Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 8 February 2016

'தமிழில் படிப்பதால் யாரும் சோடை போக மாட்டார்கள்" விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு


தினம் ஒரு புத்தகம் "தமிழக பள்ளிக்கல்வி "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "தூதுவளை சூப்"

தேவையானவை: தூதுவளை  அரைக் கட்டு, தக்காளி, வெங்காயம்  1, பூண்டு பல்  2, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, வெண்ணெய்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தூதுவளைக் கீரையை, முள் நீக்கி சுத்தம் செய்யவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பூண்டு, தூதுவளை சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளி விழுது, 4 டம்ளர் நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 10 நிமிடங்கள் கழித்து, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். தக்காளி விழுதுக்குப் பதில் வேகவைத்த பருப்புத் தண்ணீர் சேர்க்கலாம்.

பலன்கள்: கப நாசினி.  ஆஸ்துமா அலர்ஜி, காது மந்தம், சளி, இருமல், கக்குவான் விலகும். தாது விருத்தியாகும். கை, கால் அசதியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைச் சரிசெய்யும்.  தலைவலி மற்றும் காது, மூக்கு வலிகளுக்கு நிவாரணம் தரும்.  பசி, ஜீரணத்துக்கு நல்லது.  ஊளைச்சதை, தொப்பையைக் குறைக்கும்.

இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு

இருவிதமான விலையில் இணைய சேவை வழங்குவதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) மறுப்பு தெரிவித்துள்ளது.இணையச் சேவை அளிக்கும் நிறுவனங்களும், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு இணையதளத்தைப் பயன்படுத்தவும்  வெவ்வேறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என வலியுறுத்தி வந்தனர்.

Bharathidasan university M.Ed Admission 2016-17

தமிழில் முழுமையாக வழிகாட்டும் 'மகாமகம்' செயலி:அரசு பள்ளி ஆசிரியர் குழுவின் அசத்தல் 'ஆப்' முயற்சி


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு செயலி ஒன்றைத் தயார் செய்து அசத்தியிருக்கின்றது அரசுப் பள்ளி ஆசிரியர் பெருமாள் ராஜ் தலைமையிலான ஆசிரியர்க் குழு. இச்செயலி மகாமகப் பெருவிழாவுக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்.15 முதல் வானொலியில் எஸ்எஸ்எல்சி தேர்வு வழிகாட்டல்

பிப்.15-ஆம் தேதிமுதல் அகில இந்திய வானொலியில் எஸ்எஸ்எல்சி தேர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இது குறித்து பெங்களூரு அகில இந்தியவானொலி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-16-ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 30-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. 

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான அனுமதி சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான அனுமதி சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் ராமலிங்கம் வெளியிட்ட செய்தி: 

பிப்.16-ல் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

வரும் 16-ம் தேதி (பிப்ரவரி 16) தமிழக இடைக்கால பட்ஜெட்தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.2.2016-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.மேலும், அன்று காலை 11.00 மணிக்கு 2016-2017-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கணினி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் கணினி பட்டதாரி ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவை அரசு வெளியிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

கடந்த காலங்களில் எவ்வளவோ முறைகேடுகளை நடத்திய ஆட்சியாளர்கள் ஆய்வக உதவியாளர்கள் நியமனத்தையாவது நேர்மையாக நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:- 

இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகவோ அல்லது தலைமை ஆசிரியராகவோ பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயத்தில் ஊதியத்துடன் ₹750 ஐ சேர்த்துக்கொள்ளலாம்,சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்ற தீர்ப்பு!


FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை

ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு - 15 அம்ச கோரிக்கைகள்குறித்து பேசிட. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு நாளை (09.02.2016) மாலை நடைபெறுகிறது.

சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடு திரை கற்றல் அரங்கம் துவக்க விழா..


பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது.தமிழகம் முழுவதும் பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்தத் தேர்வுகளை 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.இதனை முன்னிட்டு அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் திங்கள்கிழமை (பிப்.8) தொடங்குகிறது. 

லோக் ஆயுக்தா வேண்டும் ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

துாத்துக்குடி:ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு, கோவில்பட்டியில், கடந்த, 5ம் தேதி துவங்கியது.மூன்று நாள் மாநாட்டில், பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். மாநில துணைத் தலைவர் ஜோசப் ரோஸ் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்து சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர்.

மாற்றுத்திறனாளிகள் இன்று முதல் போராட்டம்

கோரிக்கைகள் நிறைவேறும் வரை, ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, மாற்றுத்திறனாளிகள் இன்று துவக்குகின்றனர்.'அரசு பணியில், 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; 40 சதவீத ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும்' என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை, மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிக் கட்டடம் ரூ.9 லட்சம் செலவில் சீரமைப்பு

சென்னையில் வெள்ளத்தால் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை மாணவர்களும், தன்னார்வ அமைப்பும் இணைந்து சீரமைத்து வருகின்றன.தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான கல்வி நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் அமைப்பு (டிஎன்எஃப்எஸ்), சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6%உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Expected DA on 1.1.2016 is Over – Ends with 6% Hike at 125%Expected DA on 1.1.2016 is Over – Ends with 6% Hike at 125%Expected DA ends with a 6percentage hike at 125%; Labour Bureau releases the much-awaited AICPIN stats of DecemberThe AICPIN statistics points for the month of December 2015 has been released by Labour Bureau. The index is one point decreased and ends with 269.