Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 5 April 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"சாத்துக்குடி பழத்தின் நன்மைகள்""

மருந்தாக மாறும் சாத்துக்குடி யாரெல்லாம் சாப்பிடலாம் - ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

நன்கு பசியைத் தூண்ட

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

முதியோர்களுக்கு

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் தவறான கேள்வி:மாணவ,மாணவிகள் குழப்பம்

10–ம் வகுப்பு பொது கணிதத் தேர்வில் தவறான கேள்வி கேட்கப் பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்படைந்தனர்.
10–ம் வகுப்புக்கான அரசு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ் முதல் தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள், கணிதம் ஆகியவை நடந்து முடிந்துள்ளன.

மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும், என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

தினம் ஒரு புத்தகம்"அறிவியல் அறிஞர்"


ஜூன் 1ல் புத்தக கண்காட்சி துவக்கம்

'சென்னை தீவுத்திடலில், வரும் ஜூன், 1ம் தேதியில் இருந்து, 13ம் தேதி வரை, 39வது புத்தக கண்காட்சி நடக்க உள்ளது' என, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்

.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான தபால் வாக்கு படிவம்-12 விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

10 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்:மத்திய அரசு வெளியீடு.

சிறந்த 10 அரசு மற்றும் தனியார் பல்கலை.கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதில், பெங்களூரைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ்.

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் புதிய கல்லூரிகள், பொறியியல் படிப்பில் உள்ள இடங்கள் பற்றிய விவரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உட்பட 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம்; இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகம்

.இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும்.மகாராஷ்டிராவை சேர்ந்த டி.சி.பி. வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய வசதியின் மூலம் பணம் எடுக்க ஆதார் அட்டையில் உள்ள 12 எண்களை ஏ.டி.எம். இயந்திரத்தில் டைப் செய்தால் போதும். பிறகு,நமது கைரேகையை அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனரில் பதிவு செய்தால் பணப் பரிமாற்றம் செய்ய நமக்கு அனுமதிஅளிக்கும்.

அரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும் !!!

லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் இரண்டு ஆண்டு காலத்தில் குவித்த சொத்து விவரங்கள் அனைத்தையும் ஏப். 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய அரசில் 50லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட விதிமுறை கீழ் வர உள்ளனர்.

மே 9-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு?

தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-இல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-இல் தொடங்கி ஏப்ரல் 1-இல் முடிவடைந்தது.

தேர்தலை சுமுகமாக நடத்த நவீன மொபைல் 'ஆப்'கள்

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை, சுமுகமாகவும், எளிதாகவும் நடத்த உதவும், 'ஆப்'களை, பீஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ளது.பாட்னாவைச் சேர்ந்த, எஸ்.இ.ஆர்.பி.எல்., என்ற தனியார் நிறுவனம், மொபைல் போன்களில் பயன்படுத்தக்கூடிய வகையில், 'சமாதான், சுவிதா, சுகம்' மற்றும் பி.எம்.எப்., ஆகிய நான்கு, 'ஆப்'களை உருவாக்கி உள்ளது.

ந‌கர, கிராமப் பள்ளிகளில் மாணவர்கள் பரி‌மாற்றம்: மத்திய அரசு திட்டம்.

நகர ‌மற்றும் ‌கிராமப்புற பள்ளிகளுக்குள் மாணவர்களைபரிமாறிக்கொள்ளும் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.கல்வித் தரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 மதிப்பெண் சிக்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று, கணிதத் தேர்வு நடந்தது; வினாத்தாள் எளிதாக இருந்தது. ஆனால், வினாத்தாளில் பல்வேறு பிழைகளும், பாடத்திட்டத்துக்கு வெளியில் உள்ள கேள்விகளும் இடம்பிடித்தன. இந்த வகையில், மொத்தம், 22 மதிப்பெண்களுக்கு, மாணவர்கள் பதிலளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

Tamilnadu Open University B.Ed-2016-II Counselling English Forms

அப்துல் கலாமுக்கு நிரந்தர நினைவு சின்னம்: டெல்லி மந்திரி தகவல்

ராமேசுவரத்தில் இருந்து கலாமின் பொருட்களை எடுத்து வந்து டெல்லியில் அவருக்கு நினைவு சின்னம் அமைக்க உள்ளதாக டெல்லி கலாசார மந்திரி கபில் மிஸ்ரா தெரிவித்தார்.

டெல்லி - ஆக்ரா இடையே நாளை முதல் இந்தியாவின் அதிவேக ரெயில் சேவை

இந்திய ரெயில் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய நிகழ்வாக நாட்டிலேயே அதிக வேகத்தில் செல்லும் "கதிமான்' ரெயில் சேவை நாளை முதல் தொடங்கப்படுகிறது.

இண்டர்நெட் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் இலவசமாக தூர்தர்ஷன் பார்க்கும் வசதி அறிமுகம்

இண்டர்நெட் இல்லாமல் இலவசமாக டிவி சேனல்களை கண்டுகளிக்க புதிய சேவையை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்துகிறது
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இலவசமாக டிவி சேனல்களை கண்டுகளிக்க புதிய சேவையை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்துகிறது.