Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 28 November 2015

கல்வித் தகுதி மற்றும் ஊக்க ஊதியமும் அரசாணைகளும்



பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், இதர உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரின் அடிப்படை கடமைகள் குறித்து RTI வழியாக பெற்ற தகவல்கள்






புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 அரசுப் பள்ளிகளில் காய்கறி தோட்டம்: மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்க நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக முன்மாதிரியாக 5 அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி, வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.மணிமேகலை ஆலோசனைப்படி, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களின் நுண்ணூட்ட சத்துப் பற்றாக்குறையை போக்கவும் அரசுப் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்டத்தில் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதம்பாள், ஆலங்குடி, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கொத்தமங்கலம் மற்றும் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், முதல்கட்டமாக ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 சென்ட் நிலத்தில் அமைக்கப்பட்ட தோட்டத்தில் கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை, பரங்கி, பீர்க்கங்காய், சுரைக்காய், அவரை, பாகற்காய் விதைகள் விதைக்கப்பட்டன. மேலும், மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, முருங்கை கன்றுகளும் நடப்பட்டன.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.சூசை தலைமையில் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் வி.ஆர்.சாமிநாதன், எஸ்.மதியழகன், கே.தனலட்சுமி ஆகியோருடன் பள்ளி மாணவர்களும் ஈடுபட்டனர். இவற்றின் விளைபொருட்கள் மாணவர்களின் மதிய உணவுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

தொடக்கக்கல்வித் துறை-இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான காலஅட்டவணை

16.12.2015- தமிழ்.
17.12.2015- English
18.12.2015- கணக்கு
21.12.2015- அறிவியல்.
22.12.2015- சமூகவியல்.

23.12.2015 to 01.01.2016  பள்ளி விடுமுறை..

(As Per List of Holidays)

Thiruvallur DEE Proceedings Regarding Saturday working Days


அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015


NMMS Applications and instruction

NMMS

NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு


📚தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்

📚SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்

📚 30.11. 2015 to 11. 12. 2015க்குள் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்

📚15. 12. 2015க்குள் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

📚7. 12. 2015 to 19.12. 2015க்குள் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

📚விண்ணப்பக் கட்டணம் ரூ.50

📚 இணையதள முகவரி www.tndge.in

விஐடி பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்


விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாடு முழுவதிலும் 92 தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்பனையை வேந்தர் ஜி.விசுவநாதன் தொடக்கி வைத்தார். வேலூர் வளாகத்தில் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி,கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங் ஸ்பெசலைசேஷன் இன் பயோ இன்பர்மேடிக்ஸ், சிவில், கெமிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷசன்என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி,மெக்கானிக்கல், ஸ்பெசலைசேஷன் இன் எனர்ஜி, புரடக்ஷன் அண்டு இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பொறியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும், சென்னை வளாகத்தில் பி.டெக், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அடுத்தாண்டு (2016) ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை இணையதள முறையில் நாட்டில் உள்ள 118 முக்கிய நகரங்கள், துபை, குவைத், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நுழைவுத் தேர்வு நடக்கிறது.விண்ணப்பங்களைப் பெற ரூ. 990 செலுத்தி தலைமை தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் www.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ரூ.990 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்தாண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்


பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும்கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதையொட்டி, பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, அனைவரும் தெரிந்து, மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்து, கல்வித் தரத்தை உயர்த்த, 'சரன்ஷ்' என்ற இணைய இணைப்பு துவங்கப்பட்டுள்ளது.இந்த தளத்தை, அனைத்து பள்ளிகளும் பயன்படுத்துமாறு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.இதன் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள மண்டலங்களின், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வீதத்தை அறியலாம். மாணவர்கள் மற்றும் பெற்றோர், தனியாக, 'லாக் இன்' செய்து, தேர்வு மதிப்பெண்ணை பார்க்கலாம்.மேலும், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள், தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த கருத்துகளை பின்பற்றி, பாடங்கள் நடத்த பள்ளிகள் முன்வரலாம் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாள்களிலும் நுழைவுத் தேர்வுப் பயிற்சி


அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் நடத்தப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குஇந்தப் பயிற்சி விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வட்டார அளவில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகளில் 6,400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுஉள்ளிட்ட தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்வு பெற்று வருகின்றனர். இதையடுத்துஅரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு "டான் எக்ùஸல்' திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்தப் பயிற்சியில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளதால் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க டிச. 4 வரை கால அவகாசம்


வரும் 2016 மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையத்தின் மூலம் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 16 முதல் 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக தனித் தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள்சேவை மையங்களின் மூலமாக இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தமையங்கள் குறித்த விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு

பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பா
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர்.

10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலைகுனிவை ஏற்படுத்தியது. அதனால், இந்த ஆண்டு தேர்வுகளில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, அரசு பள்ளிகள் தேர்ச்சியும், மதிப்பெண்ணும் பெற வேண்டும் என, அதிகாரிகளும், ஆசிரியர்களும், உறுதி எடுத்துள்ளனர்.அதன்படி, தனியார் பள்ளிகளைப் போல், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப, அவர்களுக்கு மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும், அரையாண்டுத் தேர்வுக்கு முன், அனைத்து பாடங்களையும் முடிக்க வேண்டும் என, கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.அரையாண்டுத் தேர்வுக்குப் பின், பிப்ரவரி வரையிலான இரண்டு மாதங்களும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதில் மாணவ, மாணவியர், மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றனர்.நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, மாநில ரேங்க் பெறுவது குறித்தும்; சராசரி மாணவர்களுக்கு, 80 சதவீத மதிப்பெண் பெறுவதுகுறித்தும்; தேர்ச்சிக்கே தடுமாறும் மாணவர்களுக்கு, எந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், தேர்ச்சி அடையலாம் என்பது குறித்தும், மூன்று வகைகளில் பயிற்சி அளிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது.

இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.அதன்படி, ஒவ்வொரு மாணவரும், 'பள்ளி பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் வினா வங்கி புத்தங்களை மட்டும் படித்தால், 'சென்டம்' மதிப்பெண் வாங்க முடியாது என, எங்களுக்கு தெரியும்' என,எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், புத்தகத்தில் இல்லாத கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றதாக கூறி, அதற்கு மதிப்பெண் வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மேலும், மாணவர்கள் புத்தகத்தின் கேள்விகள் மற்றும் நுால் வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் வினா வங்கிகளையே, அதிகம் படிக்கின்றனர். பாடத்திட்டப்படி வழங்கப்படும் புத்தகத்தில், பல பகுதிகளை படிப்பதில்லை. எனவே, இந்த ஆண்டு வழக்கு பிரச்னைகளை தடுக்கவும், மாணவர்களை பாடப் புத்தகங்களை முழுமையாக படிக்க வைக்கவும், இந்த உறுதிமொழி எழுதி வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இடை நின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு

பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், மாணவர், இடையில் படிப்பை விடாமல் பார்த்துகொள்ளவும், படிப்பை விடும் மாணவர்களை, தாமதமின்றி, அவர்களின் நிலையை அறிந்து, கல்வி வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டு இதுவரை பள்ளிகளில் சேர்ந்து, 8ம் வகுப்புக்குள், பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர் பட்டியலை தயாரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் பகுதிகளில், 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு படிக்கவே வராத மாணவர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படியும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்வு நேரத்தில் இடமாற்றம் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி


அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள்புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கான தேவையை விட அதிகமாக இருக்கும், உபரி ஆசிரியர்களை, விரைவில் பணியிடமாற்றம் செய்ய உள்ளதாக கல்வித்துறையில் தகவல்கள் வெளியாகிஉள்ளன.

தற்போது கல்வி ஆண்டின் பெரும்பாலான வேலை நாட்கள் முடிந்து, அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. ஆனால், நிறைய பாடங்கள் பாக்கி உள்ளதால், சிறப்பு வகுப்பு மற்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தி, போர்ஷன் முடிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை இடம் மாற்றினால், மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.பல பள்ளிகளிலும் புதிய ஆசிரியர்கள் இடம் மாறும்போது, பாடங்கள் நடத்துவதில் பின்னடைவு ஏற்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

5,000 சத்துணவு கூடம் மழையால் பாதிப்பு


கனமழையால், 32 மாவட்டங்களில், 5,000 சத்துணவு கூடங்கள் சேதமடைந்துள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக, கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், சத்துணவு கூடங்களில் தண்ணீர் புகுந்தது.

மேற்கூரையில் தேங்கிய தண்ணீரால், சுவர்களில் கசிவு ஏற்பட்டது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள்சேதமடைந்தன.இதையடுத்து, அதிகம் சேதமடைந்த சத்துணவு கூடங்கள், லேசாக சேதமடைந்த, ஒழுகும் கட்டடங்கள் குறித்து, பட்டியல் தயாரிக்க, மாவட்ட சத்துணவு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.இதுகுறித்து, சத்துணவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழையால், 32 மாவட்டங்களில், 5,000 சத்துணவு கூடங்கள் சேதமடைந்து உள்ளதாகதெரிகிறது.'புதிய கட்டடம் கட்ட, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது; தற்காலிகமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.தமிழகத்தில், 43 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள் உள்ளன. இங்கு, 55 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

நாளை முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு;

தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.2005-ம் ஆண்டு கொட்டித்தீர்த்தமழைதமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக பெய்யவேண்டிய மழை அளவு 44 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு 48 செ.மீ., சென்னையில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 79 செ.மீ. ஆனால் இந்த வருடம் இதுவரை பெய்த மழைஅளவு 114 செ.மீ.கடந்த 2005-ம் ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 77 செ.மீ.மழை பெய்துள்ளது.

