Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 14 November 2015

நாளை முதல் அனைத்து சேவைகளுக்கும் சேவை வரி அரை சதவீதம் உயர்வு

தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட சேவை வரி நாளை முதல் அமலுக்கு வருகிறது.

தொலைபேசி கட்டணம், ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது. கடந்த மே 31–ந்தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1–ந்தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

அதன்பின்னர் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு அரை சதவீதம் உயர்த்தியது. அதனால், சேவை வரி 14.5 சதவீதமாக இருக்கும்.

இந்த அரை சதவீத சேவை வரி உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. எனவே, வருகிற 15–ந்தேதி முதல் சேவை வரியின் கீழ் வரும் அனைத்து பணிகள் மற்றும் சேவைகளுக்கும் 14.5 சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும். இந்த கூடுதல் அரை சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்படும்.
📚📚📚📚📚📚📚📚📚

இனி மாணவர்கள் தேர்வெழுதிய விடைத்தாள்கள் பெற்றோர் பார்வைக்கு

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், நடந்து முடிந்த தேர்வுகளின் விடைத்தாள்களை பெற்றோரின் பார்வைக்கு அனுப்பி வைக்க சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அரசு, உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில், பருவத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த மாதத்தில், காலாண்டு தேர்வு மற்றும் இடை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், மாணவர்கள் எழுதிய

விடைத்தாள்களை, பள்ளி நிர்வாகம் பெற்றோரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், விடைத்தாள் சேதமாகிவிடும் என்பதாலும், அதன் பின் அதை விற்பனை செய்ய முடியாது என்பதாலும், மாணவர்களிடம் வழங்குவதில்லை.

அரசு பள்ளிகளில் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும், இதே நிலை நீடித்தது. இதனால், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, பெற்றோர் முழுமையாக தெரிந்து கொள்ள முடியாத நிலை உருவானது.

இந்நிலையில், நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகளின் விடைத்தாள்களை, பெற்றோரின் பார்வைக்கு அனுப்பி வைக்க, சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகௌரி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கும், இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
📚📚📚📚📚📚📚📚📚

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி எதிர்நோக்கும் அபாயங்கள்


இ-சேவை மையங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மையங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இ-சேவை மையங்கள் மூலமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகத்தில் ஒரு இ-சேவை மையமும், தமிழகத்தில் உள்ள மொத்தம் 264 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தலா ஒரு இ-சேவை மையமும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு இ-சேவை மையமும், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 54 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு இ-சேவை மையமும், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு இ-சேவை மையமும் என மொத்தம் 339இடங்களில் இ-சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அமைத்துள்ளது.

இ-சேவை மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த 15,55,710 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7,80,784 நபர்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.28,658 நபர்களுக்கு கைபேசி எண்/இ-மெயில் முகவரி மாற்றம் செய்து தரப்பட்டுள்ளது. 2,818 நபர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.தற்போது 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங்களில் உள்ள இம்மையங்கள் வாயிலாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வழங்கப்படும் இணையவழி விண்ணப்ப சேவைகளான நிரந்தரப்பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் துவக்கி உள்ளது.நிரந்தரப் பதிவு செய்ய ரூ.50/-ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30/-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூ. 5/-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ. 20/-ம், சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவுக் கட்டணமான ரூ.50/-யும் மற்றும் நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை இம்மையங்களில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் செலுத்தியதற்கான ஒப்புகைச் சீட்டினை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசு இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரூ.1,500 கோடி மதிப்பில் அரக்கோணத்தில் அதிநவீன விமானம்:

