Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 3 December 2015

தொடக்கக்கல்வி - பள்ளிகளில் DEC 07 "கொடிநாள்" கொண்டாடுதல் - இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக்கல்வி - பள்ளிகளில் DEC 07 "கொடிநாள்" கொண்டாட - இயக்குனர் உத்தரவு


அரசு விடுமுறை அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிகள் செயல் பட்டால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - கடலூர் முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை


தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை நெடுஞ்சாலை டோல்கேட் பகுதிகளில் சுங்க கட்டணம் ரத்து

மழை வௌ்ளத்தால் தத்தளிக்கும் தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை நெடுஞ்சாலை டோல்கேட் பகுதிகளில் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு மேலும் ரூ. 1000 கோடி நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு!


சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மேலும் 1000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அரக்கோணத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு வந்தார். அங்கிருந்து அடையாறு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்களிடம் கூறுகையில் ''வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ஏற்கனவே, மத்திய அரசு சார்பில் ரூ.939.53 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது வெள்ள சேதம் அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி உடனடியாக வழங்கப்படும்'' என்றார்.

Flash News - கனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை  

*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை விடுமுறை 

*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*புதுச்சேரி,காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை

பள்ளிக்கல்வி - ஊக்க ஊதிய உயர்வு - அனைத்து வகை ஆசிரியர்கள் (தொழிற்கல்வி ஆசிரியர்கள் தவிர) ஊக்க ஊதியம் வழங்குவது சார்பான இயக்குனரின் தெளிவுரை



மழை வெள்ளச் சூழலை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

மழை வெள்ளச் சூழலை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில், ''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம்.

அல்லது வீட்டிலிருந்தே ஊழியர்களை பணிகளை முடிக்கச் சொல்லலாம். வெள்ள சூழலை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அலுவலகத்தில் பணிபுரிய சென்றவர்கள் இரவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல், அலுவலகத்திலேயே தங்கும் சூழலும் ஏற்பட்டது. இன்று காலையில் வசிப்பிடங்களில் இருப்பவர்கள் அலுவலகம் வர முடியாமல் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03/12/2015) விடுமுறை.


1.திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
2.விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
3.நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
4.திருவள்ளுர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
5.சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
6.காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை (3/12 & 4/12 Two Days)
7.கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

8.புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஆற்றல் நிறைந்த மாற்றுத்திறனாளிகள்: இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்


உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்கள் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாகவே உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால் "ஊனம்' என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களை இந்த சமூகம் சம அளவில் வாய்ப்பளிக்க மறுக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்' என்ற மையக்கருத்து இந்தாண்டு முன்வைக்கப்படுகிறது.

எத்தனை பேர்: உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.

வசதிகள் தேவை: மேலை நாடுகளில் ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட ஊனமுற்றவர்களாகவே கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களாக கருதி அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. ஆனால் இந்தியாவில் அவ்வாறான நிலையில்லை. வெளியில் தெரியும் படியான ஊனத்தை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. பேருந்துகள், தியேட்டர் போன்ற இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர நிறைவேற்றப்படவில்லை. இங்கு ஊனமுற்றவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன.

பொருளாதாரம் மேம்பட: ஊனமுற்றவர்களின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு ஊனமுற்றோர் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், ஊனமுற்றவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறித்து விடக்கூடாது.
www.rkkalvisiragukal.blogspot.com
📚📚📚📚📚📚📚📚📚

தமிழக வெள்ள பாதிப்பு -முதல்வர் நிவாரண நிதி அனுப்பலாம்.

உதவும்  உள்ளம்  எனில் முதல்வர்  நிவாரண நிதி அனுப்பலாம்.


பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு..