Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 13 December 2015

சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஆட்சிப்பணி உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக, பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட

நாளை 29 பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தண்ணீர் இன்னும் வடியாத நிலையில், சென்னையில் உள்ள 29 பள்ளிகளுக்கு நாளை (டிச.14) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள விடுமுறை அறிவிக்கப்பட்ட பள்ளிகள் விவரம்:

காஞ்சிபுரம் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் படித்து, வேலை பார்க்க வாருங்கள்: இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

இந்திய மாணவர்கள் உயர்கல்வி பெற இங்கிலாந்து வர வேண்டும். பட்டம் பெற்ற பிறகு அங்கேயே தங்கி வேலை செய்யலாம் என இந்திய மாணவர்களுக்கு இங்கிலாந்து அறிவியல் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஜோ ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

2016-ம் ஆண்டிலும் புதிய ரேஷன் அட்டை இல்லை: 7-வது ஆண்டாக உள்தாள்தான்

தமிழகத்தில் இந்த மாதத்துடன் ரேஷன் அட்டைகள் காலாவதியாக உள்ள நிலையில், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் 7-வது ஆண்டாக 2016-ம் ஆண்டுக் கும் உள்தாள்தான் இணைக்கப்பட வுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 5பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை
5பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்
வீரராகவ ராவ் கூறியுள்ளார். பூந்தமல்லி
ஆண்கள் மற்றும் பெண்கள்
உயர்நிலைப்பள்ளிகள், பூந்தமல்லி பார்வையற்றோர்
பள்ளி, போரூர் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி, பூதம்பேடு பஞ்சாயத்து
பள்ளிக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது.
மற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்
போல் செயல்படும் என கலெக்டர்
கூறியுள்ளார்.

TNPSC DEPARTMENTAL EXAM TIMETABLE DEC 2015


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) தீபாவளி பண்டிகை வந்தது. இதற்காக, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி - கல்லூரிகள் நவம்பர் மாதம் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 11-ந் தேதி (புதன்கிழமை) வரை விடுமுறை அறிவித்திருந்தன.

10ம் வகுப்பு பெயர் பட்டியல்15ம் தேதி வரை அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கென வழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

மிலாடி நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி பணிகளை முன் கூட்டியே முடிக்க வேண்டிய நிலை, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

போலியோ முகாம் 2016க்கு தள்ளிவைப்பு


தமிழகத்தில், மழை வெள்ள பாதிப்பால், டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், போலியோ நோயை ஒழிக்கும் வகையில், ஆண்டு தோறும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

காங்கயம் பள்ளி மாணவியரின் ஆய்வு கட்டுரை, சண்டிகரில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டது.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில், 23 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இம்மாநாடு, டிச., 27 முதல் 31 வரை, பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற உள்ளது.

இதற்கு முன்பாக, மாநில அளவிலான மாநாடு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரியில்,

ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்

ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல் செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது.
ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது.

'எல்நினோ' என்றால் என்ன?

.எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு 'சிறு பையன்' என்று பொருள். பரந்த வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல், உலகிலேயே அதிக சூரிய ஒளியை பெறுகிறது. இந்த ஒளி, வெப்பமாக கடலினுள் சேர்த்து வைக்கப்படுகிறது. பொதுவாக, பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி, வடகிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் இருந்து வெப்ப மேற்பரப்பு உடைய

எல்நினோ பற்றி 7 ஆம் வகுப்பு புவியியல் பாடத்தில் (இரண்டாம் பருவம்) தரப்பட்டுள்ள செய்தி!! Page 166,167


அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சான்றிதழ் நகல்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள 813 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 12ம்  தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் போட்டிப் போட்டு லட்சக்கணக்கில் விண்ணப்பித்தனர். 

வெள்ள சேதத்தால் தமிழக சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்பா? வாய்ப்பே இல்லை என்கிறது தேர்தல் கமிஷன்

சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சட்டசபை தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பே இல்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2016 மே, 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன், சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்

நாளை பள்ளிகள் திறப்பு: பள்ளிகளை திறக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு'

'எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை நாளை திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, இன்றுடன் முடிவுக்கு