Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 3 April 2016

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியாக வாய்ப்பு ?

சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுவதால், தமிழகம் மற்றும் புதுச் சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.

தமிழகம் மற் றும் புதுச்சேரியைச் சேர்ந்த 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட் சத்து 91 ஆயிரத்து 806 மாண வர்களும், 4 லட்சத்து 47 ஆயி ரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வுகள் நடந்த போதே முடிவுற்ற தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கள் கூறியதாவது:விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக, தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 14-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கிவிட்டது. தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.வேதியியல் உள்ளிட்ட பாடங் களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும்5-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதற்காக, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கடைசியாக நடந்த தேர்வுகளான இயற்பியல் மற்றும் வணிகவியல் பாடங்களின் விடைத் தாள்கள் திருத்தும் பணி 6-ம் தேதி முதல் தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதி நடைபெற உள் ளது. இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட கல்வித்துறை திட்டமிட் டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குறிப்பாக, பொறியியல் படிப்பு களுக்கு இம்முறை ‘ஆன்-லைனில்’ மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான 15 தினங் களில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளைத் தவிர்க்கஇதனால், தேர்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்றவை இருக்கும் என்பதால் மே 2-வது வார இறுதியிலோ அல்லது அதற்கு பிறகோ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல்வேறு சிக்கல் களை ஏற்படுத்தும். எனவே, பிரச்சினைகளைத் தவிர்க்க, முன்கூட்டியே பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மே 9-ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான (100 நாள் வேலைத் திட்டம்) மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) ஊதிய விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 183 ரூபாயிலிருந்து 203 ரூபாயாகவும், கேரளாவில் 229 ரூபாயிலிருந்து 240 ரூபாயகவும, கர்நாடகவில் 204 ரூபாயிலிருந்து 224 ரூபாயாகவும், ஆந்திராவில் 180 ரூபாயிலிருந்து 194 ரூபாயாவும் உயர்த்தப்பட்டுள்ளது.2016-17 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 100 நாள் வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்காக ரூபாய் 38,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகநிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில், ஊதிய உயர்வு குறித்து ஊடகங்களில் விளம்பரப்படுத்தக்கூடாது, பிரசாரத்திலும் ஊதிய உயர்வுகுறித்து பேசக்கூடாது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 4 பல்கலைக்கழகங்களில் விரைவில் வெளிநாட்டுப் பேராசிரியர் கற்பிக்கும் புதிய திட்டம்: யூஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் தகவல்.

தமிழகத்திலுள்ள 4 பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டுப் பேராசிரியர்கள் மூலம் புதிய பாடப் பிரிவுகளை கற்பிக்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாகமத்திய பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் கூறினார்.மதுரை விரகனூரிலுள்ள வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றபட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், பல்கலைக்கழகங்களில் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்காக வெளிநாட்டிலிருந்து 1,000 பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடம் கற்பிக்கும் "கியான்' எனும் புதிய திட்டம் விரைவில் தமிழகத்தில் சென்னை, மதுரை காமராஜர், பாரதிதாசன், பாரதியார் ஆகிய பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படும். ஒன்று அல்லது இரு வாரங்கள் பாடம் கற்பிக்கும் அவர்களுக்கு, வாரத்துக்கு 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும். ஸ்வாம் எனும் இணையதள கல்வி முறையை ஜூலை மாதம் பிரதமர் தொடங்கிவைக்கிறார். அதன்படி யார் வேண்டுமானாலும் தேவையான பாடத்தை இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

எதிர்காலத்தில் இணையத்தின் மூலம் மட்டுமே கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில் தற்போது கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும் தரச்சான்று முறையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. ஏப்.8ஆம் தேதி நடைபெறவுள்ள பல்கலைக்கழக மானியக்குழுக் கூட்டத்தில், தனியார் கல்லூரிகளுக்கு தரத்தின் அடிப்படையில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட மாற்றங்களைக் கொண்டுவரும் திட்டம் உள்ளது என்றார்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "இயற்கை உணவின் இனிய பயன்கள்"


இயற்கை உணவின் இனிய பயன்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு உள்ளது. இயற்கை உணவில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, சமையல் உணவுக்கு அடிமையானவர்களுக்கு, இயற்கை உணவின் அளப்பரிய இனிய பயன்கள் புரியாது. ஓரளவாவது இயற்கை உணவில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப் பேருண்மை ஓரளவுக்குப் புரியும்.

தினம் ஒரு புத்தகம் "அறிவியல் கண்டுபிடிப்புகள் "


ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்: ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி

ஆதரவற்ற ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த இல்லம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தாய் தந்தையை இழந்து தவிக்கும் ஏழை மாணவர்கள் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் தங்கி படிக்கலாம்.

மாணவர்களின் தற்கொலையை தடுக்க ஆலோசனை:முறையாக நடத்தப்படாததால் அரசு நிதி வீண்

மாணவ, மாணவியரின் தற்கொலை முயற்சிகளை தடுக்க, ஆலோசனை கூறுவதற்கான திட்டம், பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு தரும் முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

TATA-சங்கத்தின் CPS வழக்கு-4.4.16 அன்று விசாரணை.

TATA-சங்கத்தின் சார்பாக CPS திட்டத்தில் பணியில் சேர்ந்து பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கலுக்கு பழைய ஓய்வுதிய திட்டப்படி அனைத்து பண பலன்களும் வழங்க வேண்டும்.மத்திய அரசின் நிதித்துறை மற்றும் PFRDA அனுமதி பெறாமல் நடைமுறை படுத்தப்படும் CPS திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஏப்., 4ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.ஐந்து மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என, தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.

மூடுவிழாவுக்கு தயாராகும் பி.எட்., கல்லூரிகள்:மாணவர் சேர்க்கை சரிவால் தடாலடி முடிவு.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்த முடியாத பல பி.எட்., கல்லுாரிகள் நடப்பு கல்வியாண்டுடன் மூடுவிழா நடத்தவும் தயாராகி வருகின்றன.தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 726 பி.எட்., கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பி.எப்., புதிய விதிகள் மே 1ல் அமல்

பி.எப்., பணம் திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. புதிய விதிகளின்படி பி.எப்., திரும்பப் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில் பணியாளர்கள் தங்களது 54வது வயதில் பி.எப்., பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும்.

முதுநிலை பல்மருத்துவ பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை பல்மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு ஏப்.4-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதுநிலை மருத்துவ படிப்பு:கலந்தாய்வு நாளை துவக்கம்.

தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., -எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு, மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,203 இடங்கள் உள்ளன. இதற்கான தகுதித்தேர்வு முடிந்து, 7,580 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள, அரசு பல்நோக்கு மருத்துவமனை யில், நாளை துவங்குகிறது. 'வரும், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியாக வாய்ப்பு ?

சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுவதால், தமிழகம் மற்றும் புதுச் சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-ல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது.