Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 21 November 2015

Tamil Nadu Open University Hall Ticket

Flash News
Tamil Nadu Open University

B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket Published

Download in www.tnou.ac.in

வேளாண் பட்டம் இருந்தால்தான் இனி உரக்கடை லைசென்ஸ்:

மத்திய வேளாண் அமைச்சகம் உத்தரவு
பி.எஸ்சி., 'அக்ரி' பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே இனி உரக்கடை வைக்க லைசென்ஸ் பெற முடியும், என்று மத்திய வேளாண் அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய அரசு வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பெரிய அளவில் மானியம் வழங்கி வருகிறது.

ஆனாலும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் போலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க மத்திய அரசு முதல்கட்ட நடவடிக்கையாக உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனையில்பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளது.மருந்துக்கடை நடத்துபவர்கள் பி.பார்மசி பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்ற விதிமுறையை இந்திய மருத்துவ கழகம் மருத்துவத்துறையில் அமல்படுத்தி இருப்பது போல், இனிமேல் உரக்கடை வைக்க லைசென்ஸ் பெற வேண்டும் என்றால், அதற்கு விண்ணப்பிப்பவர் கண்டிப்பாக பி.எஸ்சி., அக்ரி பட்டம் பெற்று இருக்க வேண்டும், எனவேளாண்மைத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, பி.எஸ்சி., அக்ரி அல்லது வேளாண் பட்டயப்படிப்பு அல்லதுபி.எஸ்சி. கெமிஸ்ட்ரி பட்டம் பெற்றவர்கள் மட்டுமே உரக்கடை லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. மத்திய அரசின் இந்த உத்தரவுப்படி ஏற்கனவே உரக்கடை வைத்திருப்பவர்களுக்கு புதுப்பித்தலுக்கு எந்த பிரச்னை இல்லை. அவர்களின் லைசென்ஸ் வழக்கம் போல செல்லுபடியாகும். இனிவரும் காலங்களில் புதிதாக லைசென்ஸ் பெறுவதற்கு மட்டுமே இந்த புதிய உத்தரவு கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவால் உரக்கடை உரிமையாளர்களையும், உரக்கம்பெனிகளையும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

2016 ஜே.இ.இ.: டிச.1 முதல் விண்ணப்பிக்கலாம்

2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ.) அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.ஐ.டி. ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதலில் ஜே.இ.இ. பிரதானத் தேர்வும், பின்னர் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வும் நடத்தப்படும்.இதில், ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் படிப்புகளில் சேர முடியும்.ஜே.இ.இ. பிரதானத் தேர்வில் தகுதி பெற்று, அடுத்ததாக நடத்தப்படும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்விலும் தகுதி பெறுபவர்கள்ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.இப்போது 2016-ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. பிரதானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வு 2016 ஏப்ரல் 3-ஆம் தேதியன்றும், ஆன்-லைன் தேர்வுகள் 2016 ஏப்ரல் 9,10 ஆகிய தேதிகளிலும்நடத்தப்பட உள்ளன. மேலும் விவரங்களை www.jeemain.nic.in இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

வன சீருடை பணியாளர்கள் தேர்வு:

மதிப்பெண்கள் இணையத்தில் வெளியீடு
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. வனவர், கள உதவியாளர் பணிகளுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இதில், வினாக்களுக்கான இறுதி விடைகளும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களும் www.forests.tn. nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம்
7-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள் வருகிற 24-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.7-வது சம்பள கமிஷன்மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் தொடர்பான 900 பக்கங்கள் கொண்ட சிபாரிசு அறிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம், சம்பள கமிஷன் குழு தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் நேற்று முன்தினம் சமர்ப்பித்தார். 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை பறிப்பதாக உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 24-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம்(தமிழ் பிரிவு) அறிவித்துள்ளது.

வாரி வழங்குவது போல்...

இதுகுறித்து அந்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.துரை பாண்டியன் நிருபரிடம் கூறியதாவது:-மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்குவது போல் 7-வது சம்பள கமிஷன் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது. ஆனால் அது உண்மை இல்லை.மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரூ.18 ஆயிரம் தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.15 ஆயிரத்து 750 வாங்கி வருகிறார்கள். அதன்படி, ரூ.2ஆயிரத்து 250 மட்டுமே உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிலும், வைப்புநிதி, இன்சூரன்ஸ் தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் 580 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ.330 குறைவாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும். பல சலுகைகள் ரத்துவீட்டு உபயோக பொருட் கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு முன் பணம் வழங்கப்பட்டு வருகிறது.இனி அது வழங்கப்படாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பாண்டிகை காலங்களில் சம்பள முன் தொகையாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் இனி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் வாடகை கணக்கீடு உயர்த்தப்படாமல் 30 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ரகசிய அறிக்கை மூலம் ‘நன்று’ கிடைத்தால் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ‘மிக நன்று’ கிடைத்தால்மட்டுமே பதவி உயர்வு என்று கூறியிருப்பது, ஒரு சிலருக்கு மட்டுமேபதவி உயர்வு வாய்ப்பு அமையும். இதுபோன்று பல சலுகைகளை 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் பறிக்கப்பட்டுள்ளது

24-ந்தேதி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரையில் பரிந்துரை செய்யப்பட்ட ஊதிய கமிஷனில் 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரை தான் மிக மோசமானதாக உள்ளது. இந்த ஊதிய கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய மந்திரி சபை, செயலாளர்கள் கூட்டத்தில், 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 24-ந்தேதி சென்னை அண்ணாசாலை தலைமை தபால்நிலையம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அதன்பின்னர் வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

7-வது ஊதிய குழு : மகப்பேறு விடுமுறை நாட்கள்தொடர்கிறது மகப்பேறு 'லீவு':


ஆண், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை நாட்களை, அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ஏழாவது ஊதியக் குழு நிராகரித்து உள்ளது. எனவே, வழக்கம் போல, மகப்பேறின் போது, பெண் ஊழியர்களுக்கு, 180 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆண் ஊழியரின் மனைவியின் பிரசவத்தின் போது, அந்த ஊழியருக்கு, 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை தொடர்கிறது. இந்த சலுகை, இரு குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு படி:

மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மட்டும், இதுவரை வழங்கப்பட்டு வந்த, சி.சி.எல்., என்ற, 'சைல்ட் கேர் லீவ்' எனப்படும், குழந்தை பராமரிப்பு விடுமுறை, இப்போது ஆண்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மனைவி இல்லாத ஆண் ஊழியர்கள், தங்களின், 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளை பராமரிக்க, அவர்களின் பணிக்காலத்தில், இரு ஆண்டுகள் சம்பளத்துடன் விடுமுறை பெற்றுக் கொள்ளலாம். முதல் ஆண்டில், 100 சதவீத சம்பளமும், இரண்டாவது ஆண்டில், 80 சதவீத சம்பளமும், ஆண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ளபடி, கணவர் இல்லாத அரசு பெண் ஊழியருக்கு, வழக்கம் போல இந்த சலுகை தொடரும்.

7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும்'


'ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2016 ஜன., 1ம் தேதிமுதல் அமல்படுத்தப்படும் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, ஒரு கோடி பேரின் மாதாந்திர சம்பளம் மற்றும்ஓய்வூதியம், 23 சதவீதம் அளவுக்கு உயரும். அப்போது, அவர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த பணத்தை, அவர்கள் உபயோகமாக செலவழிக்க திட்டமிடுவர்.குறிப்பாக, 'குறைந்த விலையில் வீடுகள், கார்கள், இருசக்கர வாகனங்கள், நுகர்வோர் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்க முற்படுவர். இதனால், அவற்றின் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும். இது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் எப்போது அமல்படுத்தப்படும்

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் எப்போது அமல்படுத்தப்படும்
இரண்டு தவணைகளாக முந்தைய பரிந்துரை:

கடந்த, 2006ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட, ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், இரு ஆண்டுகள் கழித்து தான் அமல்படுத்தப்பட்டன. அதனால் மத்திய அரசின் சம்பள பில், 35 சதவீதம் அதிகரித்து, சம்பள உயர்வை மொத்தமாக கொடுக்க முடியாத நிலைஏற்பட்டு, 40 சதவீத தொகை, 2008 - 09ம் ஆண்டிலும், 60 சதவீத தொகை, 2009 - 10ம்நிதியாண்டிலும் வழங்கப்பட்டது.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை, அடுத்த ஆண்டு அமல்படுத்துவதால், நிதிப் பற்றாக்குறை மிக அதிகரிக்கும் என்ற அச்சம் தேவையில்லை. சற்றே அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தி விடுவோம். பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தச் செலவுகள் திடீரென வந்ததல்ல; ஏற்கனவே எதிர்பார்த்தது தான் சக்திகந்த தாஸ், பொருளாதார துறை செயலர்குறைந்தபட்ச சம்பள உயர்வு, 18 ஆயிரம், அதிகபட்ச சம்பள உயர்வு,2.5 லட்சம் ரூபாய்ஆண்டுக்கு, 3 சதவீத சம்பள உயர்வுக்கு சம்பளகமிஷன் பரிந்துரைசம்பள கமிஷன் பரிந்துரையால், ஆண்டுக்கு, 1.02 லட்சம் கோடி நிதிச்சுமை ஏற்படும்'கிரேடு சம்பளம், பே பேண்ட்' முறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளனசியாச்சின் பகுதியில் பாதுகாப்பு வீரர்களுக்கு, மாத சம்பளத்தில்,21 - 31 ஆயிரம் ரூபாய் வரை உயர்வு