ரூ.1,500 கோடி மதிப்பில் அரக்கோணத்தில்
அதிநவீன விமானம்: பாதுகாப்புதுறை அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானத்தளம் உள்ளது. இங்கு கடற்படையின் விமான பிரிவில் பயன்படுத்தக்கூடிய அதிநவீன போர் விமானங்களும், கண்காணிப்பு விமானங்களும், ஹெலிகாப்டர்களும் உள்ளது. அதேபோல் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களும், விமானிகளும் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை பெற்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கடற்பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கவும், போரில் அதிநவீன கருவிகளை பயன்படுத்தக்கூடிய, பி8ஐ வகை விமானம் வாங்க மத்திய அரசு திட்டமிட்டது, இதற்காக அமெரிக்காவுடன் இந்த ரக விமானங்களை முதன் முதலாக, 1,500 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, விமானங்கள், ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டன. விமானத்தை கடற்படையில் இணைக்க நடந்த விழாவில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்று, பி8ஐ விமானத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்திய கடற்படை தளபதி ராபின் தவன், கிழக்கு பிராந்திய தளபதி சோனி, அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை தளபதி வினோத்குமார் பிஷாரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மனோகர் பாரிக்கர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமரின் மேக் இன் இந்தியா உள்நாட்டில் தயாரியுங்கள், உள்நாட்டில் வாங்குங்கள் என்ற கொள்கையின்படி, நாட்டில் பாதுகாப்பு துறையிலும் அதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில், உள்நாட்டு தயாரிப்புக்காக, 23 ஆயிரம் கோடி முதல், 24 ஆயிரம் கோடி ரூபாய் வரை, அதாவது, 35 சதவீதம் உள்நாட்டில் போர்க்கருவிகள் தயாரிக்கப்பட உள்ளன. ஒரு பணிக்கு ஒரு ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர்ந்து போராடி வருவதும், பதக்கங்களை தீயில் போட்டு எரிப்பதும் அவர்கள் நம் நாட்டையும் பாதுகாப்பு துறையையும் கொச்சைப்படுத்தும் செயல். இது அவர்களின் தியாகத்திற்காக அளிக்கப்பட்டது. இதை கொச்சைப்படுத்தக் கூடாது. இது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையின்படி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
📚📚📚📚📚📚📚📚📚

வகுப்பறையில் மழை கொட்டியதால் பள்ளிக்கு பூட்டு போட்ட பெற்றோர்

வகுப்பறையில் மழை கொட்டியதால் பள்ளிக்கு பூட்டு போட்ட பெற்றோர்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, மேல்பாக்கத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில், 94 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு மாணவர்கள் சென்றபோது, வகுப்பறைக்குள் நீர் முழுவதும் நிரம்பி காணப்பட்டது. மேலும் கான்கிரீட் தளங்கள் உடைந்து விழும் நிலையிலும் காணப்பட்டது. இதனால், பள்ளி தலைமை ஆசிரியை கனகமணி, நெமிலி உதவி தொடக்க கல்வி அலுவலர் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது அவர் வகுப்பறைக்குள் இருக்கும் மழை நீரை வெளியேற்றிவிட்டு, மாணவர்களை அமர சொல்லுமாறு கூறினார். தகவலறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக்கு பூட்டு போட்டனர். மாணவர்கள் அருகிலிருந்த கோவில் வளாகம் மற்றும் நூலக கட்டடத்தில் அமரவைக்கப்பட்டனர். தகவலறிந்த வி.ஏ.ஓ., சாம்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
📚📚📚📚📚📚📚📚📚

வேலூர் மாவட்டத்தில் 12 துணை தாசில்தார் மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 12 துணை தாசில்தார் மாற்றம்

வேலூர் மாவட்டத்தில், 12 துணை தாசில்தார்களை பணியிடம் மாற்றம் செய்து, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் ஆதிதிராவிடர் தனி தாசில்தார் அலுவலக உதவியாளராக பணியாற்றிய சாந்தி, பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் தலைமையிட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக உதவியாளர் சரவணமுத்து பதவி உயர்வு பெற்று, வேலூர் தாலுகா வரவேற்பு பிரிவு தனி துணை தாசில்தாராகவும்,வேலூர் தாலுகா வரவேற்பு பிரிவு தனி துணை தாசில்தாராக பணியாற்றிய மோகன், வாலாஜா வட்ட வழங்கல் அலுவலராகவும், வாலாஜா வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி ரமேஷ், அரக்கோணம் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். அரக்கோணம் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய பரசுராமன், அரக்கோணம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், ஆற்காடு தாலுகா உதவியாளராக பணியாற்றிய பாலாஜி, பதவி உயர்வு பெற்று ஆற்காடு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய மோகனன், வேலூர் தாலுகா தலைமையிடத்து தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக உதவியாளராக பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், பதவி உயர்வு பெற்று அணைக்கட்டு தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் தாலுகா அலுவலக உதவியாளராக பணியாற்றிய பூங்கொடி, பதவி உயர்வு பெற்று வாணியம்பாடி தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், வாணியம்பாடி மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய சுமதி, திருப்பத்தூர் தாலுகா மண்டல துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம் பதவி உயர்வு பெற்று வாலாஜா தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், ஆற்காடு மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய பாலமுருகன் கலெக்டர் அலுவலக டி பிரிவு தலைமை உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
📚📚📚📚📚📚📚📚📚

வேடந்தாங்கலில் குவிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள்

வேடந்தாங்கலில் குவிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள்

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வேடந்தாங்கல் ஏரி நிரம்பியது. இதனால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கலில் குவிந்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால், கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக வியாழக்கிழமை முதல் திறக்கப்படுகிறது.

சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கலுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பறவைகள் வருவது வழக்கம்.

ஆனால், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 1,531 பறவைகளே வந்துள்ளன. இதற்கு பிறகு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கோடைக் காலத்தில் மூடப்பட்டது.

ஏரியில் நீர் வற்றியதால் பறவைகளும் சரணாலயத்துக்கு வரவில்லை. இதைப் பயன்படுத்தி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

1962-ஆம் ஆண்டு முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தச் சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் சராசரியாக 30 ஆயிரம் பறவைகள் வந்து செல்கின்றன.

தாமதம்: இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் இருந்து இந்த பறவைகள் வாரக் கணக்கில் பறந்து இங்கு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, வேடந்தாங்கலில் பறவைகளைக் காண முடியும். ஆனால் இந்த ஆண்டு மழை தாமதமாக பெய்ததால், இப்போதுதான் வேடந்தாங்கல் ஏரி நிரம்பியுள்ளது.

வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகளுக்கு ஏரியைச் சுற்றியுள்ள ஏரிகளில் கிடைக்கும் மீன்கள், விவசாய நிலத்தில் உள்ள சிறு சிறு பூச்சிகள்தான் பிரதான இரையாகும்.

வலையபுத்தூர் ஏரி: வேடந்தாங்கலுக்கு அருகில் இருக்கும் வலையபுத்தூர் ஏரியில் இருந்துதான் தண்ணீர் வரும். எனவே, இந்த ஆண்டு வனத் துறையினர் மூலம் வலையபுத்தூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்குச் செல்லும் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையிலேயே வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் டேவிட் ராஜ் கூறியதாவது:

முதல் நாள் மழைக்கு பிறகு, திங்கள்கிழமை காலை 500 பறவையும், செவ்வாய்க்கிழமை காலை 2 ஆயிரம் பறவைகளும் புதன்கிழமை எடுக்கப்பட்ட கணக்கின்படி 5,554 பறவைகளும் காணப்பட்டன. இந்தப் பறவைகள் வங்கதேசம், பர்மா, இலங்கை, சீனா, சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளன. மழை பெய்தால் பார்வையாளர்கள் ஒதுங்குவதற்கு மூன்று கூடாரங்கள், பறவைகளைக் கண்டுகளிக்க தொலைநோக்கி கருவியுடன்கூடிய மூன்று கோபுரங்கள், இது தவிர பைனாகுலர் இலவசமாக தரப்படும். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 5, குழந்தைகளுக்கு ரூ. 2 வசூலிக்கப்படுகிறது. மேலும் வாத்து வகைகளைப் பார்க்க வேடந்தாங்கலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கரிக்கிளி சரணாலயத்துக்குச் செல்லலாம், இங்கு அனுமதி இலவசம் என்றார்.

வேடந்தாங்கலுக்கு வந்துள்ள பறவைகளும், எண்ணிக்கையும் !

நத்தைகொத்தி நாரை 2,020

வெள்ளை அரிவாள் மூக்கன் 1,180

நீர் காகம் 320

சாம்பல் நாரை 200

வக்கா 1,003

பாம்புத்தாரா 41

ஊட்டிவால் வாத்து 70

வெள்ளை கொக்கு 520

உன்னி கொக்கு 200

இந்தப் பறவைகள் கணக்கு புதன்கிழமை வந்தது மட்டுமே. பறவைகள் எண்ணிக்கை மேலும் உயரும் என்று தமிழக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் 188 காலி பணியிடங்கள் : சம்பளம்: ரூ.9,300 - 34,800 - 4200

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 166 இளநிலை வரை தொழில் அலுவலர் (Junior Draughting Officer) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு
வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன.

கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து பல மாணவர்கள் காயமடைந்தனர். எனவே, பழுதடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடந்தது.வேலுார் மாவட்டத்தில், 743 பஞ்சாயத்துகளில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு இல்லாத, 151 பாழடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பள்ளி கட்டடங்களை இடிக்க, ஊரக வளர்ச்சி துறையினர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் நந்தகோபால், அரசின் அனுமதி பெற்று, பாழடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்.

