Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 18 November 2015

விஜய் தொலைக்காட்சியில் கோவை மாவட்டத்தின் மூலத்துறை அரசுப்பள்ளி மாணவர்கள்...


கோவை மாவட்டத்தில் உள்ள  மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு (22-11-15) மாலை 7:00 மணிக்கு  "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"..நிகழ்ச்சியின் அடுத்த சுற்றில் விளையாட உள்ளார்கள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூரை நியமித்து குடியரசு தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக
டி.எஸ்.தாக்கூரை நியமித்து குடியரசு தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

தற்போதைய உச்ச நீதிமன்ற
நீதிபதி எச்.எல்.தத்து வரும் டிசம்பர் 2 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். புதிய நீதிபதி வரும் டிசம்பர் 3 ஆம் தேதி
பதவியேற்கிறார்

வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்

வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் மாவட்டங்களுக்கு நவம்பர் 22-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

☔☔☔☔☔☔☔
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர் மாவட்டங்களுக்கு நவம்பர் 22-ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
☔☔☔☔☔☔☔

35 பள்ளி கட்டடங்கள் ராமநாதபுரத்தில் இடிப்பு


ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த 35 பள்ளி கட்டடங்களை இடிக்கப்பட்டன.பழுதடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் படிக்கும் மாணவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்; அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பழுதடைந்த கட்டடங்களை இடிக்க வேண்டுமென, கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது.

இதையடுத்து ராமநாதபுரத்தில் தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. இதில் 80 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டன. அங்கு படித்த மாணவர்கள் வேறு கட்டடங்களுக்கு மாற்றப்பட்டனர்.உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி கட்டடங்களை பொதுப்பணித்துறையும், தொடக்க, நடுநிலைப் பள்ளி கட்டடங்களை உள்ளாட்சி அமைப்புகளும் இடிக்க கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 35 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு கூறுகையில், “பழுதடைந்த கட்டடங்களில் வகுப்பறை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த கட்டங்கள் கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து பழுதடைந்த கட்டடங்களும் இடிக்கப்படும்,” என்றார்.

சத்துணவு பொருட்கள்பத்திரப்படுத்த உத்தரவு


தொடர் மழையால், சத்துணவு மையங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் பாதிக்காதவாறு, பத்திரப்படுத்தும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 42,970 பள்ளி சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியர் சாப்பிடுகின்றனர்; 97ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், புயல், மழைக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான இடங்களில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில், வெள்ளம் புகுந்துள்ளது. பல மையங்களின் மேற்கூரைகள் ஒழுகுகின்றன. எனவே, சத்துணவு மைய இருப்பு அறையில் அரிசி, பருப்பு, கொண்டைக் கடலைஉள்ளிட்ட உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளனவா என, கண்காணிக்கும் படியும், மழையில் நனையாமல், பத்திரப்படுத்தும் படியும், அமைப்பாளர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி விடுமுறை தொடர்வது ஏன்?


சென்னை : மழை பாதிப்பு நீடிப்பதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு, இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மழை பாதிப்பு குறைந்த பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்,எப்போது பள்ளி திறக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

சென்னையின் உட்புற பகுதிகளில், வெள்ளம் வடிந்துள்ளதால், அங்குள்ள பள்ளிகள் இன்று திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது.விடுமுறை என்றபோதும், மழையால் வெளியில் செல்ல முடியாத மாணவ, மாணவியர், 'இன்னிக்கும் லீவா' என, பெற்றோர்களிடம் கேட்கும் நிலை உள்ளது.இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், 'பல பள்ளி வளாகங்களில் நீர் தேங்கியுள்ளது. சில பள்ளிகளின் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அனுப்பிய பின் தான், பள்ளிகளை திறக்க முடியும்' என்றனர்.

ஐ.ஐ.டி., நுழைவு தேர்வுதேதி அறிவிப்பு

உயர்கல்வி நிறுவனங்களில், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு, விண்ணப்ப பதிவு டிச., 17ல் துவங்கும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த, எம்.ஏ., 'டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' மற்றும் ஆங்கிலப் படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., நடத்துகிறது.

இரண்டு படிப்புகளிலும், தலா, 45பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். ஆனால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்வர். இந்த படிப்பில் சேர, சென்னை ஐ.ஐ.டி., நடத்தும், எச்.எஸ்.இ.இ., நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். 'வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, 2016 ஏப்ரல், 26ல் நடக்கும்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், டிச., 17 முதல் ஜன., 26க்குள், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் விவரங்களை, http://hsee.iitm.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர்ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், “தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு துறைகளிலும்பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர்களும், தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை “வெள்ள நிவாரண நிதி”யாக நவம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ள சம்மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார். அதேபோன்று அரசு அலுவலக ஒன்றியம் சார்பில் மாநில தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் ஜெயக்கொடி ஆகியோரும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசுக்குகடிதம் எழுதியுள்ளனர். மொத்தத்தில் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மேற்கண்ட 3 சங்கத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விசிறகுகளின் தலைப்புச்செய்திகள் 18-11-2015

📚கல்விசிறகுகளின் தலைப்புச்செய்திகள்
18-11-2015
🔵🔴🔵🔴🔵🔴🔵🔴🔵

📚தொடர் மழை காரணமாக 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று  (18/11/2015) விடுமுறை

📚மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்

📚பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்: பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து

📚குரூப் - 2ஏ' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை

📚சித்தா கலந்தாய்வு இன்று நடக்கிறது

📚பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்க சட்டம் அமல்படுத்த நீதிபதிகள் ஆய்வு கமிட்டி : ஐகோர்ட் முடிவு

📚கடலூர் மாவட்டத்தில் 500 பள்ளிகள் சேதம்

📚மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம்?

📚உதவி ஆய்வாளர் தேர்வு முடிவு: மனிதநேய மையத்தில் படித்த 306 பேர் வெற்றி

📚திருச்சி மாவட்டம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு வருகிற 18.11.2015 ( புதன்கிழமை ) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்உத்தரவு

📚ரூ.2,300 கோடி பி.எப். தொகை பங்குச்சந்தையில் முதலீடு

📚ஆசிரியர் பயிற்சியில் புதிய வழிமுறைகள்!

📚என்ஜினீயரிங் தேர்வுகள் இந்த வாரம் முடிய ரத்து

📚அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது

📚மழைக்கால பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை.

📚விழுப்புரம் மாவட்டத்திற்கு ன்று  (18.11.15) உள்ளுர் விடுமுறை.

📚DA: 50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு

📚ஆதார் எண் Online E -Pay Roll - ல் இணைக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

📚62 முக்கியமான ஆப்ளிகேசன்

📚7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு!!.

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு!!


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வுஅளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராகமீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.