Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 20 March 2016

ஹோலி பண்டிகைக்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பொது விடுமுறை அறிவிப்பு


பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் முதன் முறையான இந்துக்களின் பண்டிகையான ஹோலிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த நிலையில், அவர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக அந்தப் பிரிவினரின் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு விடுமுறை அளிக்க பாகிஸ்தான் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்துக்களின் பண்டிகையான தீபாவளி மற்றும் ஹோலிக்கு பாகிஸ்தானில் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகைக்கும் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹோலி பண்டிகைக்கு சிந்து மாகாண அரசு பொது விடுமுறை அளிப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சிந்து மாகாண அரசு, வருகின்ற மார்ச் 24-ம் தேதி ஹோலி பண்டிகைக்கு விடுமுறை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தானில் உள்ள மைனாரிட்டி இந்துகளுக்கு மட்டும் இந்த பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தான் இந்த பண்டிகைகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் கோலோகல கொண்டாட்டம் ஆசிரியர் வைபவம் -ஆசிரியர்களின் தனித்திறன் திறமைக்கு தமிழ்நாட்டிற்கு முன் உதாரணம் புதிய தலைமுறை கல்வியின் உதவி ஆசிரியர் கணேசன் மற்றும் திரு குருராஜ் பேச்சு













தினம் ஒரு புத்தகம் "மாணவர்களுக்கு சொன்னது "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்'

தாவரவியல்படி முந்திரியின்  பேரினம் அனகார்டியம், ஆகும். இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல்  மற்றும் அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும்.

வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரூ.5000/லிருந்து ரூ.6000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது...


10ம் வகுப்பு தேர்வு புதிய அறிவிப்பு.

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. ஏப்ரல், 7ல் அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், '10ம் வகுப்பு அறிவியல் தேர்வு எழுத வரும் மாணவர் அல்லது தனித்தேர்வர் யாராக இருந்தாலும், செய்முறை தேர்வை எழுதியிருக்க வேண்டும். 

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு 10 மாதங்களாக சம்பளமில்லை...

தமிழகத்தில், ௧௦ ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களுக்கு கடந்த, 10 மாதமாக சம்பளம் வழங்காததால் உணவுக்கே பரிதவிக்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு அரசு வழங்கும் நலத்திட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய பட்டப்படிப்புடன், ஓராண்டு கம்ப்யூட்டர் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அரசின் அடிப்படை விவரக் குறிப்பு எழுதுபவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிளஸ் 1 வகுப்பு இறுதி தேர்வு நடந்து வரும் நிலையில்,அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் கீழ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 

சத்துணவு வழங்கப்படாததால் மாணவர் வருகை குறைவு ஆசிரியர்கள் சங்கம் புகார்.

தமிழக பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாததால் மாணவர்கள் வருகை சதவீதம் குறைந்துள்ளது' என, தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.தமிழக அரசு 1984 ஜூலை 26ல் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் (சனிக்கிழமை உட்பட) ஆண்டுக்கு 220 நாட்கள் சத்துணவு வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் காவல்துறையில் காலியாக உள்ள 19,157 பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

தேர்தல் முடிந்த கையோடு தமிழக காவல்துறையில் நீண்டகாலமாக காலியாக உள்ள 19,157 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

நாளை கணினி அறிவியல் தேர்வு 4 வகை வினாத்தாள் தயாரிப்பு

பிளஸ் 2 தேர்வில் நாளை நடக்கவுள்ள கணினி அறிவியல் தேர்வில், நான்கு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.பிளஸ் 2 தேர்வில், கணினி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நாளை கணினி அறிவியல் தேர்வு நடக்க உள்ளது. தேர்வில், 30 பக்கங்களுக்கு கோடில்லாத விடைத்தாள்கள் வழங்கப்படும்.

75 வினாக்களுக்கு... 

 மேலும், ஒரு மதிப்பெண்ணில், 75 வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். இதற்காக, 'ஆப்டிகல் மார்கிங் ரெகக்னிஷன்' என்ற, ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில், இதுபோன்ற வினாத்தாள்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்:விடைத் தாள் களை சேதமடையாமல், தேர்வெழுத வேண்டும். விடைத்தாளின் முகப்பில் பெயர் மற்றும் பதிவெண் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.விடைகளை குறிக்கும் கட்டங்களில் குறியீடு (ஷேட்)செய்ய, கறுப்பு பால்பாயின்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கையொப்பம் இடும்போது, அதற்குரிய கட்டத்தை தாண்டி, எழுத்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாள் சேதமடைந்திருந்தால், மாற்று ஓ.எம்.ஆர்., விடைத்தாள் பெற்று தேர்வெழுதலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

முறைகேடாக...
இந்த தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் வகை வினாக்கள் என்பதால், விடையை சைகை மற்றும் எண் அடிப்படையில் மாணவர்கள் முறைகேடாக பகிர்ந்து கொள்ள முடியும். எனவே, அதை தடுக்க, நான்கு வகை வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.அருகருகில் இருக்கும் மாணவர்களுக்கு, இந்த வினாத்தாள்கள் ஒரே வகையாக இல்லாமல் மாற்றி வழங்கப்படஉள்ளது.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகள் கணக்கெடுப்பு.

அறிவியல் ஆய்வகம் இல்லாத அரசு பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதில், 6,௦௦௦க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன.

பிளஸ் 2 தேர்வு கடினம்: பி.இ., 'சீட்' கிடைக்குமா?

