Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 23 February 2016

பெண் குழந்தைகளின் கல்விக்கு ரூ.200 கோடி நிதியுதவி: மோடியின் உடையை ஏலத்தில் எடுத்த வைர வியாபாரி தாராளம்

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை தந்திருந்த குடியரசு தினவிழாவின் போது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த உடை சர்ச்சைக்கு உள்ளானது. பிரதமர் மோடியின் அந்த உடையில், தங்க நிறத்தில் 'நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்று வரிசையாக நெய்யப்பட்டிருந்தது.
பின்னர் ரூ. 10 லட்சம் மதிப்புக்கொண்ட அந்த உடை ஏலத்தில் விடப்பட்டது. சூரத்தில் வைர நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் லால்ஜி படேல் அந்த உடையை ரூ. 4.31 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். இதன் மூலம் நாடு முழுவதும் அவர் பிரபலம் ஆனார்.

பி.எஃப்.-ல் ஊழியர்களின் பங்களிப்பு ரத்தா? அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்  ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் 12% என்று உள்ள வைப்பு நிதி சந்தாவை வருமானத்துக்கு ஏற்றாற்போல் திருத்தி அமைப்பது முதலாவது அம்சம். ரூ.15,000 ஊதியம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்துவதிலிருந்து ‘விலக்கு அளிப்பது’  மற்றொரு அம்சம். இந்த இரண்டாவது அமசம் பற்றி அதாவது, ரூ.15,000 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வைப்பு நிதி செலுத்துவதிலிருந்து விலக்குப் பற்றி ஓர் அலசல்.தமிழ்நாடு அரசு ஊழியர்களை உதாரணமாகக் கொள்வோம். இவர்களுக்கான ‘வருங்கால வைப்பு நிதி’ (general provident fund) இது 01.04.1935 முதல் அமலில் உள்ளது. முறையான அரசுப் பணியில் உள்ள அனைவரும் வருங்கால வைப்பு நிதி (general provident) சந்தாதாரர் ஆவது கட்டாயம். எவருக்கும் விதிவிலக்கு கிடையாது.அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்கள் முன்பு வரை, வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது அந்தந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.1976-ல் குறைந்தபட்சம் ரூ.15-ஆகவும் அதிகபட்சமாக ரூ.250-ஆகவும் இருந்தது. 1992-ல் குறைந்தபட்சமாக இருந்த சந்தா வீதம் ரூ.90-ஆகவும், அதிகபட்சம் ரூ.800-ஆகவும் இருந்தது. 2001-ல் குறைந்தபட்சமாக ரூ.360-ஆகவும் அதிகபட்சமாக ரூ.3,120-ஆகவும் இருந்தது. தற்போதைய குறைந்தபட்ச சந்தா தொகை ரூ.1,610-ஆகவும் அதாவது, இன்றைய தேதியில் அமலில் உள்ள சந்தா தொகை 12%.இதன்படி குறைந்தபட்ச ஊதியமான ரூ.6100 மற்றும் இதற்கான 119 சதவிகித அகவிலைப்படி மீது 12% என ரூ.1,610 கிடைக்கும்.12% கணக்கீடு  என்பது, ஊழியர் பெறும் அடிப்படை ஊதியம் (Basic pay), தர ஊதியம் (grade pay), தனி ஊதியம் (personal pay), சிறப்பு ஊதியம் (Special Pay) மற்றும் அந்தந்த தேதியில் தரப்படும் அக விலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 12% ஆகும்.எப்போதெல்லாம் ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு தரப்படுகிறதோ, அப்போது சந்தா தொகை, அதற்கேற்ப 12% பிடித்தம் செய்யப்படும். ஊழியர் விருப்பம் தெரிவித்தால், 12 சதவிகிதத்துக்கும் அதிகமான தொகையை வைப்பு நிதி சந்தாவாக செலுத்தலாம். மொத்த ஊதியம் அத்தனையையும்கூட சந்தா தொகை ஆக்கி சேமிக்கலாம், தடை இல்லை. ஆக எல்லா காலகட்டத்திலும் வருங்கால வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது ஊதியத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

வட்டி!

1976-ல் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் ஊடியர்களின் சந்தா தொகைக்கு தரப்பட்ட வட்டி விகிதம் 8%. இந்த 8 சதவிகித வட்டி விகிதமானது மெல்ல மெல்ல ஊர்ந்து, உயர்ந்து தொண்ணூறுகளில் 12 சதவிகிதமாக நிலைகொண்டது, அது மட்டுமன்றி செலுத்தப்பட்ட சந்தா தொகை இருப்பில் கடன் பெறாத - அதாவது, தொடர்ந்து இரண்டுஆண்டுகள் கடன் வாங்காத - கணக்குகளுக்கு ஒரு சதவிகிதம்போனஸ் வட்டி வழங்கப்பட்டு அதிகபட்ச வட்டி விகிதம் 13சதவிகிதமாக இருந்தது.2000 மாவது ஆண்டு வரை 12% சதவிகிதமாக இருந்த வட்டி, 2001-ல் 11% ஆக இறங்கி, 2002-ல் 9.5 சதவிகிதமாக குறைந்து 2003-ல் 9 சதவிகிதமாக சுருங்கி, 2004-ல் 8 சதவிகிதமாக குறைந்துவிட்டது. மறுபிறவி எடுத்தது போல் 2011-ல் 8.6 சதவிகிதமாக உயர்ந்து 1.4.2012-ல் 8.8 சதவிகிதமாக வளர்ந்த வட்டி விகிதம், 1.4.2013 முதல் மீண்டும் சரிந்து 8.7 சதவிகிதமாக உள்ளது. இந்த வட்டியை அரசுதான் வழங்குகிறது.

வட்டி சிறப்பு!

வேறு எந்த சேமிப்பு முறைக்கும் இல்லாத வட்டி சிறப்பு (Interest speciality) இந்த வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கு உண்டு. அதாவது, ஓர் ஊழியரின் ஜனவரி மாதம், பிப்ரவரி மாதம் அல்லது ஆண்டின் ஏதோ ஒரு மாதத்துக்கான ஊதியமானது, அவர் விடுப்பில் இருந்ததாலோ அல்லது வேறு ஏதாவதொரு காரணத்தாலோ ஓரிரு மாதங்கள் தாமதமாக வழங்கப்படலாம். ஊதியம் வரைவு செய்யும்போதுதான் வைப்பு நிதிக்கான சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும். என்றாலும், ஊதியம் எந்த மாதத்துக்கு உரியதோ அந்த மாதத்திலிருந்தே இந்த சந்தா தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இது வருங்கால வைப்பு நிதி வட்டி கணக்கீட்டின் மீதான சிறப்பம்சம்.

ஊழியர் பங்களிப்பை ரத்து செய்யலாமா?

‘ரூ.15,000/- ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதிக்கு சந்தா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாமா’ என்பது தற்போதைய பரிசீலனை. ‘அப்படி ரத்து செய்தால், அந்த குறைந்த சம்பளத்தினர் ரூ.1,800 சதவிகிதத்தை (அதாவது, இன்றைய நிலையில்) கூடுதலாக வீட்டுக்கு எடுத்துச் செல்வர்’ என்பது இந்தப் பரிசீலனைக்கான உபாயம். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை உயர்த்துவதற்காக  இந்த நடைமுறை பரிசீலனைக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனால், நடைமுறை சித்தாந்தம் எதிர்மறையாகத்தான் உள்ளது. அதாவது, குறைந்த சம்பளக்காரர்களின் சம்பளமானது அவ்வப்போது அளவு கூடினாலும், விளைவு கூடுவதில்லை என்பதே நிதர்சனம். எனவே, இந்த 1,800 ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று விளையப் போவது அதிகமில்லை, ரூ.15,000 சம்பளம் வாங்குகிறவர்களுக்கு!காணும் பொருள் யாவும் தேவையானதாகத் தோன்றும் கடை வீதியில் கண நேரம் நடந்து சென்றால், ரூ.1,800 அர்த்தமற்று கரைந்து போகலாம். இதைவிட பேரபாயம் ஒன்றும் உண்டு.

செல்ஃப் ஃபைனான்சியர்!

வருங்கால வைப்பு நிதியின்  இருப்பில் உள்ள தொகையில் 75% வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். நீண்ட கால, நிலையான சேமிப்பை இலக்காகக் கொண்டதுதான் வருங்கால வைப்பு நிதி என்றாலும், அவசர பணத் தேவைக்கு அடமானம் ஏதுமின்றி ஆறு மாதத்துக்கு ஒருமுறை கடன் பெற அபயமளிக்கும் செல்ஃப் ஃபைனான்சியர் இந்த வருங்கால வைப்பு நிதிதான். குறைந்த சம்பளத்தினருக்கு வருங்கால வைப்பு நிதியில் விலக்கு அளிக்கப் பட்டால் இந்த செல்ஃப் ஃபைனான்சியர் செத்துப் போய்விடுவார்.

சம்பளத்துக்கு ஏற்ப சந்தா சதவிகிதம்!

இது ஏற்புடைய ஒன்றுதான். ஏனெனில், அகவிலைப்படி (Dearness Allowance) வழங்குவதில் இப்படி ஓர் இரட்டை அணுகுமுறை ஆறாவது சம்பளக்குழு வரை அமலில் இருந்தது. அதாவது, கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு குறைந்த (சதவிகித) அகவிலைப்படியும், குறைந்த சம்பளத்தினருக்கு கூடுதல் (சதவிகித) அகவிலைப்படியும்தரப்பட்டது. 01.01.1996 முதல் அமலுக்கு வந்த ஆறாவதுஊதியக்குழு பரிந்துரைக்குப்பின் அனைவருக்கும் ஒரே சதவிகித அகவிலைப்படி என்றானது.கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதியின் சந்தா தொகையில் சதவிகித அளவை அதிகரிப்பதால்,அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் அவர்கள் ஏனைய சேமிப்பு முறைகளில் செய்யும் முதலீட்டை வருங்கால வைப்பு நிதிக்கே கூடுதல் சந்தா செலுத்தி பிரிவு 80சி-யின் கீழ் அனுமதிக்கப்படும் வரிக்கழிவை பெற்றுக் கொள்ளலாம்.ஆனால், குறைந்தபட்ச ஊதியமான ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் இருந்து விலக்கு அளிக்க முற்பட்டால், சேமிக்கவும் சேமிப்பில் கடன் பெறவும் அவர்களுக்கு உள்ள ஒரே வழியும் அடைபட்டுப் போகும். சந்தா தொகையை ரத்து செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை அதிகரிக்கலாம் என்கிற கொள்கை முடிவு ரூ.15,000 சம்பளம் பெறும் ஊதியத்தினரை பொறுத்தமட்டில் பாதகத்தையே ஏற்படுத்தும். குறைந்த சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களை நோகடிப்பதில் என்னதான் இன்பமோ!

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்கள் மாற்று அட்டை பெறுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினம் ஒரு புத்தகம் "யுரேகா யுரேகா கேள்வி பதில் தொகுப்பு"


பள்ளிகளில் காலை உணவு திட்டம்: தேமுதிக வாக்குறுதி

பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படும் என்று தேமுதிக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி வெளியிடப்பட்டது. அதன் விவரம்:-

பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு உதவித் தொகை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து திரிபலா"

பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது

தமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.அதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது. எனவே புதிய சட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.

சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ஆசிரியர்கள் மயக்கம்...தொடரும் போராட்டம்


ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி கோரி டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இடைநிலைஆசிரியர்கள்சங்கத்தினர் இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கும் முறை..

 அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்
        நிதியமைச்சர் அலுவலக வடக்கு பிளாக்கில்  உள்ள பாதாள அறையில் தயாரிக்கப்படும்
இதில் நிதித்துறை உயரதிகாரிகள் பங்கு பெறுவர்

"பள்ளிகளில் பணிபுரிவோருக்கு மாற்றுப் பணி கூடாது' என்று பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

எவ்வித ஆணையும் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர் அலுவலர்கள் மாற்று பணி அளிக்கக்கூடாதென பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எஸ். ராஜேந்திரபிரசாத் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப்போராட்டம்

ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை எதிர்த்து நாமக்கல்லில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அறப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டார்.

ஊழியர் 'ஸ்டிரைக்' நீடிப்பு ரூ.4,000 கோடி வரி வசூல் பாதிப்பு

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், வணிக வரி ஊழியர்களின், வேலை நிறுத்தம், 20 நாட்களாக நீடிக்கிறது. 'திருத்திய முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிக வரித்துறை ஊழியர்கள், பிப்., 3 முதல், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோவில் பிளவு?

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் (ஜாக்டோ), நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள தால் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.கோரிக்கைகளுக்காக தனித் தனியாக இயங்கி வந்த ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தின. இதில் சுமார் 25-க்கும் அதிகமான ஆசிரியர் சங்கங்கள் உள்ளன.பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைதல் ஆகிய இரு பிரதான கோரிக்கைகள் உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பணிப் புறக்கணிப்பு என பல கட்ட போராட்டங்களை ஜாக்டோ நடத்தியது.

பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம் - இயக்குனர் செயல்முறைகள்


பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'செக்': தேர்வு துறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு

அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும்வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், 'சென்டம்'எனப்படும், 100 சதவீத மதிப்பெண் பெறுவதற்காக, கடும் முயற்சி எடுக்கின்றனர்.

பிளஸ்–2 தேர்வுக்கு தட்கல் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று முதல் ‘ஹால்டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை(ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசு இ-சேவை மையங்களுக்கான முகநூல் பக்கம் உருவாக்கம்: தமிழக அரசு தகவல்

அரசு இ-சேவை மையங்களுக்கான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு இ-சேவை மையங்கள் குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்
குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-