Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 5 November 2015

மாணவர்களுக்கு காய்ச்சலா? தகவல் தெரிவிக்க அறிவுரை

மாணவர்களுக்கு காய்ச்சலா? தகவல் தெரிவிக்க அறிவுரை
பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பின், உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளால், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். காய்ச்சல் அறிகுறியுடன் சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், தொற்று கிருமிகளால், டெங்கு, பன்றிக்காய்ச்சல் சக மாணவர்களுக்கும் எளிதாக பரவி விடுகிறது. இதனால், பள்ளி தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியிலுள்ள நீர் தேக்க பகுதிகள், குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வுகளை, மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், காய்ச்சலால் பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்தும், தொடர் காய்ச்சல், கடுமையான சளி, இருமல், உடல் நிலையில் மாற்றம்போன்ற அறிகுறிகளுடன் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால், சக மாணவர்களிடம் இருந்துமாணவனை தனிமைப்படுத்தி அருகிலுள்ள சுகாதார மையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்.

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதியபாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இளநிலை விரிவுரையாளர் ஆகிய பணி யிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு 30 முதுநிலை விரிவுரையாளர் களும், 41 விரிவுரையாளர்களும் 18 இளநிலை விரிவுரை யாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதியிட்ட அரசிதழில் (சிறப்பு வெளியீடு- எண் 232) தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி என பாடவாரியாக பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்

அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில்திட்டம்

அரசு கலை கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைரூ.100 கோடியில்திட்டம்
தமிழக அளவில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் ரூ.100 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் சேகரித்து வருகிறது.மாநில அளவில் 72 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன.

இதில், 10 கல்லுாரிகளுக்கு மேல் 'கிரேடு'- 1 அந்தஸ்து பெற்றுள்ளன. நடப்பு ஆண்டு பெரும்பாலான கல்லுாரிகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்க அரசுஅனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சில கல்லுாரிகளில் போதிய வகுப்பறைகள் இன்றிமரத்தடியில் வகுப்புகள் நடப்பதாகவும், ஆய்வகம், நாற்காலி, மேஜை உள்ளிட்ட வசதியில்லை என புகார் எழுந்தது.ரூ.100 கோடி திட்டம்: இந்நிலையில், அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசு கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகளைஏற்படுத்த அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது.

இதற்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை குறித்த பட்டியலை வழங்க, கல்லுாரிகளுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அரசு கல்லுாரி அலுவலர் ஒருவர் கூறுகையில்,“ கல்லுாரிகளில் கூடுதல் வகுப்பறை,சேர்,மேஜை, அறிவியல் ஆய்வக உபகரணங்கள் தேவை குறித்த அறிக்கை தர அரசு கேட்டதால், சேகரித்து அனுப்பி வருகிறோம். விரைவில் அரசு கல்லுாரிகளில்கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

அரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு

அரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு
அரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் 75சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தரங் என்ற திட்டத்தின் கீழ் தரைவழி தொலைபேசி (லேண்ட் லைன்), பிராட்பேண்ட், பி.போன் உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்புச் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி சலுகையை வழங்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு அந்தச் சலுகையைத் திடீரெனப் பாதியாகக் குறைத்தது. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சலுகையில் மேலும் 5 சதவீதம் அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது.இதுகுறித்து, பிஎஸ்என்எல் சந்தைப் பிரிவு (Marketing Wing) பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மாதந்தோறும் தங்களின் தொலைபேசி வாடகைக் கட்டணத்தில் 20 சதவீதம்தள்ளுபடி பெற்று வந்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்தச் சலுகை 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

அதேபோல், ஓராண்டுக்கான தொலைபேசி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும்பட்சத்தில், இரண்டு மாத வாடகைக் கட்டணத்தை தள்ளுபடியாகப் பெற்றும் வந்தனர். இந்த சலுகையும், அப்போது ஒரு மாதமாக குறைக்கப்பட்டது.75 சதவீதம் அளவுக்கு சலுகைக் குறைப்பு: சுமார் 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், தற்போது வழங்கப்படும் 10 சதவீத சலுகையில் 5 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்ற அரசு ஊழியருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல், இந்தப் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் இனி தங்களின் தொலைபேசிக் கட்டணத்தில் 5 சதவீதம் மட்டுமே சலுகையாகப் பெற முடியும். இதுவரைஅரசு ஊழியர்கள் பெற்று வந்த சலுகையில் 75 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.இலவச அழைப்புச் சலுகையும் குறைப்பு: வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பி.எஸ்.என்.எல்.தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு நேரத்தில் (9 முதல் 7 மணி வரை) அனைத்து தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இலவசமாகத் தொடர்பு கொள்ளும் வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இதிலும், அரசு ஊழியர்களுக்கு சில மாற்றங்களைக் கொண்டுள்ளது.

அதாவது, இனி வரும் நாள்களில் இரவு நேரத்தில் தரைவழித் தொலைபேசி வாயிலாக, பி.எஸ்.என்.எல். தொலைபேசி, செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டால் மட்டுமே இலவச அழைப்பாக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டால், அதற்குரியக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.இழப்பை ஈடுகட்ட நடவடிக்கை: கடந்த 2004-ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லாபம் ரூ.10,183 கோடியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2014-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ரூ.8,234 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

அதேபோல, எம்டிஎன்எல் நிறுவனமும் நஷ்டத்தை எதிர் கொண்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் தெரிவித்திருந்தார்.இந்த நஷ்டத்தை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், இந்தச் சலுகைக் குறைப்பு இருக்கலாம் என்றனர் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் பதிவு மூப்பு வழங்கப்படும்.

இதில் 2015 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நடத்துநர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் வாரியாக பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் 4.94 லட்சம்பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 60 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்

கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்
வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து மாவட்டஅறிவியல் அலுவலர் (பொறுப்பு) ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கணித மேதை ராமானுஜரின் பிறந்த தினமான டிசம்பர் 22-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய கணித நாளாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில்கணித நாளை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் நவம்பர் 22-ஆம் தேதி நடைபெறும் கணித திறனறிவுத் தேர்வில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.அடிப்படை கணிதத்தை மையமாகக் கொண்டு கூர்ந்து கவனித்து திறனறிதல்,சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மிக மிக நன்று பிரிவில் ரூ.2,000 மதிப்பிலான பரிசும், மிக நன்று பிரிவில் ரூ.1,000 மதிப்பிலான இரு பரிசுகள், நன்று பிரிவில் ரூ.500 மதிப்பிலான 3 பரிசுகள், சிறப்பு பிரிவில் ரூ.250 மதிப்பில் 20 பரிசுகள் வழங்கப்படுகிறது.காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட அறிவியல் மையத்தில் வருகிற 18-ஆம் தேதிக்குள் பெயருடன் ரூ.100ஐ செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக மேலும் தகவல் வேண்டுவோர் 0416- 2253297, 2252297 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி கேள்விக்கு கிண்டல் பதில்: தலைமை ஆசிரியர் இருவர் 'சஸ்பெண்ட்'

எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி கேள்விக்கு கிண்டல் பதில்: தலைமை ஆசிரியர் இருவர் 'சஸ்பெண்ட்'
கல்வித் தரம் மோசமாக இருப்பது குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பூஜா குல்கர்னி எழுப்பிய கேள்விகளுக்கு, கிண்டல் தொனியில் பதிலளித்த, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இருவர்,

தனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஓவர்?'