இது சராசரி மழையைவிட 79 சதவீதம் அதிகம். அதாவது மழை கொட்டித்தீர்த்துள்ளது. 1918-ம்ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் 109 செ.மீ.மழையும், 1985-ம்ஆண்டு மீனம்பாக்கத்தில் 107 செ.மீ.மழையும் அதிக பட்சமாக பெய்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு நிலைஇப்போது தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது பற்றி சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-தென் மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கிழக்கு வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்.

நாளை முதல் அதிகரிக்கும்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வரும்போது தமிழ்நாட்டில் மழையின் அளவு அதிகரிக்கும். அதாவது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல்கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமைகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கேளம்பாக்கத்தில் 4 செ.மீ.மழையும், குடவாசலில் 3 செ.மீ.மழையும், காரைக்கால், மகாபலிபுரம், வலங்கைமான், சீர்காழி தலா 2 செ.மீ.மழையும், நன்னிலம், கீழ் அணைக்கட்டு, கும்பகோணம், மயிலாடுதுறை, பாபநாசம்(தஞ்சைமாவட்டம்) ஆணைக்காரன் சத்திரம், தரங்கம்பாடி, திருவிடை மருதூர், நாகப்பட்டினம், பேச்சிப்பாறை, ஆடுதுறை, பாண்டவராயர் தலை தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

மின் கட்டணம் உயருமா? நவ.,30ல் தெரியும்


மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, வரும், 30ம் தேதி நடக்கும், மின் வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின் வாரிய தலைவர், தொழில், நிதி, எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் ஆகியவற்றின் இயக்குனர்கள், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் குழுவில் உள்ளனர்.

முக்கிய முடிவுகள் இந்த குழு தான், புதிய மின் நிலையம், மின் கொள்முதல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு, மின் வாரிய நிறுவன செயலர் மூலம் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, எரிசக்தி துறை செயலர் வழியாக, தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படும்.'மத்திய மின் சட்டம் - 2003'ன் கீழ், மின் வாரியம், தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டுதோறும், நவ., 30க்குள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை பரிசீலனை செய்து, ஆணையம், மின் கட்டணத்தில் மாற்றம் செய்யும். ஆனால், 2014 வருவாய் அறிக்கையை மின் வாரியம் இதுவரை தாக்கல் செய்யவில்லை. எனவே, ஆணையம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, 2014 டிசம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது. இந்நிலையில், சென்னை, மின் வாரிய அலுவலகத்தில் நவ., 30 மாலை, 5:30 மணிக்கு, இயக்குனர் குழு கூட்டம் நடக்கிறது. இதில், மின் கட்டணம் உயர்த்துவது குறித்துமுக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஆலோசனை:

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரியத்தின் கடன் அளவை குறைக்க, தமிழ்நாடு மின் பகிர்மானம், பல நிறுவனங்களாக பிரிக்கப்பட வேண்டும். அப்போது தான், மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும். இதனால், மின் பகிர்மானத்தை பிரிப்பது, மின் கட்டணம் உயர்வு, மழையால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய, புதிய மின் உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்டவை குறித்து, இயக்குனர் குழுவில் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கனமழையின் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள்;

தலைமை ஆசிரியர்கள் முடிவு
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு பின்னர் கனமழை பெய்தது. இதன் காரணமாகபள்ளிக்கூடங்களுக்கு 19 நாட்கள் தொடர்ந்து விடுமுறைவிடப்பட்டது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ததால் விடுமுறைவிடப்பட்டது. மற்றும் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் சில நாட்கள் விடுமுறைவிடப்பட்டது.

இந்த விடுமுறையை ஈடுகட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் வருகிற சனிக்கிழமை தோறும் பள்ளிகள் நடத்த தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.சென்னையில் சில தனியார் பள்ளிகளில் வழக்கமாக மாலை 3-45 மணிவரை தான் வகுப்புகள் நடத்தப்படும். அந்த பள்ளிகளில் ஒரு மணிநேரம் கூடுதலாக அதாவது 4-45 மணிவரை வகுப்புகள் நடத்த இருக்கிறார்கள். இது குறித்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.