Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 18 January 2016

ஜாக்டோ மறியல் போராட்ட தீர்மானங்கள்


மழலையர் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம்


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள்.

தேர்வு அமைப்புகளுக்கு திடீர் கட்டுப்பாடு

பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் 
கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி?

பருவத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல் மற்றும் ஆதார்எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமைப் பதிவுதலைமைப்பதிவாளர் அலுவலகம் செய்து வருகிறது.

ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதிய கணக்குகளுக்கு விடிவு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

        புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.  இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு, பொது கணக்கு அலுவலகத்திலும்; தொடக்க பள்ளி மற்றும் உள்ளாட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு தகவல் தொகுப்பு மையத்திலும் சி.பி.எஸ்., கணக்கு  பராமரிக்கப்பட்டது. அதேநேரம், பதவி உயர்வால், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பழைய சி.பி.எஸ்., கணக்கு கைவிடப்பட்டு, பொது கணக்கு அலுவலகத்தில் புதிய கணக்கு துவங்கப்பட்டது.
        அதனால், பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட, பல கோடி ரூபாயின் நிலை என்னவாகும் என, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், சி.பி.எஸ்., மற்றும் நிரந்தர பென்ஷன் திட்டமான பி.எப்., ஆகிய, இரண்டு கணக்கு நிர்வாகத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 
         எனவே, சி.பி.எஸ்., கணக்குகள், அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கும், பி.எப்., கணக்குகள், பொது கணக்கு அலுவலக நிர்வாகத்துக்கும் சமீபத்தில் பிரிக்கப்பட்டன. அதனால், ஒரு குழப்பம் தீர்ந்தது.
        ஆனாலும், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சி.பி.எஸ்., கணக்குகளால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் தீரவில்லை. இது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. எனவே, இந்த பிரச்னைக்கு தற்காலிக முடிவு கட்டப்பட்டுள்ளது.

'இரு கணக்கு வேண்டாம்'

        தகவல் தொகுப்பு மைய கமிஷனரகம் பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பிந்தைய புதிய சி.பி.எஸ்., கணக்குடன், பழைய கணக்கு நிதியை இணைத்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இனி நீடிக்க கூடாது. இதற்கு, கல்வி அதிகாரிகள், மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

        சி.பி.எஸ்., கணக்குகள் ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பல கோடி ரூபாய் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், சி.பி.எஸ்., திட்டத்தில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டு,  உயிரிழந்த, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான நிதி பங்களிப்பையும், தாமதமின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கார், பைக் இன்சூரன்ஸ் காகித நகல் கையில் வைத்திருக்க தேவையில்லை

கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் இன்சூரன்ஸ் ஆவணங்கள், விரைவில் மின்னணு முறையில் மாற்றப்பட உள்ளதால், போக்குவரத்து போலீசாரின் சோதனையின் போது அவற்றின் நகல் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.

மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு :ராமகோபாலன் வலியுறுத்தல்

மாணவர்கள் பண்பும், அன்பும்,தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர, பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு நடத்த வேண்டும்,'' என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.அவர் தெரிவித்துள்ளதாவது:

திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க,மத்திய தகவல் ஆணையம் கட்டுப்பாடு

 பல்கலைக்கழகங்கள், தேர்வு அமைப்புகள், திருத்திய விடைத்தாள் நகல்களை அளிக்க, ஒரு பக்கத்துக்கு, இரண்டு ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லி பல்கலை., திருத்திய விடைத்தாள் நகல் அளிக்க, ஒரு பாடப்பிரிவுக்கு, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "பற்கள் நமது உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி"

மேல் வரிசையோ... கீழ் வரிசையோ... முன் நான்கு பற்கள் கிட்னி, சிறுநீர்ப்பை ஆகியவற்றின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. 

அதற்கடுத்துள்ள சிங்கப்பல் எனப்படும் ப்ரீமோலார் பற்கள் இரண்டும் கல்லீரல், பித்தப்பையின் சக்தியை உணர்த்துகின்றன. 

தினம் ஒரு புத்தகம் " ஜென் கதைகள் "


ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 480 பணி

இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல பொறியியல் பிரிவில் (Military Engineering Service Eastern Command) காலியாக உள்ள 480 குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகாண்பருவம் முடித்தவர்களுக்குச் சான்று அளிக்கப்பட்டு விட்டதா என்ற விவரங்கள் அனுப்ப உத்தரவு.


நாடு முழுவதும் 1,000 ஏ.டி.எம்-களை திறக்கிறது தபால்துறை

வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25 ஆயிரம் தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஏற்கனவே, 12,441 தபால் நிலையங்களில்  சி.பி.எஸ். முறையை அறிமுகப்படுத்தியுள்ளது தபால்துறை.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தொகுப்பூதியம் ரூ.33,250 ஆகும்.