Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 4 March 2016

தமிழர்களின் அடையாளம் திருக்குறள் அமெரிக்க வாழ் இந்தியர் பேச்சு

காட்சி வழியாக தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களை   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா 

தேவகோட்டை - தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் ,அவைகளின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது. 
                                        விழாவிற்கு வந்திருந்தோரை பள்ளி  தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் வரவேற்றார்.பள்ளி செயலர் சோமசுந்தரம் தலைமை தங்கினார்.பள்ளி கல்வி தலைவர் மீனாட்சி ஆட்சி,கண்ணங்குடி உதவி  தொடக்க கல்வி அலுவலர் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குனர் அழகப்பா ராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும் , இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகையில் , அறிவியல் இயற்பியல் மிகவும் முக்கியமானது.அதன் மொழி கணிதம்.இவை வலி வந்தவைகளே வேதியல் மற்றும் ஏனைய அறிவியல் துறைகள்.நாமும்,நம்முடைய உலகமும் ,  வகிக்கும் சூரிய குடும்பமும்,அக் குடும்பம் இயங்கும் இந்த அண்ட வெளியும் அதன் விண்மீன் தொகுதிகளும் கொண்டதே இப் பிரபஞ்சம்.ஆண்ட இயந்திரம் என்ற இப் பிரபஞ்சத்தின் இயந்திரமயமான இயக்கத்தையும் அதற்க்கு அப்பாலும் உள்ள அறிவியல் உண்மைகள் ,உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மூன்று பகுதிகளாக வழங்குகிறது.இதை முதல் நூலாக அமெரிக்காவில் உள்ள ஆனேன்பெர்க் அறக்கட்டளையும்,கேம்பிரிட்ச் பல்கலைகழகமும் வெளியிட்டதை தொடர்ந்து இவைகள்  பரிசுகளையும்,பல்வேறு நாட்டு அங்கிகாரத்தையும்  உலகளாவிய முறையில் பெற்றுள்ளது.உலக அளவில் பல மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் பல நாடுகளில் இயற்பியல் துறையில் சாதனை படித்து கற்ப்பிக்கபடுகிறது.அதன் தமிழ் வடிவமே நீங்கள் பார்க்கும் இந்த நூல்.இயற்பியலை 26 மணியளவில் 52 அரை மணி நேரக் காட்சிகளாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் துணைப் பாடமாக இரு பகுதிகளாக கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் எழுதி தயாரிக்கப்பட்டது.இந்த நூல்கள் .அதோடு இந்த நூல்களில் வரும் கேள்விகளுக்கு விடையும் மூன்றாவது பகுதியாக தரப்பட்டுள்ளது.

            ' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று நமது சூரிய குடும்பத் தலைவனைப் போற்றி தனது சிலம்பு காவியத்தை இளங்கோ அடிகள் தொடங்குகிறார்.இந்த கதிரவன் வரலாறு தான் நம் வரலாறு.அந்த வரலாறு தான் இயற்பியல்.அதனை இரு தொகுதிகளாக இப் புத்தகம் விளக்குகிறது.முதல் தொகுதி வன்னில் இயங்கும் பெரிய உருக்களைப் பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும்  செல்கிறது.அதனை 'இயந்திர அண்டம்'என்ற தலைப்பில் விளக்குகிறது.அதனை அடுத்து இரண்டாம் தொகுதி 'இயந்திர அண்டமும் அதற்கு  அப்பாலும்'என்று பிரபஞ்சத்தில் இயங்கும் மிக சிறிய உருக்களை பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் சொல்லி செல்கிறது.இதனை இளம் வயது மாணவர்களாகிய நீங்கள் நன்றாக பார்த்து எதிர்காலத்தில் அறவியல் விஞ்ஞானிகழாக வர வேண்டும் என்று பேசினார். திருக்குறள்தான் தமிழர்களின் அடையாளம் என்றும் பேசினார்.குறுந்தகடு  பெரிய திரையில்  வெளியிடப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.அறிவியல் தொடர்பாக காட்சி வழி ஆர்வமூட்டுவதாக இருந்ததாக தெரிவித்தனர். விழா நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.
 
