Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 11 December 2015

மழை காரணமாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைகழக B.Ed./M.Ed. தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு



தமிழகத்தில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிச.18 வரை சுங்க வசூல் ரத்தை நீட்டித்தது மத்திய அரசு !

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தமிழகத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்க வசூல் ரத்தை வருகிற 18 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

கடந்த ஒருமாதமாக பெய்த வரலாறு காணாத கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் அளிக்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர் சென்னையை மூழ்கடித்தது. இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று டிசம்பர் 11-ந் தேதி வரை தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்னும் சென்னை பழைய நிலைக்கு திரும்பாததாலும் பல இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாலும் வருகிற 18 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது
வாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரண பொருள்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

III STD Maths SLAS QUESTION PAPER




V STD Tamil SLAS QUESTION PAPER





கனமழை - பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு அக்டோபர் - 2015 : அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற கால அவகாசம் நீடிப்பு


பள்ளிக்கல்வி - கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட மாவட்டங்களுக்கு 14/12/2015 அன்று பள்ளிகள் திறக்க ஏதுவாக ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைபடுத்த வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க முடிவு..

மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.மேலும், இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

வெள்ளப் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும்

வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்...

மழையால் சேதமடைந்த வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:

மழையால் சில பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகளை துாய்மைப்படுத்தும் பணியை தலைமை ஆசிரியர்கள் துரிதமாக

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை 14-ந் தேதி திறக்க ஏற்பாடு

பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறை முடிந்து மீண்டும் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம்

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழந்தவர்களுக்கு 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்

இயற்கை பேரிடர் வரலாறு காணாத பாதிப்பை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்படுத்தியது.வெள்ளத்தால் வீடு, கால்நடை, உடமைகளை இழந்து மக்கள் தவிர்த்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி சான்றிதழ்களும் நாசமாயின.பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி சான்று வழங்க அரசு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமையும் தேர்வுகள் நடக்கிறது
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வெள்ளப்பாதிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படவிருந்த மற்றும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக்கப்படுகின்றன. பழைய தேர்வு தேதியும், மறு தேதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பால் தள்ளிப்போகுமா பொதுத்தேர்வும் தேர்தலும்?

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலும், மாணவர் களுக்கான பொதுத்தேர்வும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரி களுக்கு 30 நாட்களுக்குமேல் விடுமுறை விடப்பட்டுள்ளது. பருவ மழைக்காலம் டிசம்பர் இறுதி வரை இருப்பதால் இன்னும் விடுமுறை விடுவதற்கான

75 சதவீதத்திற்கு மேல் வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்

கல்லூரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க., அரசு தனது தேர்தல் அறிக்கையில் நன்கு படிக்கும், முறையாக கல்லூரிக்கும் வரும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

நகர மற்றும் ஊரகமைப்புத் துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, நவ., 13ம் தேதி, 'ஆன் - லைன்' தேர்வாக நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் தள்ளி வைக்கப்பட்ட, அந்த தேர்வு, வரும், 27ம் தேதி நடக்கிறது.
இதேபோல், உதவிப் பொறியாளர் - சிவில் மற்றும் உதவி மருத்துவ அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உதவி பொறியாளர் பணிக்கு, டிச., 28 முதல், 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; 2016 ஜன., 11 முதல், 14ம் தேதி வரை, நேர்முக தேர்வு நடைபெறும். உதவி மருத்துவ அலுவலருக்கு, டிச., 29 முதல், 31 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; ஜன., 20 முதல், 22ம் தேதி வரை, நேர்காணல் நடக்கும் என, அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்


டிச.,15ல் திருவள்ளூவர் பல்கலை., தேர்வு


MADRAS UNIVERSITY


IDE - DECEMBER 2015 - EXAMINATIONS TIME TABLE

>IDE - DECEMBER 2015 UG EXAMINATIONS TIME TABLE

>IDE - DECEMBER 2015 PG & ROFESSIONAL EXAMINATIONS TIME TABLE

Very important instruction: Candidates are directed to download the hall ticket directly from the IDE website. Manual Hall ticket will not be issued.