பொருளாதார வளர்ச்சி 0.65 சதவீதம்:

அடுத்த ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட உள்ள, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.65 சதவீதம் கூடும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது; இது, ஆறாவது ஊதியக் குழுவின் போது, 0.77 சதவீதமாக இருந்தது.
* ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்தும் போது, 2016 - 17ம் நிதியாண்டில், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இது, மத்திய பட்ஜெட்டில், 73 ஆயிரத்து, 650 கோடி ரூபாய், ரயில்வே பட்ஜெட்டில், 28 ஆயிரத்து, 450 கோடி ரூபாய் என, பகிர்ந்து கொள்ளப்படும
்* ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை, 23.55 சதவீதம் உயர்த்தி வழங்க, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அடிப்படை சம்பளம் மட்டும், 16 சதவீத அளவுக்கும், அனைத்து விதமான படிகளும், 63 சதவீதம் அளவுக்கும் உயரும். சம்பளத்திற்கான அரசின் செலவு, 39 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, இரண்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். படிகளுக்கான செலவு, 12 ஆயிரத்து, 100 கோடி ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து, 400 கோடி ரூபாயாக இருக்கும். ஓய்வூதியத்திற்கான செலவு, 33 ஆயிரத்து, 700 கோடி அதிகரித்து, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 300 கோடி ரூபாயாகஇருக்கும்
* முன்னாள் ராணுவத்தினருக்கு, 'ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதால், சம்பள கமிஷன் பரிந்துரை அமல்கூடுதல் சுமையாகும்.

*.23.55 %:மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் பென்ஷன் உயர்வு
*.16 %:அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம்உயர்வு
*.63 %:படிகளில் உயர்வு
*.24 %:பென்ஷனில் உயர்வு

52ரத்து:* ரயில்வே ஊழியர் மற்றும் கேபினட்செயலர்களுக்கான கேளிக்கை படி
* குடும்ப கட்டுப்பாடு, முடி வெட்ட, பரிசோதனை, இறுதிச்சடங்கு, சேமிப்புக் கணக்கு, கூடுதல் வேலை படிகள
்* நர்சிங் ஊழியர்களுக்கான உணவக படி36:பிற படிகளுடன் இணைப்ப
ு* வாஷிங் அலவன்ஸ் எனப்படும் துணி துவைப்பு படி இணைப்ப
ு* குறிப்பிட்ட இடங்களுக்கான படிகள், இடர்பாடு மற்றும் கடினப்பணிபடியில் இணைப்பு108:

தொடரும், கூடுதலாகியுள்ள படிகள
்* மாற்றுப்பணி, தேசிய விடுமுறை மற்றும் மொழி படிகள், 50 சதவீதமாக அதிகரிப்பு
* இணையதளம், மொபைல், செய்தித்தாள் படிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன
* வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வழங்கப்படும் தினப்படி தொடர்கிறதுசம்பளத்தை அதிகம் சாப்பிடும் நான்கு துறைகள
்*.ரயில்வே: 36.60 %
*.உள்துறை: 23.98%*.

பிற துறைகள்: 19.17%*.
பாதுகாப்புத்துறை (சிவில்): 12.16%
*.தபால் துறை: 8.09%

சிறுபான்மை மாணவர்கள் மொழிப்பாடத்தை விருப்ப தேர்வாக எழுத அரசு அனுமதி

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறுபான்மை மாணவர்கள் தங்கள் மொழிப்பாடத்தை விருப்ப தேர்வாக எழுத தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாடு தமிழ் கட்டாய பாட சட்டம் -2006-இன் படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் பகுதி-1-ல் தமிழ்மொழி கட்டாய பாடம் ஆகும். அதேபோல், பகுதி-2-ல் ஆங்கிலமும், பகுதி-3-ல் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவையும் கட்டாய பாடங்கள்.

இந்த நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சிறுபான்மை மொழிப்பாடங்கள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள், ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு ஒரு தகவல் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதா வது:2016-ல் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லாத சிறுபான்மை மொழிகளை (அதாவது, தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது, இந்தி, சமஸ்கிருதம், அரபிக், பிரெஞ்சு, குஜராத்தி) தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் பகுதி-4-ல்சிறுபான்மை மொழிப்பாடத்தை ஒரு தேர்வாக எழுதிக்கொள்ள அனுமதிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.மேலும், சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு ஒரே தாள் கொண்ட தேர்வு மட்டும் நடத்தப்படும்.

