POST PAY ORDERS
900 PG Post Continution Pay Order

📚இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

📚தேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் சேகரிப்பு.

📚TET:Problems for APPOINTED TEACHERS with out TET( AFTER 23/8/2010)

📚பழைய ஓய்வூதியம்: ஆசிரியர்கள் தீர்மானம்
‘கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி’ : மு.க.ஸ்டாலின்

📚ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்

📚"நெட்' தேர்ச்சி பெறாவிட்டால் உதவித் தொகை ரத்து: ஆய்வு செய்ய குழு அமைப்பு

📚"அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு வாரம்'

📚சட்டசபை தேர்தல் பணி துவக்கம் கல்வி துறைக்கு அவசர கடிதம்

📚ஈடுசெய் விடுப்பு -G.O MS No 2218.Misc. dt:14.12.81

📚மாணவர்கள் ஆதார் எண்பெற பள்ளிக்கூடங்களில் முகாம்: கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

📚சென்னையில் 41
ஆண்டுகளுக்குப் பின் புதிய அரசு கலை - அறிவியல் கல்லூரி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

📚தகுதி அடிப்படையில் தான் வாய்ப்புகள்: உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து
📚📚📚📚📚📚📚📚📚