பட விளக்கம் : தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் ,அவைகளின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.                                 

தினம் ஒரு புத்தகம் "பள்ளிக்கூடத்தேர்தல்'


தொடக்கக்கல்வி - மாணவர்களின கல்வி தரத்தை மேம்படுத்த AEEO/BRTE கொண்ட குழு பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி "திடீர் பார்வை" SURPRISE VISIT மேற்கொள்ள உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "ஆயில் புல்லிங் இன் மூலம் கிடைக்கும் நன்மைகள்"

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கைக்கு உதாரணமான மாணவர் : கால்களால் தேர்வு எழுதிய மாணவர்


நாமக்கல்: தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் மகேஷ்குமார் தனது கால்களால் தேர்வு எழுதினார். கைகள் இல்லாத நிலையில் சொந்த முயற்சியிலேயே கால்களை கொண்டு தேர்வு எழுதியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியது. மாற்றுதிறனாளி பள்ளியில் பயின்று வரும் மகஷே்குமார் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தூய்மையில் முதன்மை ‘பசுமை’ பள்ளிக்கு பரிசுத்தொகை


சோழவந்தான்: சோழவந்தான் அருகே அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தை தூய்மையாகவும், தாவரங்கள் மற்றும் மூலிகை செடிகள் நட்டு சுற்றுச்சூழலை தூய்மையாக பராமரிக்கும் அரசு பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 60 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிட வளாகத்தில் 6 வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. 15 ஆசிரிய-ஆசிரியைகள் உள்ள இப்பள்ளியில் சுமார் 140 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை : பள்ளி கல்வித்துறை

சென்னை: தேர்தல் தேதியால் பள்ளி தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் தேதிக்கு முன்பாக பள்ளி தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிடும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்

12ம் வகுப்பு தேர்வுகளை எதிர்கொண்ட மாணவர்களிடம் உற்சாகம்: கேள்விகள் மிக எளிது என மாணவர்கள்

12ம் வகுப்பு தேர்வுகளை எதிர்கொண்ட மாணவர்களிடம் உற்சாகம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின. மாநிலம் முழுவதும் 8,40,000 மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கின்றனர். முதல் நாளான இன்று தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடைபெற்றது.

படிக்க வேண்டாம், அப்படியே மூளைக்குள் ஏற்றலாம்!

அமெரிக்காவிலுள்ள, 'எச்.ஆர்.எல்., லேபரெட்டரீஸ்' என்ற ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதியவற்றை கற்றுக் கொள்வதிலுள்ள தடுமாற்றத்தையும், சிரமத்தையும் வெகுவாகக் குறைக்க, ஒரு தொழில் நுட்பத்தை சோதித்து வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வெழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்கின.

இத்தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சலுகையை கல்வித்துறை அளித்துள்ளது. சொல்வதை எழுதுபவர்கள், மொழிப் பாடங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தல்: நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்தன.

உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி.

சென்னையில் செயல்பட்டு வரும் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

PGTRB:1,063 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்:விரைவில் டி.ஆர்.பி., தேர்வு.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.2016--17ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோர் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் நிலை உள்ளது.

மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது...

அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தி காலியிடங்களை நிரப்புவது, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஆசிரியர் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற அறவழி போராட்டத்தை தொடங்கினர்.

வி.ஏ.ஓ., தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு.

வி.ஏ.ஓ., தேர்வுக்கான விடைக்குறிப்புகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள, 813, வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு, கடந்த, 28ம் தேதி தேர்வு நடந்தது. இதில், 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்து, 7.70 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக,தேர்வர்கள் தெரிவித்தனர்.

30 ஏ.இ.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு

சென்னை : பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில், 3 சதவீதம் மட்டும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கானதண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது அதன் விவரம்:

1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.

'அரசு பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத்தனமாக உள்ளனர்'

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமையில் நடந்தது. இதில், பள்ளி கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:சென்னை உள்ளிட்ட, நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்புகளால், ஒரு மாதம் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.

சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, சத்துணவு அமைப்பாளராக, தமிழகத்திலேயே முதல் முறையாக, திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் ஒன்றியம்,சிறுநாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 56; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி ஜெயகாந்தி, 52. இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தமிழ் நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.

*வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் :  .22.04.2016.

*வேட்பு மனு தாக்கல் முடிவு:  .29.04.2016.

*மனுக்கள் பரிசீலனை : 30.04.2016.

*வேட்பு மனுக்கள் வாபஸ் :  .02.05.2016.

#வாக்குப் பதிவு நாள் :  .16.05.2016.

#வாக்கு எண்ணிக்கை:.  19.05.2016.
     

                 -திரு.நஜீம் ஜைதி.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது: காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம்

பிளஸ்-2 தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தேர்வில் காப்பி அடிப்பதை கண்காணிக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இத்தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம்- புதுச்சேரியில் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்கள் என மொத்தம் இந்தாண்டு 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதவுள்ளனர். புதுச்சேரியில் 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 421 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் வழியில் படித்த 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர 106 சிறைக்கைதிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.

இந்த ஆண்டு முதன்முறையாக ‘ஹால் டிக்கெட்’டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்வுக்கு முன்பே தேவையான அறிவுரைகளை தெரிந்துகொள்ளலாம்.

பிளஸ்-2 தேர்வில் ‘காப்பி’ அடிப்பதை கண்காணிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘பிட்’ அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Flash News:பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் காலியாக இருந்த 125 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவிஉயர்வு மூலம் நிரப்பி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தொழில்நுட்பத்தில் அசத்தும் அரசுப் பள்ளிக்கு அங்கீகாரம்!

விருதைப் பெறும் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி (வலது ஓரம்)

தகவல் தொழில்நுட்பம் மூலம் புதுமையாகக் கற்பித்தலில் சிறந்த பள்ளிக்கான தேசிய அளவிலான விருதை சின்னமுத்தூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி வென்றிருக்கிறது.தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு நிறுவனமான ICTACT, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் அரசு எல்காட் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் தகவல் தொழில்நுட்பக் கல்வி முறையிலான போட்டிகள் பள்ளிகளுக்குநடத்தப்படுகின்றன. 

இது இளைய தலைமுறையினரிடம் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் இப்போட்டியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கலந்துகொள்கின்றன. அதில் சீரிய முறையில், தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிறப்பாகக் கல்வியளிக்கும் பள்ளிகளைத் தேர்வு செய்கின்றனர்.அதையொட்டி, இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில், 12 மாநிலங்கள் பங்கேற்றன. மொத்தம் கலந்து கொண்ட 1316 பள்ளிகளில், 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றியம், சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 'தேசிய அளவில் தகவல் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சிறப்பாகக் கல்வியளிக்கும் ஒரே அரசுப்பள்ளி' என்னும் பெருமையைப் பெற்றது.இதற்கான விருது வழங்கும் விழா கடந்த வாரம், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. 

இதில் ICTACT தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமார், எல்காட் நிறுவன நிர்வாக இயக்குனர் அடல்ஆனந்த்., இ.ஆ.ப., தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் ராமச்சந்திரன்., இ.ஆ.ப., மிலிண்ட் கொரட் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், ஏராளமான தனியார் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.ஆஸ்திரேலியாவின் MBD GROUP முதன்மை நிர்வாக அலுவலர் மோனிகா மல்கோத்ரா, சின்னமுத்தூர் அரசுப்பள்ளிக்கு ''சிறந்த தொழில்நுட்பப் பள்ளி'' (THE BEST TECH SCHOOL AWARD - 2016) விருதை வழங்கிச் சிறப்பித்தார்.