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை

கல்வியியல் கல்லூரி பல இருந்தும் திறமையான ஆசிரியர் இல்லையே: NCERT மண்டல இயக்குனர் வேதனை
'தமிழகத்தில் கல்வியியல் கல்லுாரிகள் பல இருந்தும் திறமையான ஆசிரியர்கள் உருவாவதில்லையே' என, என்.சி.இ.ஆர்.டி., மண்டல இயக்குனர் வேதனை தெரிவித்தார்.காந்தி கிராம பல்கலை கல்வியியல்துறை, தேசிய தேர்வு சேவை மையம் இணைந்து நடத்திய 'தேர்வு முறையில் சீர்திருத்தங்கள்' என்ற தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது.தேசிய தேர்வு சேவை மைய தலைவர் பாலகுமார் முன்னிலை வகித்தார்.

பல்கலை பதிவாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், “கற்றல் திறன் குறைபாடுகளால் ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள் 4.6 சதவீதமே படிக்கின்றனர். ஆந்திரா, உ.பி., ம.பி., பீஹார் மாநிலத்தவர் அதிகம் படிக்கின்றனர். தமிழக மாணவர்கள் நுழைவதற்கு மனப்பாட முறையே தடையாக உள்ளது”, என்றார்.திரும்ப திரும்ப தேர்வுதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்.சி.இ.ஆர்.டி.,) மைசூர் மண்டல இயக்குனர் ராவ் பேசியதாவது: பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு முறைகள், மதிப்பிடுதல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த தேர்வு முறைகள் உருவாக்கப்பட வேண்டும். பாடம் குறித்த புரிதல் ஏற்படும் வரை திரும்ப திரும்ப மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும்.பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் சோதனை முறைகள், ஆய்வுக்கூடங்களில் கற்றுத்தரப்படுவது இல்லை. இது எதிர்காலத்தில்மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை பாதிக்கும்.

இசை, நடனம், ஓவியம், நடிப்பு சார்ந்த தனித்திறன்களை மதிப்பிடப்படவேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்கு கற்றலில் உற்சாகம் பிறக்கும். தமிழகத்தில் ஆசிரியர்களை உருவாக்கும் கல்வியியல் கல்லுாரிகள் நிறைந்துள்ளன. ஆனால் அங்கிருந்து திறமையான ஆசிரியர்கள் வெளியேறுவது இல்லை. ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் முறைகளே தேர்ந்த மாணவர்களை உருவாக்கும், என்றார். கருத்தரங்க ஏற்பாடுகளை துறைத்தலைவர் ஜாகிதாபேகம், உதவிப் பேராசிரியர் முருகன் செய்திருந்தனர்.

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், தனித்தேர்வர்கள் நேரில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் கட்டணமாக ரூ.187, மறுமுறை தேர்வு எழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, இதரக்கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும். அதோடு இணையதளப் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பத்தைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பஎண்ணைப் பயன்படுத்தியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய இயலும். எனவே, இதைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.

சேவை மையங்களின் விவரங்கள், தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.மதிப்பெண், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களின் நகல்கள், பத்தாம் வகுப்பு அல்லது அதற்குச் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தேர்வர்கள் சேவை மையத்துக்கு எடுத்து வர வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் - செவ்வாயில் கன மழை பெய்யும்.

திங்கள் - செவ்வாயில் கன மழை பெய்யும்.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் புயலாக உருவெடுக்கலாம் என்றும் இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார்.

முதல்வர் தொகுதியில் அமைச்சர்கள் ஆய்வு:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் மழைநீர் பாதிப்பை ஆய்வு செய்யும் பொருட்டு, அமைச்சர்கள் வேலுமணி, வளர்மதி, கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு,ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி: நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச்சென்ற 2 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேடர்பாளையம் போலீசாரின் உதவியுடன்பலியான பெண்களின் உடல்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. கடலில் வீணாக கலந்த 41 டி.எம்.சி. மழைநீர்:வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம், இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. கடந்த 9 ஆம் தேதி மட்டும், 40 டி.எம்.சி.தண்ணீர் வங்கக்கடலில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தில் பெய்துவரும் மழையில் சிக்கி இதுவரை 55 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேற்று (12ம் தேதி) வரை கடலூர் மாவட்டத்தில் 7 பேர் உட்பட 48 பேர் பலியாகியிருந்ததை தொடர்ந்து, இன்று (13ம் தேதி) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 55 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு :சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதில் சிக்கி மரணமடைந்த 7 பேருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் திறப்பு: பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை கொட்டியுள்ளதால், வினாடிக்கு ஆயிரம் கனஅடி என்ற அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, குழி்த்துறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து, அங்கிருந்தும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.