Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 9 April 2016

அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்று திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற கல்விக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தல் களத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கான கல்விக் கோரிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான வே. வசந்திதேவி பேசியதாவது:

நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகளும், வசதி படைத்தவர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிக்கும் நிலை ஏற்பட வேண்டும். வசதி படைத்த குடும்பத்து குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கும்போது, அந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர் பணியும் மேம்படும்.

இன்றைக்கு இருக்கும் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் 80 சதவீத தனியார் பள்ளிகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். தகுதியான ஆசிரியர்கள் இல்லாதது, கட்டமைப்பு வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால் தற்போது 700-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுவதற்கு தகுதியற்றதாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை மூடிவிட்டு அங்கு படிக்கும் குழந்தைகளை வேறு அரசுப் பள்ளியிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலோ சேர்க்க வேண்டும்.

இலவச கல்வி

அனைவருக்கும் இலவசமாக அரசே கல்வி வழங்க முடியுமா என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். 1980-ம் ஆண்டு வரை அனைவரும் பொதுப் பள்ளியில் கட்டணமில்லா கல்வியைத்தான் பெற்றார்கள். உலகில் உள்ள பல நாடுகளிலும் கட்டணம் இல்லாமல்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. எனவே அனைவருக்கும் கட்டணமில்லாமல் கல்வி வழங்க அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும் என்றார் அவர்.

கல்விக் கோரிக்கைகள்

இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள கல்வி தொடர்பான கோரிக்கைகள் வருமாறு:

கல்வியில் வணிகமயத்தை ஒழிக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி வழங்க பொதுப்பள்ளி முறையை உருவாக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் வகையிலான கல்விக்குப் பதிலாக, பிற மாநிலங்களில் உள்ளதுபோல் 11, 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். முழுமையாக தாய்மொழி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியுள்ள வசதிகளை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் ஏற்று தேர்தல் அறிக்கையில் வெளியிடவேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர்கள் எஸ்.முருகேசன், எம். மணிமேகலை, வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செ.மரிய சூசை மற்றும் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

அரசு அலுவலகங்களில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இல்லை; இந்த ஆண்டுக்குள் அனைத்து அரசு சேவைகளும் ஆன்லைன் மயமாகிறது

இந்த ஆண்டுக்குள் அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் கொண்டு வர மகாராஷ்டிர அரசு வேகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை பொதுமக்களுக்கு அம்மாநில அரசினால் வழங்கப்பட்டு வரும் 150-க்கும் மேற்பட்ட சேவைகள் ஆன்லைன் சேவையாக மாற்றப்பட்டுவிட்டன. வரும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 250-ஆக அதிகரிக்கப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து அரசு சேவைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதற்காக விரைவில் பிரத்யேகமாக மொபைல் அப்ளிகேஷன் மற்றும் பணம் செலுத்துவதற்கு டிஜிட்டல் பேமண்ட் கேட்வே ஒன்று உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்காக, கிளவுட் டேட்டா சென்டர் ஒன்றை எக்ஸ்பிரண்ட் சப்போர்ட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.200 கோடி செலவில் துவங்கியுள்ளது மகாராஷ்டிர அரசு.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருது வழங்கும் விழா

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்அனைவருக்கும் விருது வழங்கும் விழாநடைபெற்றது.

தினம் ஒரு புத்தகம்'உலக கணித மேதைகள் "


அகவிலைப்படி ஜனவரி 1 முதல் வழங்க உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப் படை சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "இதய நோயை கட்டுப்படுத்தும் பாதாம்"

பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை.
பாதாம்
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

வாட்ஸ்அப்பில் இனி தகவல்களை திருட முடியாது: புதிய வசதி அறிமுகம்.

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப் படத்தை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துக் பார்க்கவோ முடியாத வகையில் மறையாக்கம் (என்க்ரிப்ஷன்) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு: சிக்கல் தந்த வேதியியல்

பிளஸ் 2 பொதுத் தேர்வை தொடர்ந்து, 10ம் வகுப்பு அறிவியல் தேர்விலும், வேதியியல் பாட கேள்விகள், மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தின. 'ஆல்கஹால்' குறித்த கேள்வி, மாணவர்களை குஷிப்படுத்தியது.சமச்சீர்கல்வி அமலான பின், 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு புகுத்தப்பட்டது. 

தேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, 24ல் துவங்குகிறது; மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 11 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.ஓட்டுப்பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர்கள் என, நான்கு பேர், பூத் சிலிப் வழங்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந் திரங்களை கையாள்தல், படிவம் பூர்த்தி செய்தல், ஓட்டுப்பதிவு துவங்கும் முன், முடிந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். 

தொடக்கக் கல்வி - SSA HEAD - 1581 பட்டதாரி மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்களின் ஒருவருட தொடர் நீட்டிப்பு ஆணை- முதன்மை செயலாளர் ஆணை

அறிவிப்போடு நின்றுபோன மதுரை அறிவியல் மையம்: வகுப்பறைக்குள் முடங்கிய பள்ளி குழந்தைகளின் அறிவியல் ஆர்வம்.

மதுரையில் கடந்த மூன்று ஆண்டுக ளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாவட்ட அறிவியல் மையம், வெறும் அறிவிப்போடு நின்றுபோ னதால் பள்ளி மாணவ, மாணவி யரின் அறிவியல் ஆர்வம் வகுப்பறைகளுக்குள்ளேயே முடங்கியுள்ளது.புரியாதவர்களுக்கு அறிவியல் ஒரு புதிர். புரிந்தவர்களுக்கு அது எளிமையானது. அதனால், கடந்த காலத்தில் ஆசிரியர்கள் புத்தகத்தில் இருக்கும் அறிவியல் பாடங்களை மாணவ, மாணவிகளுக்கு புரியும் வண்ணமும், அறிவை வளர்த்துக் கொள்ளவும், அறிவியல் மையங்களுக்கு அழைத்துச் சென்று அறிவியல் உபகரணங்களை நேரில் காட்டி எளிய நடையில் விளக்கி சொல்வார்கள்.

ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்: அ.இ.ஆ.கூ., தலைவர் தகவல்.

ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை ஜூனிற்குள் அமல்படுத்தாவிட்டால் அகில இந்திய அளவில் ஆசிரியர்களின் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்,'' என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தலைவர் ராம்பால் சிங் தெரிவித்தார்.மதுரையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழாவில், புதிய அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:

பங்களிப்பு ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வு திட்டத்தின் கீழ் சந்தா செலுத்துவோர் - பணி ஓய்வு/ராஜினாமா/இறப்பு/பணிநீக்கம் பெற்றவர்கள் சார்பாக தொகை கணக்கு முடித்து வழங்குதல் சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்

மகப்பேறு விடுப்பு 180 நாட்களாக உயர்த்தப்பட்ட அரசாணை !

தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டிய வழிமுறைகள்!!!

பள்ளிக்கூட பஸ்கள் தொடர்பான புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.

பள்ளிக்கூட பஸ்கள் தொடர்பான அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.