Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 14 March 2016

+2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியீடு அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  தகவல் தெரிவித்துள்ளார்

தினம் ஒரு புத்தகம் "தாயும் சேயும் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "க‌ண் பா‌ர்வை‌க்கு ஏ‌ற்ற உணவுக‌ள்"

வார‌த்‌தி‌ல் குறை‌ந்தது இர‌ண்டு முறையாவது நா‌ம் உ‌‌‌ண்ணு‌ம் உணவில் கீரையைச் சேர்த்துக் கொ‌ண்டு வ‌ந்தா‌ல், முதுமையில் ஏற்படும் க‌ண் பார்வை கோளாறுகளை தடு‌க்கலா‌ம்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் தேர்வுகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
இந்த தேர்வை 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று நடந்த +2 வேதியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள்.

இன்று நடந்த +2 வேதியல் தேர்வு பாடத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினார்கள் மேலும் 200/200 எடுப்பது கடினம் எனவும் கூறினார்கள்.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி; ஆசிரியர்கள் வலியுறுத்தல்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

"அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'

தமிழகத்தில் உள்ள 60,000 கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்குவதுதான் இலக்கு என ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.

மார்ச் மாதம் குடும்ப நலநிதி ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90 பிடித்தம் செய்ய வேண்டும்

குடும்ப நலநிதி உயர்த்திய அரசாணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016
எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90
மட்டும் மார்ச் மாத ஊதியத்தில்  பிடித்தம் செய்ய வேண்டும்
ஏப்ரல் மாதம் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.

பிளஸ் 2 தேர்வுபணியில் திடீர் இடமாற்றம்: ஆசிரியர்கள் அதிருப்தி; சந்தேகம்!

பிளஸ் 2 தேர்வுபணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிளஸ் 2 தேர்வு கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடத்தேர்வுகளுக்கு, குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட பள்ளியில் தேர்வு கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367மாற்றுத்திறன் மாணவியருக்கு,தலா, 2,000ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில்,மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தில்,ஒன்பதாம் வகுப்பு முதல்,பிளஸ்2வரை படிக்கும் மாற்றுத்திறன் மாணவியர்களுக்கு,உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கணித திறனறிதல் தேர்வு; மாணவர்கள் சிறப்பிடம்.

தமிழ்நாடு அறிவியல் மற்றும்தொழில்நுட்ப மையத்தின் சார்பில் நடந்த,கணித திறனறிதல் தேர்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில்,ராமானுஜர் பிறந்த நாளையொட்டி,கோவை மண்டல அளவில் கணித திறனறிதல் போட்டி நடந்தது.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.

கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து,முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,)மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு



10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்

வேலுார் சிறைவாசிகள், 17 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்னை சென்றனர்.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும், 15ம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட சிறைவாசிகள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

350 மருந்துகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு

அங்கீகாரம் பெறாத தயாரிப்பு முறையில் உற்பத்தியாகும்எப்.டி.சி., ரக மருந்துகளான பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.வலி நிவாரணத்திற்கு உட்கொள்ளப்படும் இவ்வகை மருந்துகளின், மார்க்கெட் மதிப்பு ரூ.1,500 கோடி இருக்கும் என மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ நுழைவு தேர்வில் தமிழகம் ' 0' --அ.வெண்ணிலா- கவிஞர்

நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து. வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.

சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு

சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்றுவெளியாகின்றன.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,'சென்னை பல்கலையால், நவம்பரில் நடத்தப்பட்ட இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான, மறு கூட்டல் தேர்வு முடிவுகள், மார்ச், 14 மாலை வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: முதுநிலை ஆசிரியர்கள் விரும்பும் மையத்தை தேர்வு செய்ய வாய்ப்பளிக்க கோரிக்கை.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் சிவகங்கை மாவட்ட முதுநிலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் மையத்தைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில தனியார் பள்ளிச் செயலர் பி.சுப்பிரமணியன் கூறியதாவது:

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரத்து 749
மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

Manonmaniam Sundaranar University Convocation -Application Form for obtaining Degree Certificate for those who passed in Nov 2014 & April 2015