பிளஸ் 2 தேர்வுகள் கடினமாக உள்ளதால், வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கட் ஆப்' மதிப்பெண் குறையும். அதனால், திறமையான மாணவர்களுக்கே, பி.இ., - பி.டெக்., படிப்பில், விரும்பிய பாடம் மற்றும் கல்லுாரி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழி பாடங்கள் முடிந்து, உயர்கல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பாட தேர்வுகள் நடந்து வருகின்றன. 

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

மாதம் ரூ.3,000 சம்பளத்தில் முழுநேர பணி அரசுபள்ளி துப்புரவு பணியாளர்கள் கொதிப்பு.

அரசு பள்ளிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள்,கால முறை ஊதியத்துக்கு மாற்றப்படாததால், நான்கு ஆண்டுகளாக, மாதம், 3,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், கடந்த, 2012ம் ஆண்டு, 3,000 துப்புரவு பணியாளர்கள், 2,000 இரவுக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதெல்லாம் 100 சதவீத தேர்ச்சிக்கான முயற்சி!

சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் கட் அடித்த மாணவர்களை,செய்யாறு அரசு பள்ளி ஆசிரியர்கள் தேடித் தேடி அழைத்து, பாடம் நடத்திய வினோதம் நடந்திருக்கிறது. இது,100 சதவீத தேர்ச்சிக்கான தீவிர முயற்சி என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு உயர்நிலைப்பள்ளியில், 1௦ம் வகுப்பில் மட்டும், 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். 

ஆறு வயதில் சாலை விழிப்புணர்வு பாடம்: விபத்தில்லாமல் ஆயுளுக்கும் தொடரும்.

அவசர மயமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களின் வாழ்க்கையில், 'விபத்து நேருமிடம் பார்த்து செல்லவும்' என்ற வாசகத்தைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு அவசரமாய் சென்று, அவர்களின் வாழ்க்கை பயணத்துக்கும் முற்றுப்புள்ளியை வைத்துக்கொள்கின்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி: புறக்கணிக்கும் ஆசிரியர்களால் அவதி.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, ஆசிரியர்களை அனுப்ப மறுக்கும், தனியார் பள்ளிகளின் போக்கு, கல்வித்துறை அலுவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக, மாவட்டங்களுக்கு,இரண்டு முதல், நான்கு மையம் வரை அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு தாமதம்: தேர்வுப் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் நீக்கம்

பிளஸ் 2 தேர்வு தாமதமாகத் தொடங்கிய விவகாரத்தில், முதன்மைக் கண்காணிப்பாளரான தலைமை ஆசிரியரை தேர்வுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், வெள்ளிக்கிழமை பிளஸ் 2 விலங்கியல், கணித பாட பொதுத் தேர்வு நடைபெற்றது.

இளம் மாணவர்கள் விவசாய படிப்பில் சேருவதை குறிகோளாக வைத்து கொள்ள வேண்டும்விவசாய கல்லூரி டீன் பேச்சு

நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விவசாய கல்லூரியில் ஒரு நாள்தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் களப் பயணமாக சேது பாஸ்கரா விவாசய கல்லூரிக்கு சென்றனர்.

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஓவிய போட்டியில் இறுதி சுற்றில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள்

தி ஹிந்து ஆங்கில நாளிதழ் சார்பாக சில தினங்களுக்கு முன்பு ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 20 பேர்ஆசிரியை முத்து லெட்சுமி வழிகாட்டுதலின்படி போட்டியில் பங்கு பெற்றனர்.இவர்களில் இரண்டு மாணவிகள் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்று இன்று (19/03/2016) மதுரையில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கின்றனர்.

சர்வதேச தலைவராக பிரதமர் மோடி பிரபலமாவதற்கு டுவிட்டர் உதவிகரமாக இருந்தது: அமெரிக்க ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் தகவல்துறையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோயோஜித் பால். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் பிரதமர் மோடி சர்வதேச அளவில் பிரபலமான தலைவராக மாறியது எப்படி? என ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டுகளை ஆராய்ந்து இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதுகுறித்து பேராசிரியர் ஜோயோஜித் பால் தெரிவித்தவை பின்வருமாறு:-

டுவிட்டரில் பிரதமர் மோடி தொடர்ந்து தனது எண்ணங்களை பகிர்ந்து வந்ததே அவரை சர்வதேச அளவில் பிரபலமாக உயர்த்த உதவியாக இருந்தது. நாட்டு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அவர் டுவிட்டரை ஒரு சரியான கருவியாக பயன்படுத்தினார். இதுவரை இருந்த இந்திய பிரதமர்களிலேயே மக்களுடன் அதிகம் தொடர்பிலிருக்கும் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்.

ஒரு குடிமகனாக இருக்கலாம். ஒரு பத்திரிகை செய்தியாளராக இருக்கலாம். அல்லது ஒரு தொலைக்காட்சி சேனலில் பணியாற்றுபவராக இருக்கலாம். பிரதமரின் பேச்சை கேட்க வேண்டும் என்றால் அவரது சமூக வலைத்தளங்களுக்குள் சென்றால் போதும். பிரதமரின் கருத்துக்களை பதிவு செய்ய ஒரு முக்கிய இடமாக சமூக வலைத்தளம் உள்ளது. பிரதமர் மோடி டுவிட்டரில் செய்யும் பதிவுகள் அனைத்தும் குறைந்தது 1000 முறையாவது ரீடுவிட் செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் அரசின் தலைமை அவ்வப்போது செய்தியாளர் சந்திப்புகளில் தோன்றுவது வழக்கம். ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. எனினும், பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களையே தனது செய்திகளை வெளியிட கருவியாக பயன்படுத்தினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.