Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 5 December 2015

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்க மத்திய அரசு உத்தரவு


சென்னையில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம் சேவை முடக்கம் என பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வங்கி சேவையையோ, ஏடிஎம் சேவையோ பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக டிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளின் அலுவல் நேரத்தை நீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களை செயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு பொருந்துமா?

மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர்

மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம்

மின் கட்டணம் செலுத்த வரும் 15ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சில மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையால் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

5-12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இனி ரெயிலில் முழுக் கட்டணம்

ரெயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. 5 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் (பாதி கட்டணத்தில்) வழங்கப்படுகிறது. இந்த முறையை ரெயில்வே நிர்வாகம் தற்போது மாற்றியமைத்துள்ளது.
இதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட்

செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும்?


செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப ஆசைப்பட்டார் பிரிட்டிஷ் சிறுவன் ஒருவர்
செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் என்பதை பிரிட்டிஷ் தபால்துறை கணக்கிட்டு, கேள்வியை எழுப்பிய சிறுவனுக்கு பதிலளித்துள்ளது

செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப எவ்வளவு செலவாகும் எனும் கேள்விக்கு பிரிட்டனின் தபால்துறை பதிலளித்துள்ளது.

விண்வெளி வீரராக வேண்டும் எனும் ஆசையுள்ள ஐந்து வயதான ஆலிவர் கிட்டிங்ஸ் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

இதையடுத்து இந்தக் கேள்விக்கு விடையளிக்க அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸாவின் உதவியை நாடியது பிரிட்டிஷ் தபால்துறை.

பின்னர் நாஸாவுடன் இணைந்து இதற்கான தொகை கணக்கிடப்பட்டு, அதற்கு 17,000 டாலர் செலவாகும் என அந்த சிறுவனுக்கு பிரிட்டிஷ் தபால்துறை அறிவித்தது.

இந்த பதில் கிடைத்தவுடன் "அந்த அளவுக்கு பணமா" என வாயடைத்து போனாராம் அந்தச் சிறுவன்.

செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப அவ்வளவு தபால்தலைகள் ஒட்ட வேண்டுமே எனக் கவலைப்படுகிறாராம் அந்தச் சிறுவன்

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?


சென்னையில் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறித்த அறிக்கையை தன்னார்வ அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு

மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு

மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து

வெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி? ஆவணங்களைப் பெறுவது எப்படி?

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 
     சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு