Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 12 November 2015

விஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்

விஏஓ பணிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழகத்தின் முக்கிய அரசு வேலைகளுக்கு டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு நடத்தி வருகிறது. தற்போது 813 விஏஓ காலியிடங்கள் இருக்கிறது. இதற்கான தேர்வு விவரத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பிக்கும் கடைசிநாள் 14-ந்தேதி என்றும், கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிசம்பர் 16-ந்தேதி என்றும் அறிவித்துள்ளது.மேலும், tnpsc.gov.in, tnpscexams.net, tnpscexams.in ஆகிய இணையதளங்கல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

தொழில்கல்வி உதவித்தொகை

தொழில்கல்வி உதவித்தொகை பெற நவ.25-க்குள் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் தொழில்கல்வி உதவித்தொகை பெற விரும்பும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் நவ.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:

பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பாரத பிரதமரின் தொழில்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை விண்ணப்ப படிவத்திலும், இணையதளம் மூலமாகவும் இரு வழிகளிலும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய முன்னாள் படைவீரர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.எனவே தொழில்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஜ்ஜ்ஜ்.க்ங்ள்ஜ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ள பிரதமரின்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முழுவதுமாக பூர்த்தி செய்து நவ.25-ம் தேதிக்குள் முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.மேலும் இணையதள போர்டல் மூலமாக விண்ணப்பிக்க உரிய கால அவகாசம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.25-ம் தேதிக்கு பின்னர் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் எக்காரணத்தை கொண்டும் பெறப்படமாட்டாது.

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க www.desw.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசிமூலமாகவோ 0424-2263227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல்செயல்படும்.

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல்செயல்படும்.
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படுமென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Toy Making Workshop In Madurai

Toy Making Workshop In Madurai

2016 - 2017 கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான விண்ணப்ப படிவம்


813 VAO POST - காலி பணியிட விவரங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு




ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு

நிதித்துறை - G.O MS : 282 - அரசு ஊழியர் பணியிலிருக்கும் போது இறந்துவிட்டால் வழங்கப்படும் ஈமச் சடங்கு நிதி ரூ.5000/- இல் இருந்து ரூ.25000/- ஆக உயர்த்தி அரசானை வெளியீடு

கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானவிண்ணப்பங்கள்

கல்வியாண்டில் புதிய தொடக்கப்பள்ளி துவங்க மற்றும் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கானவிண்ணப்பங்கள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்

813 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு:

813 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு: அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

2014–15–ம் ஆண்டிற்கான கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி காலிப்பணியிடங்கள் 813 உள்ளன.

இதனை நிரப்ப நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. எழுத்து தேர்வு 14.02.2016 அன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.

எழுத்து தேர்விற்கு ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பாதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தர பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

டிசம்பர் 14–ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 16.12.2015 ஆகும்.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் அனைத்து வகுப்புகளை சார்ந்த ஆதரவற்ற விதவைகள் குறைந்த பட்சம் 21 வயது முழுமை அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 40 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதும் நிரம்பி இருக்க வேண்டும்.

10–ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப் பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருக்க வேண்டும்.

வி.ஏ.ஓ. தேர்வு எழுத தேர்வு கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். மேலும் விவரங்கள் www.tnpsc.gov.in மற்றும் www.exams.net-ல் பார்க்கலாம்

ரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு


ரெயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது பிடிக்கப்படும் கட்டணம் இன்று முதல் இரு மடங்காகிறது. மேலும் அட்டவணை தயாரித்த பின்னும் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய முறையும் அமலுக்கு வருகிறது. 

ரெயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பியளிக்கும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் திருத்தியது. இந்த புதிய சட்டப்படி அனைத்து வகுப்புகளுக்குமான முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது பிடித்தம் செய்யப்படும் கட்டணம் இரு மடங்காகிறது. 

இந்த புதிய விதிப்படி முதல் அடுக்கு ஏ.சி. அல்லது எக்சிகியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்தால், பிடித்தம் செய்யப்படும் கட்டணம் ரூ.120-லிருந்து ரூ.240 ஆக உயர்கிறது. இரண்டு அடுக்கு ஏ.சி. அல்லது முதல் வகுப்புக்கு ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது. 

இதைப்போல 3 அடுக்கு ஏ.சி., ஏ.சி.சி., 3ஏ வகுப்புகளுக்கு ரூ.90-லிருந்து ரூ.180 ஆக உயர்கிறது. மேலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதிக்கு ரூ.60-லிருந்து ரூ.120 ஆகவும், 2-ம் வகுப்பு பயணிகளுக்கு ரூ.30-லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்படுகிறது. 

ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யப்படும் பயணிகளுக்கு 25 சதவீத பயணக்கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதைப்போல 12 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரத்துக்குள் ரத்து செய்யும் பயணிகளுக்கு, 50 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன், ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கே கட்டணம் திருப்பியளிக்கப்படும். 

