Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 18 March 2016

அரசு விளம்பரங்களில் ஆளுநர், முதல்வர், அமைச்சர் படங்களை பயன்படுத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம்

முதல்வர் படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த ஆண்டு மே மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு விளம்பரங்களில் முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் படங்களை அச்சிடுவதால் தனிநபர் போற்றுதல் போக்கு அதிகரிக்கும். எனவே, அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தமிழகம், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய மாநில அரசுகளின் மறுஆய்வு மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் மாநில ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் படம் இடம்பெற தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு: பிபிஎப் வட்டி 8.1 சதவீதமாக குறைப்பு

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்து நிதியமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. அப்போது சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் 0.25% குறைக்கப்படுவதாகவும், இந்த வட்டிவிகிதம் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான காலாண்டு வட்டி விகிதத்தை இன்று மாற்றியமைத்துள்ள மத்திய அரசு, புதிய வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. அதன்படி, பிபிஎப் திட்டத்துக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் 8.7 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு வழங்கப்படும் வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவலகத்தில் சேமிக்கப்படும் கால வரையறையுடன் கூடிய சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு டெபாசிட்டுக்கு 8.4 சதவீதத்தில் இருநது 7.1 சதவீதமாகவும், 2 ஆண்டு டெபாசிட்டுக்கு 8.4 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாகவும், மூன்றாண்டு டெபாசிட்டுகளுக்கு 8.4 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 8.5 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாகவும், 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 8.4 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வழக்கமான சேமிப்புக்கு வழங்கப்படும் 4 சதவீத வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.

5 ஆண்டுகளில் முதிர்வடையும் தேசிய சேமிப்பு பத்திரங்களுக்கு (என்எஸ்சி) வழங்கப்படும் வட்டி விகிதம் 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளில் முதிர்வடையும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 9.3 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு (சுகன்ய சம்ரிதி) வழங்கப்படும் வட்டி விகிதம் 9.2 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட இந்த புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai university DDE - Examination Results - December 2015

ஆங்கில உச்சரிப்புக்கு உதவும் 'Syllable Chart' !!


தினம் ஒரு புத்தகம் "ஞான மலர்கள் '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்"

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

PRIMARY & UPPER PRIMARY CRC MODULES 19.03.2016

TNPSC - Results of Departmental Examinations December 2015 List of Tests Published


பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமை: மாணவர்கள் மகிழ்ச்சி.

பிளஸ் 2 கணிதத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 5-ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றது.

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-குழு காப்பீட்டு திட்டம் குடும்ப நல நிதி(FBF) ரூ 150000 லிருந்து ரூ 300000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.மாத சந்தா தொகை ரூ 30 லிருந்து ரூ 60 ஆக உயர்த்தி சம்பளத்தில் பிடித்தம் செய்தல் சார்பு


எஸ்பிஐ வங்கியில் அதிகாரி பணி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 152 சிறப்பு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உறுதிமொழி படிவம்; ஆசிரியர்கள் திணறல்...!

மாணவர் வாயிலாக அளிக்கப்பட்ட ஓட்டளிப்பு உறுதிமொழி படிவத்தை, பெற்றோர் பலர், கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்; வாக்காளர் பட்டியலில் பெயரே இல்லாத நிலையில், எப்படி ஓட்டளிப்பது என்ற பெற்றோரின் கேள்வியால், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கோடு, தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது. இதற்கென, பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

விண்ணப்பித்து விட்டீர்களா..? விரைந்திடுங்கள்!

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016
இணையதள முகவரி: www.kvsrojammu.org
பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பல்வேறு பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016.
இணையதள முகவரி: www.indiannavy.nic.in

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய பென்ஷன் திட்டம் ஆராய வல்லுனர் குழு-அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பத்தாம் வகுப்புகள் போதிக்க ஒதுக்கீடு செய்வதில் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்.

TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எதிர் வரும் கல்விஆண்டிற்கான பத்தாம் வகுப்புகளை ஒதுக்கீடு செய்ய தலைமை ஆசிரியர்களிடையேகுழப்பம்

TNTET தேர்ச்சி பெறாவிட்டாலும் சம்பளம் உண்டு?

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேரர்வு கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

போனஸ் மதிப்பெண் உண்டா?10ம் வகுப்பு தமிழ் 2ம் தாளில் பிழை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ், இரண்டாம் தாளில் பிழையாகவும், பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தும் கேள்விகள் இடம் பெற்றதால், போனஸ் மதிப்பெண்வழங்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது

கடினமான கணிதத் தேர்வுக்கு உரிய தீர்வு: சிபிஎஸ்இ

பிளஸ் 2 கணிதத் தேர்வுக்கு உரிய தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

சென்னை:சென்னை பல்கலையின் தொலைநிலைக் கல்வி தேர்வுகள், 2015 டிசம்பரில் நடந்தன.இதில், எம்.பி.ஏ., -எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும், இன்று இரவு, 8:00 மணிக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்

பிளஸ் 2 வணிகவியல் தேர்வு:சராசரி மாணவர்களும் 'குஷி'

பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, 'காமர்ஸ்' தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்.

பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தில் பயிலும் மாணவர்கள் தேர்வு விண்ணப்பத்தினை இணைய வழியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வசதி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.தொலைக்கல்வி மையத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் மேற்கண்ட வசதியினைதொடக்கி வைத்து பேசியதாவது: