Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 6 April 2016

டிப்ளமோ முடித்தவர்களுக்கு இளநிலை பொறியாளர் பணி

உத்தரப் பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior engineer

காலியிடங்கள்: 298

தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயது வரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.185, எஸ்டி, எஸ்சி பிரிவினர் ரூ.95, மாற்றுத்திறனாளிகள் ரூ.25ம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://upsssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://upsssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

இந்திய துப்பாக்கித் தொழிற்சாலையில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய துப்பாக்கித் தொழிற்சாலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பணி: Cook

காலியிடங்கள்: 03

தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி:  Durwan Male

காலியிடங்கள்: 01

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி:  Fitter boiler

காலியிடங்கள்: 02

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.propex.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.propex.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

வருவாய்த்துறையில் 1540 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜார்க்கண்ட் மாநில அரசின் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 1540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Revenue staff

காலியிடங்கள்: 557

தகுதி: +2 தேர்ச்சியுடன், தட்டச்சு திறன் மற்றும் அடிப்படை கணினி அறிவும் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

பணி:  Lower division clerk

காலியிடங்கள்: 983

தகுதி: +2 தேர்ச்சியுடன் தட்டச்சு திறன் மற்றும் அடிப்படை கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.460.

விண்ணப்பிக்கும் முறை: www.jssc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jssc.in  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும்; ரிசர்வ் வங்கி

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும்கூறியுள்ளது. அதே நேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.2016-17 நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜிடிபி அதிகரிக்க வாய்ப்புஇதன் காரணமாக நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் பிரதிபலிப்பு அடுத்த 24 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக ரகுராம் ராஜன் கூறினார். மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பதால், 1லட்சம் கோடி அளவிற்கு பணபுழக்கம் ஏற்படும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் விலைவாசி உயரும்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "வெய்யில் கால உணவுகள்"

உடலுக்குக் குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத் தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலிலுள்ள நீர் நன்கு பிரிய உதவுகிறது.

தினம் ஒரு புத்தகம்"முல்லை பாட்டு "


தேசிய அளவிலான சமுதாய செயல்திட்ட போட்டியில் திருவாரூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு: அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் வழங்கியது


அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற திருவாரூர் மாவட்டம்காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ‘பிரிஅமெரிக்கா” நிறுவன அம்பாசிடர் ராகுல் போஸ். (வலது ஓரம்)

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள பல்வேறு வேலைவாய்ப்பு

கடைசி தேதி 25.4.2016
RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) AND JUNIOR AGRICULTURAL ASSOCIATES IN CLERICAL CADRE IN STATE BANK OF INDIA  2016 – Apply Online Now!

குளூக்கோஸ் பாக்கெட், குடிநீர் பாட்டில் ஓட்டுக்கு இலவசம்! தேர்தலன்று ஓட்டுச்சாவடிகளில் வினியோகம்

ஓட்டுப்பதிவன்று வெயிலில்வரிசையில் காத்து நிற்கும்வாக்காளர்கள், சுருண்டு விழாமல் இருக்க, குடிநீர் மற்றும் குளூக்கோஸ் பாக்கெட்டுகளை இலவசமாக வினியோகம் செய்ய, கோவை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நுாறு சதவீத ஓட்டுப்பதிவு எனும் இலக்கை எட்ட, நிர்வாகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

மத்திய அரசில் மகப்பேறு விடுப்பையும்,குழந்தை பராமரிப்பு விடுப்பை சேர்த்து துய்க்கலாமா?

Proposals on Child Care Leave (CCL) and Maternity Leave – Dopt OM on 1.4.2016

No. 13018/1/2014-Estt(L)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel & Training

Old JNU Campus, New Delhi 110 067
Dated: 01.04.2016

OFFICE MEMORANDUM

வண்ணங்களின் தமிழ்ப் பெயர்

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால், இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ்வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

150 வண்ணங்களின் பெயர் தமிழில் :

ஜூலை 10-இல் நெட்- தேர்வு: ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் நடத்தப்படும் "நெட்' தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வருகிற 12-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு ஒரே நாளில் இரு தேர்வு!