முன்பதிவு செய்யப்படாத 2-ம் வகுப்பை பொறுத்தவரை, ரெயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்யும் போது ரூ.15 பிடித்தம் செய்யப்படுவதே வழக்கத்தில் இருந்தது. இது இன்று முதல் ரூ.30 ஆக உயர்த்தப்படுகிறது. 

இதைப்போல காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்.ஏ.சி. டிக்கெட் வைத்திருப்போர், ரெயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பாக ரத்து செய்தால் கூட (பிடித்தம் போக) பணத்தை திரும்ப பெறலாம். அதற்கு பின் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது. 

இந்த புதிய விதிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால் ரெயில்வே பயணிகளின் மோசடிகள் குறைந்து உண்மைத்தன்மை ஊக்குவிக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

ரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு அட்டவணை (சார்ட்) தயாரித்த பின்னும், முன்பதிவு செய்யும் முறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த முறைப்படி ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பிருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

அதன்படி ஒவ்வொரு ரெயிலும் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பே வழக்கமான அட்டவணை தயாரிக்கப்படும். இதில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது முதல் இட ஒதுக்கீடு அட்டவணை என அழைக்கப்படும். 

இந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னரும், அந்த ரெயிலில் இடம் இருந்தால் மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் இணையம் மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். 

இந்த வசதி ரெயில் புறப்படுவதற்கு ½ மணி நேரத்துக்குமுன் நிறுத்தப்பட்டு, 2-வது இட ஒதுக்கீடு அட்டவணை வெளியிடப்படும். இந்த அட்டவணை ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர் மூலம் வழங்கப்படும். 

இந்த புதிய வசதியால் ரெயில்கள் காலியாக செல்வது தவிர்க்கப்படுவதோடு, ரெயில்வேக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளியில் மாணவி;பக்கத்து வீட்டில் ஆசிரியை

ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருத்தி, கற்றல் குறைபாடுள்ள சிறுமிக்கு பாடம் நடத்துகிறாள்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிப்பவள் காயத்ரி. இவளது வீட்டுக்கு அருகில், ப்ரியா என்ற சிறுமி, பெற்றோருடன் வசிக்கிறாள்; கற்றலில் குறைபாடு உள்ளவள். மற்ற மாணவியரை போல், கல்வி கற்க முடியாததால், வீட்டில் இருக்கிறாள்.

இதை அறிந்த காயத்ரி, பள்ளி முடிந்ததும் நேராக, ப்ரியா வீட்டுக்கு சென்று, அவளுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்து வருகிறாள். வீட்டு முற்றத்தில், மணலில் எழுத்துக்கள் எழுதிக் காட்டி, அந்த சிறுமிக்கு எழுதும் திறனை வளர்க்கிறாள். ப்ரியாவிடம் மாற்றத்தை கண்ட அவளது தாய், தினமும் காயத்ரி பாடம் நடத்த, ஏற்பாடுசெய்துள்ளார்.

இதேபோல், பரமேஸ்வரி என்ற ஏழாம் வகுப்பு மாணவி, தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் முதியவர் வளர்க்கும் செடிகளுக்கு, தினமும் தண்ணீர் ஊற்றி வருகிறாள். எட்டாம் வகுப்பு மாணவி சவுமியா, தேவகோட்டை சந்தைப் பகுதியில், மோசமான நிலையில் சுற்றித் திரிந்த இளம் பெண்ணுக்கு, துணிகள் வாங்கிக் கொடுத்து, இயல்பு நிலைக்கு மாற வைத்து உள்ளார்.
இம்மூன்று மாணவியரையும், தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

RK KALVI SIRAGUKAL 12-11-2015

📕📕📕📕📕📕📕📕📕
RK KALVI SIRAGUKAL
12-11-2015
📚📚📚📚📚📚📚📚📚

📚கடலூர், சென்னை மாவட்ட   பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை.

📚குரூப் 2ஏ தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: 18 ஆம் தேதி கடைசி நாள்

📚TNPSC - GROUP 2A தேர்வு விண்ணபிக்ககடைசி தேதி 18/11/2015 வரை நீடிப்பு

📚23/8/10 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை- பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

📚RTI-MUST GET DEPARTMENTPERMISSION TO WRITE FOR EVERY TNPSC EXAM

📚ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.

📚கல்வியாளர்கள் இல்லாமல் புதிய கல்விக்கொள்கை - மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

📚CPS:பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் கணக்குகளை நிர்வகிக்க0.01% கட்டணம்; மத்திய அரசு அறிவிப்பு

📚குரூப் 4 தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு : சென்னையில் 16-ம் தேதி தொடக்கம்

📚'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை

📚'செல்பி' பிரியரா நீங்கள்? மனநோய் பாதிக்கும் அபாயம்

📚📚📚📚📚📚📚📚📚