Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 2 January 2016

உலகில் உள்ள துறைகளின் ( கண்டுபிடிப்புகளின்)தந்தை!!!

1..வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்
2.. புவியலின் தந்தை?
தாலமி
3..இயற்பியலின் தந்தை?
நியூட்டன்
4..வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்
5..கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்

கருவூல சேவையைப் பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண் வழங்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

இணையதளம் மூலமாக கருவூல சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களதுஆதார் எண்ணை கருவூல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஒவ்வோர் ஆண்டும் மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

SLAS - Periodic Test Study Materials, Questions & Answers

MS University -Last Date Extended for the Academic year admission 2015-16 upto 31.01.2016


ஜனவரி-2016 பள்ளி நாட்காட்டி


ALAGAPPA UNIVERSITY -Extension of Last Date for Admission for the Academic year 2015-16


ஆசிரியர் பணிக்கு போலி ஆணை

போலி ஆணையை காட்டி ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர முயன்றவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

            பெரம்பலுார் மாவட்டம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் 2013ல் ராமநாதபுரம் அருகே காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் பணியில் சேருவதற்கான பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் ஆணையை தலைமைஆசிரியரிடம் கொடுத்தார். அந்த ஆணையில் 'உயர்நிலைப்பள்ளி' என, இருந்ததால் சந்தேகமடைந்த தலைமைஆசிரியர் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வருமாறு கூறினார். 

போனஸ் தகுதியை உயர்த்த கோரிக்கை.

அரசு ஊழியர் போனசுக்கான அடிப்படை ஊதிய தகுதியை உயர்த்த வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 

            இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போனஸ், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத் தகுதியும், 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான போனசை உயர்த்த வேண்டும். சி மற்றும் டி பிரிவினருக்கான போனஸ், 2,500 ரூபாய்; ஏ மற்றும் பி பிரிவினருக்கான மிகை ஊதியம், 1,000 ரூபாயை, 7,000 ரூபாயாக, தமிழக அரசு உயர்த்த வேண்டும். போனசுக்கான அடிப்படை ஊதியத் தகுதியையும், 21 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இளநிலை தேர்வு எழுத அனுமதி மறுப்பு

தமிழகத்தில் தட்டெழுத்து புகுமுக இளநிலை தேர்ச்சி பெற்ற மாணவர்களை, இளநிலை தேர்விற்கு அனுமதி மறுப்பதால், பெற்ற பயிற்சி மறந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழாவது படிக்கும் மாணவர்கள் தட்டெழுத்து பயிற்சி பெற்று, ஆகஸ்ட்டில் நடக்கும் புகுமுக இளநிலை தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இளநிலை தட்டெழுத்து தேர்வில் பங்கேற்க கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற விதியால், பிப்ரவரியில் நடக்கும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கபடுவதில்லை. 8ம் வகுப்பு படித்து முடித்து தேர்ச்சி பெற்றபிறகே, இளநிலை தட்டெழுத்து தேர்விற்கு அனுமதிக்கபடுகின்றனர்

ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு பின், பணிவரன்முறை ஆணை

பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு பின், பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2002ம் ஆண்டு வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு, பணிநியமன ஆணையிலேயே, அது முறையான நியமனம் எனக்குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. கடந்த, 2002-04 வரை, அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும், 2006ம் ஆண்டுக்கு பின் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அப்போது, அதற்கான பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டது.

வங்கிக்கணக்கில் மண்ணெண்ணெய்க்கான மானியம்

காஸ் மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து மண்ணெண்ணெய்க்கான மானியமும் வங்கிக்கணக்கில் செலுத்தும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியத்தை நேரடியாக செலுத்தும் முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சனிகிழமை பள்ளி வேலை நாட்களாக இருந்தாலும் சத்துணவு ( முட்டை)வழங்க வேண்டும்!!!


தொடக்கக் கல்வித்துறை :கூடுதல் ஊதியம் பெற்ற ஆசிரியர்கள் வசூலிக்க உத்தரவு

கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் பெற்ற ஆசிரியர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2011 ஜன.,1 க்குப்பின், தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்கள் பதவி உயர்வு பெறும்போது அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியமான 750 ரூபாயை சேர்த்து கணக்கிட வேண்டும்.ஆனால் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களான சிலருக்கு அடிப்படை ஊதியத்துடன் 750 ரூபாய் சேர்த்தது போக, மீண்டும் தனிஊதியமாக 750 ரூபாய் வழங்கப்படுகிறது.

விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

மிலாதுன் நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே, மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஆண்டுதோறும், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து, மிலாதுன் நபி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை விடப்படும்.

23 பள்ளிகளில் வெள்ளம் ரூ.2.5 கோடி சேதம்

வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில், 23 மாநகராட்சி பள்ளிகளில் வெள்ளம் புகுந்தது. அதனால், 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.வடகிழக்கு பருவமழையால், அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, தென்சென்னையின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. கூவம் வெள்ளத்தால், கோயம்பேடு, அண்ணாநகர், அமைந்தகரை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

உதவி பொறியாளர் தேர்வு 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு மின் வாரிய உதவிப் பொறியாளர் தேர்விற்கு, மூன்று நாட்களில், 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாடு மின் வாரியம், ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் பிரிவுகளில், 375 உதவிப் பொறியாளர்களை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.