Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 24 January 2016

குடியரசு தினம் என்றால் என்ன? ஒரு பார்வை

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்

மாணவர்களுக்கான "இலைகளில் உருவங்கள் "







தினம் ஒரு புத்தகம் "300 நன்னெறிக் கதைகள் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "சளி, இருமலை போக்கும் தூதுவளை"

தூதுவளை, தும்பை, கொள்ளு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இவைகளை பயன்படுத்தி உடலுக்கு நன்மை தரும் ரசம் தயாரிக்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட தூதுவளை நீல நிற பூக்களை கொண்டது. இதன் இலைகளின் பின்புறம், காம்புகளில் முட்கள் இருக்கும். தூதுவளை ஆயுளை கூட்டும் மருந்தாக விளங்குகிறது. இது, சளியை கரைக்க கூடியதாக அமைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியை மீது வழக்குப் பதிவு

போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.

தமிழக பட்டு வளர்ச்சித் துறையில் 300 ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக பட்டு வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள உதவி பட்டு ஆய்வாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டு வளர்ப்பு தொடர்பான செய்முறை பயிற்சி அனுபவத்தை அரசு பட்டு வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களில் பெற்றவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வானவில் பெண்கள் - பள்ளிப் படிப்போடு தொழிற்கல்வியும் அவசியம்: கல்வித் துறை சாதனையாளர் சீமா

“கல்வி என்றால் வெறுமனே ஏட்டுக் கல்வியைச் சொல்லித்தருவதல்ல, கூடவே தொழிற்கல்வியையும் இணைத்துச் செய்வது. இன்னும் சொல்லப்போனால் கல்வி நிலையங்களே தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அது வேறு இது வேறு என்கிற கண்ணோட்டமே உள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஒரு கல்லூரி இருந்தால் அதற்குள் ஒரு கம்பெனி இருந்தே தீரும். அதை நம் நாட்டில் செய்தால் என்ன என்று தோன்றியது. செய்து பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் 4,000 பேருக்கு இலவசமாகவே பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லும் சீமா செந்தில், இந்தியாவின் நூறு சாதனைப் பெண்களில் ஒருவர்.

நேரடி நியமனம் மூலம் உதவி பட்டு ஆய்வாளர் மற்றும் இளநிலைபட்டு ஆய்வாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை




வாசிப்பு திறனும் இன்றைய இளம் தலைமுறையினரும் – அஃப்சர் சையத் -

சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் பொங்கல் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட போது பல்வேறு விதமான நூல்களைக் காண நேர்ந்தது.

தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், அரசியல், அறிவியல், ஆராய்ச்சி, வரலாறு, மருத்துவம், கவிதை, புதினம், இலக்கியம் போன்ற பல்சுவை கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.

ஆனால் சென்ற வருடங்கள் இருந்த மக்கள் அலையைப் போன்று இந்த முறை காண முடியவில்லை என்பது மனதிற்கு வருத்தம் அளிக்கின்றது. பல்வேறு விதமான தொழில்நுட்பங்களான சமுக வலைத்தளங்கள் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் புத்தக வாசிப்பு இளைஞர்களிடத்தில் சற்றே குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

புத்தகங்களை வாசிப்பது ஓர் அற்புத அனுபவம். அது புதியதொரு உலகைத் திறந்து காட்டும். பல புதிய அரிய தகவல்களை அள்ளித் தரும். நாடுகளின் எல்லைகளையும், வரலாற்றையும் மாற்றி அமைக்கும் மகா பலம் பொருந்தியது புத்தகங்கள்.

பல புத்தகங்கள் உலகையே உலுக்கி எடுத்துள்ளன என்பதுதான் உண்மை. அது மட்டுமின்றி வாசிப்பு பழக்கம் நம் மனதை ஒருமுகப்படுத்தி, நினைவுத் திறனை அதிகரிப்பது மட்டுமில்லாமல் நம் கற்பனையையும் அறிவையும் புத்தகம் வளர்க்கிறது என்றே சொல்லலாம்.

காட்சி ஊடகங்களைப் போல புத்தகத்தில் உள்ளவை ஒரு முறையுடன் மறந்து விடுவதில்லை. அது காலம் காலமாக புதிய புதிய அர்த்தங்களைத் தந்து கொண்டே இருக்கும். உலக அளவில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய சாதனையாளர்களுக்குப் பின்னால் இருப்பவை புத்தகங்களே என்பதை நம் இளம் தலைமுறையினருக்கு நாம் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

அது மட்டுமின்றி உலக பிரபலங்கள் முதற்கொண்டு நம் நாட்டு தலைவர்கள் வரை புத்தகங்களை பற்றி அவர்களுடைய மதிப்பீடு என்ன என்பதை சற்று நாம் அலசுவோம்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது, “ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் காந்தி. அது மட்டுமின்றி, “ஒரு நூலகம் திறக்கப்படும்போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகிறது” என்றவரும் இவரே.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கட்டது ஏன் என்று வினவியபோது, “பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது” எனப் பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்ட போது “புத்தகங்கள்தான்” என்றாராம் மார்டின் லூதர் கிங்.

“எங்கே தங்க விரும்புகிறீர்கள்?” என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது, “எது நூலகத்திற்கு அருகில் உள்ளது?” எனக் கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

“தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, “புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்” என்று பதிலளித்தார் ஜவகர்லால் நேரு.

“மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது?” என்று வினவப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் “புத்தகம்” என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் – “இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று” என்றார் பெட்ரண்ட் ரஸல்.

“ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு புத்தகம்தான்” என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

இவ்வாறாக புத்தங்களின் முக்கியத்துவத்தை நாம் பல்வேறு பிரபலங்களின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். ஒருவனது வாழ்வு நல்வாழ்வாக அமைய அடித்தளம் அமைப்பது அவனது நற்குணங்களே. அந்த நற்குணங்களை தேடித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நூல்களே என்பதை நம் இளம் தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டிய தருணம் இதுவே.

மேன்மை மிக்க சமுதாயத்தை உருவாக்க இன்றே, இப்போதே நாம் அனைவரும் படிக்கத் தொடங்குவோம். நம்மைச் சேர்ந்தவர்களையும் படிக்கச் சொல்வோம்.

படிப்போம். முன்னேறுவோம்.

அஃப்சர் சையத்

இரு ஆண்டுக்கும் சேர்த்து இலவச 'லேப் - டாப்'

தமிழக அரசின் இலவச லேப் - டாப் கிடைக்காதவர்களுக்கு கொடுப்பதற் காக, தமிழ்நாடு மின்னணு கழகம் எனும், 'எல்காட்' நிறுவனத்தினர், 2014 - 15 மற்றும் 2015 - 16 கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து, 10.5 லட்சம் லேப் - டாப்களை கொள்முதல் செய்துள்ளனர். இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறைஅதிகாரிகள் கூறியதாவது:

குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ஒத்திகை

குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் அணிவகுப்பு நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 67வது குடியரசு தினம் நாளை மறுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தினம் கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹேலண்டேசிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியின் போது நடத்தப்படவேண்டிய அணிவகுப்பு உள்ளிட்டவைகள் ஒத்திகை பார்க்கப்பட்டது.

சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்கணக்கெடுக்க அரசு உத்தரவு

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015- - 16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிக்கல்

பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.

இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி

தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.

பொதுப்பள்ளி முறையும், அருகமைப் பள்ளியும், தாய்மொழிவழியில் கல்வியும் இன்னும் நடைமுறையாகவில்லை - கூடி விவாதித்து ஆக்கப் பூர்வப்பணியை முடிவு செய்வோம் வாருங்கள்.



பொதுதேர்வு எழுத மையங்கள் தயார் செய்யும் பணி தீவிரம்

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு ஈரோடு, கோபி கல்வி மாவட்டங்களில் தலா இரு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 115 ரூபாய் தேர்வு

கட்டணம் வசூ 10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம் லிக்க, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், உயர் பிரிவு மாணவர்கள் தவிர, மற்றவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

குடியரசு தினத்தன்று வண்டலூர் பூங்கா செயல்படும்

குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 26-ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளிநாடு செல்ல அனுமதி அவசியம்:தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் : ஜன 31, பிப்.7ல் நடக்கிறது

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 31ம் தேதி மற்றும் பிப். 7ம்தேதி சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார்.

குறுஞ்செய்தியில் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்யுங்கள்

செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால், வாக்குச் சாவடி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.