தனியார் பள்ளிகளில், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 'ஓவர்?'
வரும், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, பொது உத்தரவு துறை வெளியிடுவதற்கு முன்பே, பல தனியார் கல்வி நிறுவனங்கள் முடித்து விட்டதாக அறிவித்துள்ளன. இது, பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக, கல்வி நிறுவனங்களில் கல்வி உரிமை சட்டத்தின் - ஆர்.டி.ஐ., கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டவுடன், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த உத்தரவை, பொது உத்தரவு துறை - டி.பி.ஐ., டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடும். அதன் பின்னரே மாணவர் சேர்க்கை துவக்கப்படும்.
ஆனால், பல கல்வி நிலையங்களில், டி.பி.ஐ., உத்தரவு வருவதற்கு முன்னரே, வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது, பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கைக்காக, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கோரி, பல கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன. ஒரே ஒரு நாள் மட்டுமே அந்த அறிவிப்பு காணப்பட்டது. இதை பார்த்தவர்கள், தங்கள் குழந்தைகளுக்கான விண்ணப்பங்களை கொடுத்து, தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டனர். இதனால், பல பெற்றோர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
பல கல்வி நிலையங்களில் பொதுவான கால அட்டவணையோ, தொடர்பு முறைகளோ இல்லாததால், மாணவர் சேர்க்கை குறித்து முறையாக அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணமும், 15 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டிசம்பர், ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கேட்ட கல்வி நிறுவனங்களிடம், ஆர்.டி.ஐ., இடஒதுக்கீடு மார்ச்சில் வெளியான பின்னரே, மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும் என்று பொது உத்தரவு துறை அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், அந்த கால கட்டத்தில், ஆண்டுத் தேர்வுகள் நடக்கும் என்பதால், பல கல்வி நிலையங்கள், அடுத்த கல்வி ஆண்டுக்
கான மாணவர் சேர்க்கையை முன் கூட்டியே முடித்துவிட்டன.
பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா அமைப்பது உட்பட பல முக்கிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றவுள்ளோம். அந்த நேரத்தில் பெற்றோரிடம் நிதி கேட்பது முறையல்ல என்பதால், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சசிகுமார், பொது செயலர், கர்நாடக தனியார் பள்ளிகள் சங்கம்
அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தனியார் கல்வி நிலையங்கள், முன்கூட்டியே முடித்து விட்டது குறித்து, ஆதாரங்களுடன் புகார் ,செய்தால் உரிய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்
அஜய்சேத், முதன்மை செயலர், துவக்க மற்றும் இடைக்கல்வி துறை

பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்

பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்
பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகமாகிஉள்ளது.இந்த முறைப்படி, பி.எட்., படிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கும் தேர்வுக்கான மதிப்பெண் மட்டுமின்றி, சி.சி.இ., முறையில், 30 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன், வகுப்புகளில் ஆர்வமாக பங்கேற்றல், செய்முறைப் பயிற்சியில் ஈடுபாடு, கற்றல் பயிற்சிக்கான திட்ட வரைவு தயாரித்தலில் ஆர்வம் மற்றும் புதுமை என, மாணவர்களின் செயல்திறன்கள் அடிப்படையில்,சி.சி.இ., மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.யோகா உள்ளிட்ட உடல்நலம் குறித்த பாடங்களுக்கும் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. பி.எட்., மாணவர்கள், முதலாம் ஆண்டில், 20; இரண்டாம் ஆண்டில், 80 என, மொத்தம், 100 நாட்கள், பள்ளிகளுக்கு சென்று பாடம் நடத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் போல், 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், கருத்தரங்கம் நடத்தி, பயிற்சித் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்று புதிய முறைகளுடன் படித்து, நல்ல கல்வித் தரத்துடன் பி.எட்., முடிக்க உள்ள பட்டதாரிகள், இனிமேல் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்று, எளிதாக தேர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படும் என்றும் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.மாநிலப் பள்ளிகளில், 8ம் வகுப்பு வரையிலும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலும், கடந்த 2010ம் ஆண்டு முதல், சி.சி.இ., முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆசிரியர் படிப்புக்கும், சி.சி.இ., மதிப்பெண் திட்டம் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு

தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு மூலம், ஆராய்ச்சி படிப்பு வரை உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அளவில் நடக்கும் முதல் கட்ட தேர்வில், முதல், 300 இடங்களில் வருபவர்கள் தேசிய தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். தேசிய தேர்வின் தேர்ச்சி பட்டியலில், ஆயிரம் இடங்களுக்குள் வந்தால், உதவித் தொகை கிடைக்கும்.இதில் தேர்வாகும் மாணவர்கள், சர்வதேச பல்கலைகளில் எளிதாக சேர முடியும். தமிழகத்தில் இந்த தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை, சில ஆண்டுகளுக்கு முன் வரை, ஒரு லட்சத்துக்குள் தான் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு, 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'

புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'

மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

அதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன. 2015 செப்., 26 வரை 15.69 லட்சம் மத்திய அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.41,771 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 27.69 லட்சம் ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை ரூ.47,231 கோடி செலுத்தப்பட்டது. 4,15,820 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,106 கோடி செலுத்தப்பட்டது.மொத்தம் 93.27 லட்சம் ஊழியர்களிடம் ரூ.98,653 கோடி ஆணையத்தில் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4.03 ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை இதுவரை ஆணையத்தில் செலுத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் பிடித்த தொகைக்கான ஒப்புகை சீட்டு மட்டும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த ஒப்புகை சீட்டால் எந்த பயனும் இல்லை என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தகவல் உரிமை சட்டத்தில் இத்தகவல்களை பெற்ற திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தில் 3 விதமான திட்டங்கள் உள்ளன. இதில் எந்த திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை. ஆணையத்தில் பணம் செலுத்திய மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமாவது (இறப்பு அல்லது ஓய்வு பெறும்போது) பணப்பலன் கிடைக்கிறது.

தமிழக அரசு ஆணையத்தில் பணம் செலுத்தாததால் பணப்பலன் வழங்க முடியாமல் தவிக்கிறது. சிலர் மட்டுமே நீதிமன்றம் சென்று பணப்பலன் பெற்றுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை, என்றார்

பொறியியல் மாணவியர் உதவித்தொகை அறிவிப்பு

பொறியியல் மாணவியர் உதவித்தொகை அறிவிப்பு
நடப்பு கல்வியாண்டில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், 4,000 பேருக்கு, மத்திய அரசின், 'பிரகதி' திட்டத்தில், உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல், இப்படிப்புகளில் சேர்ந்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள், 1,000 பேருக்கு, 'சாக் ஷம்' என்ற திட்டத்தில், உதவித் தொகை அளிக்கப்படுகிறது.இவர்களுக்கு, கல்வி கட்டணமாக, 30 ஆயிரம் ரூபாய்; மாதம், 2,000 ரூபாய் வீதம், 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கு மட்டும், உதவித் தொகை கிடைக்கும்.உதவித்தொகை பெற, குடும்ப ஆண்டு வருமானம் ஆறு லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம், நவ., 23 வரை விண்ணப்பிக்கலாம்.

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚7979 BT POST OCTOBER MONTH PAY ORDER

📚4393 LAB ASST,1764 JUN.ASST POST OCTOBER MONTH PAY ORDER

📚900 PG ASST POSTS OCTOBER MONTH PAY CONTINUATION ORDER

📚தேர்தல் பணியாற்றுவதில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

📚தீபாவளிக்கு முதல் நாள் 'ரிலிஜியஸ் லீவ்' -பெற்றோர், ஆசிரியர் கோரிக்கை

📚மாணவர்கள் ஆதார் அட்டை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

📚போலி தொலைபேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம்: எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரிக்கை

📚ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘மொபைல் அப்ளிகேஷன்’ விரைவில் அறிமுகம்

📚சிறை செல்லும் போராட்டம்'ஜாக்டோ' கூட்டுக்குழு முடிவு.

📚தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

📚ஆசிரியர்களை கேவலமாக சித்தரிக்கும் பள்ளிக்கூடம் போகாமலே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்

📚"பிளஸ் 2 மாணவர்களுக்கு இரு மாதங்களுக்குள் மடிக்கணினிகள்'

📚பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை:

📚யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

📚பள்ளிகளில் டெங்குத் தடுப்பு நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரி அறிவுறுத்தல்

📚தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

📚தமிழ்நாடு காவல் துறையில் ஆய்வு உதவியாளர் பணி.

📚வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 86.66 லட்சம்பேர்

📚10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாராக வேண்டும்.

📚கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை

📚ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்

📚மாணவர்கள் குறைந்த அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்: தேனியில் 58 பள்ளி மாணவர்கள் பாதிப்பு

📚வருமான வரித்துறை எச்சரிக்கை
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