Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 13 November 2015

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்.

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்.
மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தற்செயல் விடுப்பு (casual leave) எடுக்கும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய 4 அமைப்புகளின் தொகுப்பான ரிசர்வ் வங்கி அதிகாரிகள்மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நவம்பர் 19-ம் தேதி தற்செயல் விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இதனை அனைத்திந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு தலைமைச் செயலர் சமீர் கோஷ் தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நிதிக் கொள்கைக்கான கமிட்டியை அமைத்து, இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி மட்டுமே கவனித்து வந்த நிதிக்கொள்கையில் தலையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனை எதிர்த்து இந்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.ஆர்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், வரைவு நிதிச் சட்டம் மற்றும் சில சீர்திருத்த சட்டங்கள் மூலம் மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முடக்க நினக்கும் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்த வேலை நிறுத்த அறிவிப்பு. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC : 813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு:

TNPSC : 813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு
கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள்.

நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வழியில் படித்தவர்களுக்குதமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ்அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.

விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்குகிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித்தேர்வு: இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்

ஆசிரியர் தகுதித்தேர்வு: இடைநிலை, பட்டதாரிகள் ஏமாற்றம்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது.தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3 தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. முதல் தகுதித் தேர்வு 2012 ஜூன் மாதமும், அடுத்த சிறப்பு தேர்வு அக்டோபர் மாதமும் கடைசி யாக 2013 ஆகஸ்ட் மாதமும் நடத் தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்தது.ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு (82 மதிப் பெண்) அளிக்கப்பட்டது. ஆசிரியர்தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.

இந்த விதிமுறையை சிபிஎஸ்இ சரியாக கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டின்முதல் சி-டெட் தேர்வு பிப்ரவரியிலும், 2-வது தேர்வு கடந்த செப்டம்பரிலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இத னால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும்பி.எட். பட்டதாரி களும் பணியில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிக் கப்பட்டதையும், வெயிட்டேஜ் மதிப் பெண் முறையில் (பிளஸ்-2, ஆசிரி யர் பயிற்சி, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப் பெண் அளித்து தேர்வு செய்யும் முறை)ஆசிரியர்களை தேர்வு செய் வதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதித்தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போது ஒன்றும் சொல்ல இயலாது’’ என்று தெரி வித்தனர்.

Consolidate List of Good Android apps

Consolidate List of Good Android apps:
1. Sellinam
2. UC browser
3. Statebank freedom
4. Statebank anywhere
5. IRCTCconnect
6. Cam scanner
7. QR droid
8. Tamil dictionary
9. English dictionary
10. ES file explorer
11. Beauty plus
12. Gmail
13. Whatsapp
14. Gpf cps..
15. Facebook lite
16. Tamil calendar
17. To do reminder
18. Lovely photo frames
19. WPS office
20. You tube downloader
21. Android assistant
22. Avast antivirus..
22. Temple run..
24. newshunt
25.Samayal
26.drop box
27.Operamini
28.clean master
29.mobile locater
30.maps
31.mp3 ringtone maker
32 eyarkai maruthuvam
33.mp3 merger
34. Split n merge pdf
35.Seithigal
36.Indianrail..
37. Subway surf..
38.aviary
39.adobe reader..
40. Candy crush..
41. Navigation
42.Smsnow
43.way2sms
44.bobble
45.fiipkart
46.paytm
47.cricbuzz
48. ireff
49.indane
50.viber
51. tubemate
52.dodol phone... SMS, net, call usage app... matra monitr vida ithu nallarkum..
53.vikatan
54.Call plus
55.keep sms
56.battery plus ( hide photo, contact,sms)
57.gallery lock
58.true caller... in which u can find out their name easily...
59.Om tamil calender...
60.Share it..
61. Mx player..
62. Pip camera..
63. Telegram..
64. Hike..
65. Hideme..
66. Voice changer..
67. Easy..
68. Video to mp3..
69. Aicel..
70. Textcutie..
71. Photo collage..
72. Snapdeal..
73. Ebay..
74. Video show..
75. Amazon..
76 .Kalvi siragukal
📚📚📚📚📚📚📚📚📚

22 வருடங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்திருக்கும் பாலாறு!

அதிசயம் ஆனால் உண்மை...
22 வருடங்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்திருக்கும் பாலாறு!

சென்னை உள்ளிட்ட வடமாவட்ட மக்களுக்கு நீராதார நம்பிக்கை ஒன்று உண்டென்றால் அதன் பெயர் பாலாறு.  இன்றைய இளைய தலைமுறையினர் சென்னையிலிருந்து பேருந்துகளில் பயணிக்கும் போது பல இடங்களில் தொடர்பற்று மேம்பாலங்கள் குறுக்கிடுவதை பார்க்கலாம். இருபக்கமும் அதள பாதாளமாய் இருக்க, அதன்மீது வாகனங்கள் செல்லும்.

அந்த பாதாளங்கள் இருக்கும் இடத்தில்தான் 'முந்தியொரு காலத்துல' பாலாறு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று பாடம் படிக்கும் மாணவச் செல்வங்கள் மூன்றாவதாய் வருகிற பாலாற்றை தாங்கள் வாழும் காலத்திலேயே மீண்டும் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

(1993-ல் ஒருமுறை காஞ்சி மாவட்டமே, வெள்ளத்தில் மிதக்க, அப்போதுதான் பாலாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது. ஆற்றுப் பாலமும் மூழ்கியது)

22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே பாலாற்றில் நீர்வரத்து ஏற்படத் தொடங்கியிருக்கிறது. பாலாற்றின் அடிவயிற்றை  கிழிக்கும் மணற் கொள்ளையரின் கருவிகளை இனி வருங்காலங்களில் கைப்பற்றிடும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

பாலாற்றை சுற்றியுள்ள மக்களுக்கு இன்றுதான் திருவிழா கொண்டாட்டம் என்றால் அது மிகையல்ல.. பாலாற்றில் இனி உயிரினங்கள் துள்ளி விளையாடவும், கரையோரத்தில் பசுமைகள் கண்களை குளிரூட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசின் முக்கிய கடமை.
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

ஃபேஸ்புக்கில் பவர்பாயிண்ட்

ஃபேஸ்புக்கில் பவர்பாயிண்ட்

மாநாடு, கருத்தரங்கு, அலுவலகக் கூட்டங்கள் என்றால் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் தானாக நினைவுக்கு வரும். அலுப்பூட்டக்கூடியது என்று சிலர் விமர்சித்தாலும் மணிக்கணக்காகப் பேச வேண்டிய விஷயங்களைக் கூட பவர்பாயிண்ட் காட்சி விளக்கமாக கச்சிதமாக முன்வைக்கலாம்.

இப்போது பவர்பாயிண்ட் சேவையை மேலும் சுவாரஸ்யமாக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மைரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்' எனும் பெயரில் ‘பிளக் இன்' வசதியாக இதை அறிமுகம் செய்துள்ளது.

சேவையின் பெயரைப் பார்த்ததுமே அதன் தன்மை புரிந்திருக்குமே. ஆம்! இந்தச் சேவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடகச் சேவைகளில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வழிசெய்கிறது. தனி ஸ்லைடுகள் ஒளிப்படமாகப் பகிர்ந்துகொள்ளலாம். அல்லது மொத்தக் காட்சி விளக்கத்தையும் ஒளிப்பட ஆல்பமாகப் பகிரலாம். விரும்பினால் ஒருபடி மேலே போய் வீடியோ வடிவிலும் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த ஸ்லைடுகளைப் பார்த்து ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் பவர்பாயிண்ட் செயலியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, காட்சி விளக்கங்களை நேரடியாக ‘ஒன்டிரை’வில் கோப்பாக சேமித்துக்கொள்ளலாம்.

பவர்பாயிண்ட்டுக்கு மிகவும் தேவையான அப்டேட்தான் இல்லையா?

புதிய திட்டங்களில் ஈடுபட மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ‘மைக்ரோசாஃப்ட் கராஜ்' திட்டத்தின் கீழ் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய குழுவில் நம்மவரான வித்யாராமன் சங்கரநாராயணனும் இடம்பெற்றுள்ளார்.

மாநாடு போன்றவற்றில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் அளிக்கும்போது ட்விட்டரில் அதைப் பகிர்ந்துகொண்டால் பார்வையாளர்கள் அதன் மீது கருத்து தெரிவிப்பது சாத்தியமாகலாம். அதற்கு கேள்வி பதில் நேரத்தின்போது அழகாக பதிலும் சொல்லலாம் என்கிறார் அவர்.

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

   ஆசிரியர்களின்  பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
         தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி,
அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

        இந்த பணி பதிவேடுகளில் ஆசிரியர்களின் விடுப்பு தொடர்பான பதிவுகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடக்க கல்வி இயக்குநருக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் தமிழக தொடக்க கல்வித் துறை இயக்குநர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

       உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண் டும்.

        2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு

         உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப் பதிவேடு களை உரிய காலத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் அவர்கள் பயின்ற உயர்கல்வி விவரங்களை பதிவு செய்யும் முன்பு உயர்கல்வி பயில்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும், சான்றிதழ்கள் தற்காலிகமா? நிரந்தரமானதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டிலும் டிச.31ம் தேதி ஒவ்வொரு ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல், பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் ஆகியவை பணி பதிவேட்டில் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தான் தயாரிக்கப்படுகிறது. எனவே, சரியான சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் தவறுகள் நடந்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அலு வலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்களின் வளர் ஊதியம், பதவி உயர்வு, ஊதியம் நிர்ணயம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய அனைத் தும் பணி பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.
எனவே ஒவ் வொரு உதவி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் விவரங்கள் விடுபட்டிருந்தால் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து பணி பதிவேடுகளும் அலுவலகத்தில் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
           உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி மாறுதல் மூலம் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் பெற்று செல் லும் போது அனைத்து ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் ஆசிரியர் எடுத்த விடுப்புகள் மற்றும் பணி சரிபார்ப்புகள் அனைத்தையும் பதிவு செய்து விட்டுத் தான் செல்ல வேண் டும்.
         உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வு செய் யும் போது இந்த விவரங்களை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
📚📚📚📚📚📚📚📚📚

நாளை குழந்தைகள் தினம்

நாளை குழந்தைகள் தினம்
நவம்பர் 14
🙎🙎🙎🙎🙎🙎🙎🙎🙎
நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தை வேறு பாணியில், சாச்சா நேரு என்று குழந்தைகள் மகிழ்ச்சியோடு கூறி வருகிறார்கள். அதாவது மறைந்த பாரத பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, பச்சிழம் குழந்தைகள் மீது எத்தனை பாசமும் பரிவும் நம்பிக்கையும் வைத்திருந்தார் என்பதை நினைவூட்டிடும் வகையில், அவர் மறைவுக்குப்பின் இந்த நாள் வரை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அந்த தினம் தான் நவம்பர் 14-ம் நாள்.

மறைந்த நேரு அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால் இந்த இளம் குழந்தைகள் சரியான முறையில் போதிக்கப்படவேண்டும் என்ற விஷயத்திலும் ஆர்வம் காட்டினார்.

அவர் வாழ்ந்த காலம் கடந்து போயிற்று. ஆனால் இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையில், தோன்றுகின்ற, வாழ்ந்து வருகின்ற குழந்தைகள் விசித்திரமான மன நிலையை, ஆர்வங்களை கொண்டு இருப்பதால் பெற்றோர்களுக்கு இது ஒரு சவாலாக தோன்றுகிறது. இருப்பினும் குழந்தைகள் தினத்தைக் குறிக்கும் இம்மாதத்தில் குறிப்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் சில வினாடிகள் கூர்மையாக கவனித்துக் கொண்டு அதன்பின் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடதிட்டங்கள், போதிக்கும் முறைகள் என்பதை தீர்மானித்துக் கொண்டால், அந்த சிறப்பான அணுகுமுறைதான் இன்றைய தலைமுறையினருக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு ஆக்கப்பூர்வமான சாதனைகளை நிகழ்த்தவும் சுபிக்ஷமான வாழ்க்கை வாழ்ந்து காட்டவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும்

தமிழகம் :
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும்
📚📚📚📚📚📚📚📚📚

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் பெரும் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் உண்டானது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்ததால் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், பெங்களூரிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக நிலை கொண்டிருந்தது. அது தற்போது வங்கக்கடலுக்கு இடம் பெயர்ந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. அதேபோல, வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலையும் உருவாகி இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதன்கிழமை நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (வெள்ளிக்கிழமை), தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இதற்கிடையே, தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து சனிக்கிழமை, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சனிக்கிழமை முதல் 16ம் தேதி, திங்கள்கிழமை வரை தமிழகம் முழுவதும் மழையை எதிர்பார்க்கலாம். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
📚📚📚📚📚📚📚📚📚

New cyclone has formed in south east bay 1250km from Chennai

New cyclone has formed in south east bay 1250km from Chennai. heavy rainfall from today for next 3 days

SABL LOGOS DESCRIPTION

SABL LOGOS DESCRIPTION FOR CLASSROOM DISPLAY AND TO FAMILIARIZE STUDENTS.