சிறுபான்மை மொழிப்பாடங்களில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண், தேர்ச்சி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதேநேரத்தில் அந்த மதிப்பெண் விவரம், எஸ்எஸ்எல்சி சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று கூறியிருக்கிறார்.எனவே, பகுதி-4-ல் தேர்வெழுத உள்ள மாணவர்களின் பாட விவரங்களை தயாராக வைத்திருக்குமாறு அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை
அரசுப் பணியில் உள்ள ஆண்கள், மனைவியில்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து வந்தால் அவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.இப்போது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மட்டுமே குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஒரு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் (2 ஆண்டுகள்) விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.அரசு ஊழியர்கள், 18 வயது வரையுள்ள தங்கள் பிள்ளைகளைப் பராமரிக்க இந்த விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையிலான 7-ஆவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வியாழக்கிழமை அளித்தது. அதில், ஆண்களுக்கான குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளதாவது:இப்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் தங்கள் குழந்தைகளைத் தனியாக வளர்க்கும்பணியை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பை ஆண் ஊழியர்களுக்கும் அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.இந்த விடுப்புக் காலத்தில், முதல் 365 நாள்களுக்கு முழுச் சம்பளத்தை அளிக்கலாம். அடுத்த 365 நாள்களுக்கு 85 சதவீத சம்பளத்தை வழங்கலாம்.கணவரில்லாத பெண் ஊழியர்களும் தனியாக குழந்தைகளை வளர்க்கும்போது கூடுதல் சுமையை ஏற்க வேண்டியுள்ளது. அவர்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை ஓராண்டில் 3 பிரிவுகளாக எடுப்பதற்குப் பதிலாக 6 பிரிவுகளாக எடுக்கலாம் என்ற சலுகையை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சகம் விளக்கம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.

இது மத்தியஅரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இந்தச் செலவானது, நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ஊதியக் குழு பரிந்துரை என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இப்போது அதில் உள்ள பரிந்துரைகள் தெரிய வந்துள்ளன.எதிர்காலத்தில் நிகழும் சில மாற்றங்களைக் கருத்தில் கொண்டுதான் அரசு இலக்குகளை நிர்ணயித்து வருகிறது. எனவே ஊதியக் குழு பரிந்துரையால் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கில் பாதிப்பு ஏற்படாது என்றார் அவர்.

ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் குளறுபடி: கண்டுபிடித்து சரி செய்ய குழு அமைப்பு

தமிழகத்தில் சம்பளம் வழங்குவதில், 75 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 35 ஆயிரம் பேர் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். காணாமல் போன, 40 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பளம் பெறும் தலைப்பை கண்டுபிடித்து, முறையாக மாற்றுவதற்காக, மாவட்டந்தோறும் குழு அமைத்து, ஆய்வு நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில், 5,000த்துக்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன.

இவற்றில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், இயலாக்குழந்தைகளுக்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களில், ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களும், கடந்த சில ஆண்டுகளாக, புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்களும், தற்காலிக பணியிடங்களாக, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பணி நீட்டிப்பு அரசாணை வழங்கப்பட வேண்டும். இதுபோன்று, 75 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள், தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய நிலையில், 35 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே, இந்த தலைப்பின் கீழ், சம்பளம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள, 40 ஆயிரம் ஆசிரியர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஏற்படுத்திய குளறுபடிகளால், வேறு தலைப்பிலோ அல்லது நிரந்தர பணியிட சம்பளமோ பெற்று வருவதால், நிதி தணிக்கையில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்காலிக பணியிடங்களுக்கான, சம்பளத்தை சரியான தலைப்பில் பெற்று வருகின்றனரா என்பது குறித்து, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்டந்தோறும், ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிடம், பள்ளிகளில் பணியிடம் ஏற்படுத்திய விதம் குறித்த அரசாணை, தற்போது பெறப்பட்டு வரும் சம்பள தலைப்பு, அதில் ஏற்பட்டுள்ளகுளறுபடி உள்ளிட்டவைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பல பள்ளி தலைமை ஆசிரியர்கள், தெரிந்தோ, தெரியாமலோ, தற்காலிக பணியிடங்களுக்கு, அதற்கான தலைப்பில் சம்பளம் பெற்றுத்தராமல், நிரந்தர பணியிட தலைப்பில், பெற்று வழங்கி வருகின்றனர். இதை கண்டுபிடித்து, சரி செய்ய, இந்த ஆய்வு தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.