ஓசூர் கல்வி மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு, ஒரே நாளில், இரு தேர்வுகள் நடந்ததால், மாணவ, மாணவியர் கடும் அவதியடைந்தனர். இதனால், பெற்றோர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தமிழகத்தில் கடந்த, 2006ம் ஆண்டு ஜூன் மாதம், 12ம் தேதி அமல்படுத்தப்பட்ட தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், 2006ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு சேர்ந்த, தெலுங்கு, கன்னட, உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதுதான். கடந்த 4 ஆண்டுகளாக அறிவியல் தேர்வில்தான் அதிகமான மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்களையும், அதிகமானோர் தேர்ச்சியும் பெற்றுவருவதே இதற்கு சான்று.அறிவியல் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு (25 மதிப்பெண்கள்) கருத்தியல் தேர்வு (75 மதிப்பெண்கள்) என நடத்தப்படுகிறது.

உதவித்தொகைக்கு உதவும் வலைத்தளங்கள்.

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

குரூப்- 2 ஏ பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு: ஏப்.12, 13-ம் தேதிகளில் நடக்கிறது.

நேர்காணல் அல்லாத உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இதுவரை 3 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

ஏப்.15-க்கு மேல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத் தும் பணியை ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேல் தொடங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 லட் சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவி கள் தேர்வில் கலந்து கொண்டுள் ளனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அறிவியல் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடை பெறுகிறது.

ஆசிரியர் பொன்மொழிகள் - ஆசிரியர் என்பதில் பெருமை கொள்வோம்.

1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக்கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்ஸாண்டர்

2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்;போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே

3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள்.- ஷேக்ஸ்பியர்

பெற்றோர்களிடம்சொல்லி 100 சதவிகித வாக்களிக்க செய்யுங்கள்வட்டாட்சியர் பேச்சு

தேவகோட்டை-தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் 100  சதவிகித வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு
ரங்கோலி கோலப் போட்டி நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை  பள்ளிதலைமை
ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. வருகிற 12-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

ஸ்மார்ட் போனில் 'டிவி' நிகழ்ச்சிகள்

ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள், தங்கள் மொபைல் போனில், 'டிவி' நிகழ்ச்சிகளை இனி, காண முடியும்.நான்கு மெட்ரோ நகரங்கள் உட்பட,16 நகரங்களில், துார்தர்ஷனின், 'டிஜிட்டல் டெரஸ்டிரியல் டெலிவிஷன்' சேவை, சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

பொது பிரிவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில், 360 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலைமருத்துவப் படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், நேற்று துவங்கியது. அழைக்கப்பட்ட, 575 பேரில், 453 பேர் பங்கேற்றனர்.

கால்நடை பல்கலைதேசிய அளவில் 36வது 'ரேங்க்'

மத்திய அரசு வெளியிட்டுள்ள, உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், 36வது இடத்தை பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அங்கமான தேசிய தர வரிசை அமைப்பு, இந்தியாவில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்.

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியது. வீடு, வீடாக சென்று, ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல், 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது.

Annamalai University Distance Education Examinations Scribe Request/Permission form


வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை.

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135பி பிரிவின் அடிப்படையில், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி-சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.

அரசுத் தொடக்கப் பள்ளிக்கு :கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

ரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த கார்வழி அரசு தொடக்கப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்

உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியம் என்றார் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.பாஸ்கரன்.
தஞ்சாவூர் பாரத் அறிவியல், நிர்வாகவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் அவர் பேசியது:

மத்திய கலாசார, பண்பாட்டுக் கல்வித்துறை சார்பில் :ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் தொடக்கம்

த்திய கலாசார மற்றும் பண்பாட்டுக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் புதுக்கோட்டை வட்டார வள மையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. சாந்தி தலைமை வகித்து முகாமைத் தொடக்கி வைத்துப் பேசுகையில்,

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு:170 பேர் பங்கேற்பு

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக திறனாய்வுத் தேர்வு நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் மாவட்டம் முழுவதும் இருந்து 170 பேர் கலந்து கொண்டனர்.