Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 16 January 2016

ஜனவரி 17 எம்.ஜி.ஆர் பிறந்ததனம்...

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 -டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்படநடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரைதமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறைமுதலமைச்சராகவும் இருந்தவர்.

ஜனவரி 17 பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்ததினம்...

பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17,1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவைஉருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர்,அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார்

ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு "பிரிண்ட் அவுட்' விண்ணப்பம் வழங்கல்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர். 

30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை, பயிற்சியாக கணக்கிட வேண்டும். அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. 

             இந்தத் தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பரிசீலனை முடிந்த நிலையில், தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'டை டி.என். பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.நிராகரிப்பு பட்டியலில் இல்லாமல், முறையாக விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியோருக்கு, ஹால் டிக்கெட் இல்லையெனில், அவர்கள் தங்களின் விண்ணப்ப விவரங்களுடன், வரும், 19ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி.,க்கு contacttnpsc@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா தெரிவித்துள்ளார்.மூன்று பேருக்கு தடைவிண்ணப்பித்தவர்களில், ஆறு பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. பட்டியலில், மூன்று பேர், தேர்வு எழுத ஏற்கனவே தடை பெற்றவர்கள். அவர்களில் பெண் தேர்வருக்கு நிரந்தர தடையும், மற்ற இருவருக்கு, இரண்டு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று பேர் முன்னாள் ராணுவ வீரருக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்களும் தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு.

பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டணத்துக்காக மாணவர்களின் சான்றிதழ் பறிப்பு!: தனியார் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை.

கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை கடற்கரை, பூங்காக்களிலும் போலியோ சொட்டு மருந்து

தீவிர போலியோ செட்டு மருந்து முகாம் நாளை (17–ந்தேதி) நாடு முழுவதும் நடைபெறுகிறது.முதல் – அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்களில் முகாம் நடக்கிறது.பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம், பொது மக்கள் கூடும் இடங்களில் 1652 நடமாடும் மையங்கள் மூலம் சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது.

தினம் ஒரு புத்தகம் "போயிட்டு வாங்க சார் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "அறுசுவை -''"உணவே மருந்து, மருந்தே உணவு"

அறுசுவை - துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவையே ஆறு வகைச் சுவை.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு அறுசுவையும் சம அளவில் தேவை. அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடும் போது தான் உடலில் பிரச்னைகள் ஏற்படுகிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அறுசுவைக்கும் நம் உணவில் இடம் கொடுத்து அதன்மூலம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி வகுத்துக்கொள்வோம்.

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் யார் யார் படங்களை வைக்கலாம் : அரசாணை


தொடங்கியது புத்தகப் பொங்கல்! - 250 அரங்குகள் + 1,00,000 தலைப்புகள்

புத்தகக் காதலர்களுக்குப் புத்தகத் திருவிழாக் களைவிட உற்சாகமளிக்கும் நிகழ்வு வேறு ஏது? இதோ சென்னையில் தொடங்கியிருக்கிறது மற்றுமோர் புத்தகத் திருவிழா!

சிறார்களுக்கு பீடி, சிகரெட், பான்பராக் விற்றால் 7 ஆண்டு 'கம்பி' எண்ணணும்: ரூ.ஒரு லட்சம் அபராதமும் உண்டு என புதிய சட்டத்தில் தகவல்

சிறார்களுக்கு, பீடி, சிகரெட், மது, பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும், புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

டி.டி.இ.ஓ., சஸ்பெண்ட்.

பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தினம் ஒரு புத்தகம் "பாரம்பரிய தமிழக விளையாட்டுக்கள் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "ஆரோக்கியம் தரும் மாதுளம் பழம்"

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. 

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு

பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது.

குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு பிரிண்ட் அவுட்&விண்ணப்பம் வழங்கல்

மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர்.

ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http://218.248.44.30/ecsstatus/) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ? அப்ப இத மறக்காம படிங்க !!

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்

இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாகிறது சிக்கிம்

நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், 75 ஆயிரம் எக்டேர்கள் விவசாய நிலத்தை முற்றிலுமாக பயிரிடுவதற்கு ஏற்ற நிலமாக மாற்றியிருப்பதன் வாயிலாக சிக்கிம் மாநிலம் இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக அறிவிக்கப்படவுள்ளது. வருகிற 18-ந்தேதி கேங்டாக்கில் நடக்க உள்ள விவசாய கருத்தரங்கில் இதை பிரதமர் மோடி முறைப்படி அறிவிக்கவுள்ளதாக சிக்கிம் ஆர்கானிக் மிசன் தெரிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை மாநில அரசு திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.ரூ.10 ஆயிரம் உதவித்தொகை

பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைந்தது; டீசல் விலை 85 காசுகள் குறைப்பு

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தங்களது விருப்பத்திற்கு நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற, இறக்கத்தை அடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.