>IDE- DEC 2015 EXAMINATIONS ONLINE HALL TICKET FOR UG DEGREE COURSES PUBLISHED

DOWNLOAD IN www.ideunom.ac.in

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை :


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வகுப்பறைகளின் அனைத்து சுவர்களின் உறுதி தன்மையை கண்டறிய வேண்டும். பள்ளி கழிவறைகள் மூலம் தொற்று நோயும் பரவாமல் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று பாரதியாரின் 134-வது பிறந்த தினம்

"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று முழங்கி முப்பொழுதும் தாய் நாட்டின் மீதும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தனது தாய்மொழியான தமிழின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 134-ஆவது பிறந்த தினம் இன்று. இந்த நாளில் அவரது வாழ்வின் சில முக்கியத் தருணங்களை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

"காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் , எந்தன் காலருகே வாடா ,சற்றே உனை மிதிக்கிறேன்" என மரணத்தையும் கம்பீரமாக எதிர்கொண்டு கவிதை பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 134-ஆவது பிறந்த தினம் இன்று.

1882-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசுவாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் பிறந்தார் சுப்பையா என்கிற பாரதி. இயல்பிலேயே கவி பாடும் ஆற்றல் இருந்ததால் தனது 5-ஆவது வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த பாரதியார் தனது 14-வது வயதில் செல்லம்மா என்பவரை மணம் புரிந்து கொண்டார்.

நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற பாரதி அதற்குப் பிறகு காசிக்குச் சென்று உயர்கல்வியைத் தொடர்ந்தார். அங்கு சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்ற பாரதி, அங்கிருந்தபோது தலைப்பாகை அணியும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.

1901- ஆம் ஆண்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய பாரதி எட்டயபுரம் மன்னரின் அவைப்புலவராகத் திகழ்ந்தார். பிறகு, 1904-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1905-ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கு தான், விவேகானந்தரின் சீடரான நிவேதிதா தேவியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு தான் பாரதியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்து பெண் விடுதலை குறித்த பாடல்களை எழுத தூண்டுதலாக அமைந்தது.

1907-ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகையில் பணியாற்றிய பாரதி தேசப்பற்றை வளர்க்கும் பாடல்களையும், உலக நடப்பு குறித்த கட்டுரைகளையும் எழுதினார். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் புதுச்சேரியில் தஞ்சம் அடைந்த அவர் அங்கு இந்தியா, விஜயா உள்ளிட்ட பத்திரிகைகளில் பணிபுரிந்தார்.

புதுச்சேரி மண்ணில் தான் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற தலைசிறந்த படைப்புகள் பாரதியாரால் படைக்கப்பட்டன. பாப்பா பாட்டு, நாட்டுப்பற்று பாடல்கள், தோத்திரப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், வசன கவிதை, ஞானரதம், ஆறில் ஒரு பங்கு என பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்த பாரதியார் செப்டம்பர் 11-ஆம் தேதி, 1921-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், சமூகத்தின் மீது அளவிலா அக்கறை காட்டிய மனிதர், சாதிப் பிளவுகளை வெறுத்தவர், பெண்ணியத்திற்கு குரல் கொடுத்த நடுநிலையாளர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆராதிக்கப்படும் மகாகவி பாரதி மறைந்தாலும், அவரது எழுத்தின்வீச்சு என்று சாகாவரம் பெற்றவை.

ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்


சென்னையில் பள்ளிகளை தூய்மை செய்யும் பணியில் தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து பிற ஆசிரியர்களும் செயலாற்ற வேண்டும். பள்ளிகள் முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.

அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை.இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

டிச.,15ல் திருவள்ளூவர் பல்கலை., தேர்வு


மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருவள்ளூவர் பல்கலை., தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி துவங்கி ஜனவரி 5ம் தேதி வரை நடைபெறும் எனபல்கலை., பதிவாளர் (பொறுப்பு) அமல்தாஸ் தெரிவித்துள்ளார்.தேர்வு அட்டவணையை பல்கலை., இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.