Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 14 April 2016

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பை துவங்கியது எல்.ஜி. நிறுவனம் 10 லட்சம் போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பை துவங்கியது எல்.ஜி. நிறுவனம் 10 லட்சம் போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி:

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகமாகும். மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மைக்ரோமேக்ஸ், லாவா, ஜியோனி, ஜியோமி, ஒன் பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தியாவிலேயே அசெம்பிளிங் மற்றும் மொபைல் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது தென் கொரிய நிறுவனமான எல்.ஜி.யும் இணைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இன்று அறிமுகப்படுத்தி வைத்தார் மத்திய டெலிகாம் துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத். நோய்டாவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சுமார் 10 லட்சம் ஸ்மார்ட்போன்களை விரைவில் தயாரிக்க உள்ளதாக இந்நிறுவனத்தின் இந்திய இயக்குனர் கிம் கி வான் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, 'கே' வரிசை ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் தயாரிக்க எல்..ஜி. முடிவு செய்துள்ளது.

ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

புது தில்லி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

.            தற்போதைய நிலையில் வெளிநாட்டினரும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் முகவர்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் மூலமே தங்களுக்கான ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

               புதிய திட்டத்தின்படி வெளிநாட்டினர், தாங்கள் வசிக்கும் நாட்டிலிருந்தே ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். இதற்கான மாற்றங்களை செய்வதற்கு ஐஆர்சிடிசி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

            வெளிநாட்டினர் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் நேரடியாக பயணச்சீட்டை முன்பதிவு செய்வதற்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அது அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

          இந்தியாவில் பிரபலமாக உள்ள 'மகாராஜா', 'பேலஸ் ஆன் வீல்' உள்ளிட்ட ரயில்களில் ஏராளமான வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும், முகவர்கள் மூலமே தங்களது பயணச்சீட்டை முன்பதிவு செய்கின்றனர்.

      இந்திய ரயில்வேவின் அங்கமான ஐஆர்சிடிசி நிறுவனம், ரயில் பயணங்களுக்கான பயணச்சீட்டுகளை பதிவு செய்யும் இணையதளத்தை இயக்கி வருகிறது. அந்த இணையதளம் நிமிஷத்துக்கு 15,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டுநலப்பணித்திட்ட நிதி?எங்கே போகிறது ஒதுக்கீடு உண்டா இல்லையா?

நாட்டு நலப்பணி திட்டத்துக்கான செயல்பாடுகளுக்கு, மூன்றாண்டுகளாக நிதிஅளிக்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

        இதனால், விழிப்புணர்வு பணிகளுக்கு நிதியில்லாமல், திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

        தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், நாட்டுநலப்பணித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த தலா, 25 மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்துதல், மரக்கன்று நடுதல், சமூக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

            பள்ளி அருகில் இருக்கும் கிராமத்தை, மூன்றாண்டுகள் வரை தத்தெடுத்து, சுகாதார பணிகளில் ஈடுபட வேண்டும். காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையின் போது இதற்கென, ஏழு நாட்கள் ஒதுக்கப்படும்.இந்நாட்களில் பிளஸ் 1 மாணவர்கள், தத்தெடுத்த கிராமத்தில் தங்கி, துாய்மை பணிகளில் ஈடுபடுவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, மக்ஏற்படுத்துவர்.

இப்பணிகளுக்காக ஒவ்வொரு மாணவருக்கும் தலா, 220 ரூபாயும், சிறப்பு முகாம் செலவுக்காக தலா, 450 ரூபாயும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் ஒதுக்குகிறது. கோவை மாவட்டத்தில், 71 மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே, நாட்டு நலப்பணி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு, 11,250 ரூபாய் ஒதுக்க வேண்டும். மூன்றாண்டுகளாக, சொற்ப தொகையே பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டது. இதனால் சொந்த பணத்தை செலவிட்டு விட்டு தவிப்பதாக, பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

                 அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நாட்டுநலப்பணி திட்டத்துக்கு, தற்போது நிதி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் நாங்கள் செலவிட்ட தொகை குறித்து, எந்த தகவலும் இல்லை' என்றனர்.

                 நாட்டுநலப்பணி திட்ட பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'மூன்றாண்டுகளாக குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது. கடந்தாண்டு முற்றிலும் நிதி வரவில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். நடப்பாண்டுக்கான நிதி வந்துள்ளது. விரைவில், பள்ளிகளுக்கு பிரித்து அளிக்கப்படும்' என்றார்.

தினம் ஒரு புத்தகம் "நம் கிராமத்து சமையல்"


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!"

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.

பரோடா வங்கியில் 250 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் 250 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் கடன், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, திட்டமிடல், இடர் மேலாண்மை, மனிதவள மேம்பாடு, பொருளாதார நிபுணர், சட்டம், டேட்டா சயின்டிஸ்ட், மென்பொருள் சோதனை, டேட்டா பேஸ் மேலாண்மை, டேட்டா  அனலிஸ்ட் ஆகிய பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

பள்ளிகளுக்கு குறைந்தபட்ச நில அளவு தமிழக அரசு எடுத்துள்ள இறுதி முடிவு என்ன? ஐகோர்ட்டு கேள்வி

தனியார் பள்ளிகளுக்கு நிபுணர்கள் குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச நிலஅளவு தொடர்பாக அரசு எடுத்துள்ள இறுதி முடிவினை தெரிவிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சங்கச் செயலாளர் ஜோசப் சுந்தர்ராஜ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விரைவில் விற்பனைக்கு வருகிறது குறைந்த விலை 4-ஜி ஸ்மார்ட்போன்

விரைவில், ஆண்டு இறுதிக்குள் ரூ.3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் 4-ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சீனா, தைவான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 4-ஜி தொழில்நுட்பமும், 4-ஜி ஸ்மார்ட் போன்களும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

Employment News : 16 April To 22 April 2016

AIRPORTS AUTHORITY OF INDIA
Name Of Post : Jr. Executive (Engineering electrician, Information Technology) etc
No.of Vacancies : 220Last Date :24 .05.2016 

ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இரண்டும் சமம்!

மத்திய அரசால், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி.,) அதிக முக்கியத்துவம் பெற்று வந்தன!ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு, சமீபகாலமாக ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவின. தற்போது, ஐ.ஐ.டி.,களுக்கு இணையானதாக என்.ஐ.டி.,களை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன்படி, ஐ.ஐ.டி.,களை விடவும், அதிக நிதியை என்.ஐ.டி.,களுக்கு மத்திய அரசு வழங்கிவருகிறது!மேலும், இதுவரை என்.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., ,மெயின் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும்; ஆனால், ஐ.ஐ.டி.,களில் சேர ஜே.இ.இ., மெயின் எழுதியவர்கள் மட்டுமே எழுத தகுதி பெற்ற ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் எழுத வேண்டும். ஆனால், தற்போது இந்த இரண்டு தேர்வுகளுக்கும் இணையாக மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாகதிட்டமிட்டு வருகிறது.ஏனெனில், புதிய ஐ.ஐ.டி.,களில் சேர்க்கை பெறுவதை விட, வேலை வாய்ப்புகள் மிகப்பிரகாசமாக உள்ள பழமையான, புகழ்பெற்ற என்.ஐ.டி.,களில் சேரவே பல மாணவர்கள் விரும்புகின்றனர். மேலும், பழமையான என்.ஐ.டி.,கள் இன்றும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் புதிய ஐ.ஐ.டி.,களை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கின்றன!தனிச்சிறப்புவழக்கமாக ஆசிரியர் பாடம் நடத்துவதன் மூலம் கற்பது என்பது ஐ.ஐ.டி.,கள், என்.ஐ.டி.,கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் செய்யக்கூடியது தான். ஆனால், ஆசியர்களின் துணையின்றி மாணவர்களே ஒரு நிகழ்ச்சியை நடத்தி, அதன்மூலம் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது புதிது. அதைத்தான் திருச்சி என்.ஐ.டி., மாணவர்கள் செய்கின்றனர்!அம்மாணவர்களே முழுக்க முழுக்க பங்கேற்று நடத்தும், ‘பிரக்யான்’ எனும் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை திருவிழாவின் தரம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்துகொண்டே செல்கிறது.

 நிதி, மார்க்கெட்டிங், ஈவன்ட், கருத்தரங்கு என பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர்கள் கற்றுத்தராமல், மாணவர்களே பல்வேறு குழுக்களாக செயல்பட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் சுயமாககற்றுக்கொண்டு நடத்துவதால், அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் வாழ்நாள் முழுவதும் உதவும்.ஒவ்வொரு ஆண்டும், புதிய தலைப்புகளின்கீழ், ஆறு மாதம் முன்பிருந்தே நிகழ்ச்சிக்கான பணியைத் துவங்கிவிடுகின்றனர். ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, தொழில்முனைவு, புத்தாக்கம், புதிய கண்டுபிடிப்பு, ஆன்லைன் போட்டிகள், சர்வதேச தொடர்புகள் என பலவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களே நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு ஐ.எஸ்.ஒ., அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடத்திட்ட கல்வியைக் கடந்து இதுபோன்ற திறன்கள்தான், இன்றைய மாணவர்களுக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும்!

-பேராசிரியர் எஸ்.சுந்தர்ராஜன், இயக்குநர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருச்சி.

பொதுத் தேர்வுகளுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.

அரசுப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.வினாத்தாள் குழப்பம்:பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி கடந்த 1-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 11-ஆம் தேதியும் நிறைவுபெற்றன. 

பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

தேவையற்ற புத்தகங்களை வாங்க நெருக்கடி? தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை தவிர, மற்ற புத்தகத்தை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.அதில், கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெறாத இளநிலை உதவியாளர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த பயிற்சி முகாம், மார்ச், 30ம் தேதி துவங்கியது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கெடு.

மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளை, ஒரு மாதத்திற்குள் செய்து தர வேண்டும்' என, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது.பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர, 15 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு சட்டம் இயற்றியது.

விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்.

சிவகங்கை:புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கல்விச்சிறகுகளின் நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

6% கூடுதல் அகவிலைப்படி தகவல்

தமிழக அரசு பணியாளர்களுக்கு 01.01.2016 முதல் 6% கூடுதல் அகவிலைப்படி வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.. அரசாணை கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அரசாணை வெகுவிரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Manager
காலியிடங்கள்: 05

பணி: Assistant Manager
காலியிடங்கள்: 16

பணி: Assistant Librarian
காலியிடங்கள்: 06

தகுதி: Arts,Commerce, Science, Economics, Commerce, Library Science, Library and Information Science,  Hindi Translation, English with Hindi , Sanskrit போன்ற துறைகளில் முதுகலை பட்டம்,பொறியியல் துறையில் Civil, Electrical,  Electrical and Electronics  துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய. https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3156 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
1. திருவாரூர்-மு.கருணாநிதி.
2. கொளத்தூர்-மு.க.ஸ்டாலின்.
3. சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்.
4. துறைமுகம்-பி.கே.சேகர் பாபு.
5. வில்லிவாக்கம்-ப.ரெங்கநாதன்.
6. ஆயிரம்விளக்கு-ஹசன் முகமது ஜின்னா
7. தியாகராயநகர்- கு.க.செல்வம்.
8. அண்ணாநகர்- மோகன்.
9. விருகம்பாக்கம்- கே.கே.நகர் தனசேகரன்.
10. சேப்பாக்கம்- ஜெ.அன்பழகன்.

11. எழும்பூர்-தமிழன் பிரசன்னா.
12. திரு.வி.க.நகர்- தாயகம் கவி.
13. திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி.
14. மாதவரம்-சுதர்சனம்.
15. ஆவடி-நாசர்.
16. பூந்தமல்லி-வக்கீல் பரந்தாமன்.
17. பல்லாவரம்- தா.மோ. அன்பரசன்.
18. தாம்பரம்-எஸ்.ஆர். ராஜா.
19. ஆலந்தூர்-ஆர்.எஸ். பாரதி.
20. செங்கல்பட்டு- ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன்.
21. திருப்போரூர்- விசுவநாதன்.
22. வேளச்சேரி- நடிகர் வாகை சந்திரசேகர்.
23. சோழிங்கநல்லூர்- பாலவாக்கம்.
24. ஆர்.கே.நகர்- விஸ்வநாதன் (முடிவாகவில்லை.)
25. செய்யூர்-ஜுலியஸ் சீசர்.
26. மதுராந்தகம்- சிவக் குமார்.
27. காஞ்சீபுரம்-சன் பிராண்ட் ஆறுமுகம்.
28. அரக்கோணம்- பவானி வடிவேல் அல்லது ராஜ்குமார்.
29. கும்மிடிப்பூண்டி- சி.எச்.சேகர்.
30. பொன்னேரி- சுந்தரம்.
31. சோளிங்கர்- அசோகன் அல்லது மாணிக்கம்.
32. காட்பாடி- துரை முருகன்.
33. ராணிப்பேட்டை- காந்தி.
34. வேலூர்-கார்த்தி.
35. அணைக்கட்டு-பாபு.
36. கீழ்வைத்தியணான் குப்பம்-சீதாராமன் அல்லது கோபி.
37. குடியாத்தம்-சந்திரன் அல்லது மாலதி.
38. ஜோலார்பேட்டை- கவிதா தண்டபாணி.
39. திருப்பத்தூர்- நல்லதம்பி.
40. ஊத்தங்கரை- ராஜேந்திரன்.
41. பர்கூர்-சுகவனம்.
42. கிருஷ்ணகிரி- செங்குட்டுவன்.
43. வேப்பனஹல்லி- நரசிம்மன்.
44. தளி-பிரகாஷ்.
45. பாலக்காடு- சுப்பிரமணி.
46. பென்னாகரம்- இன்பசேகரன்.
47. தர்மபுரி-மனோகரன்.
48. பாப்பிரெட்டிபட்டி- சித்தார்த்தன்.
49. அரூர்-கிருஷ்ணன்.
50. செங்கம்-கிரி.
51. திருவண்ணாமலை- எ.வ.வேலு.
52. கீழ்பென்னாத்தூர்- பிச்சாண்டி.
53. போரூர்-சேகர்.
54. ஆரணி-சிவானந்தம்.
55. வந்தவாசி-கமலக் கண்ணன்.
56. செஞ்சி-மஸ்தான்.
57. மைலம்-டாக்டர் மாசிலாமணி.
58. திண்டிவனம்-ரவிக்குமார்.
59. வானூர்-புஷ்பராஜ்.
60. விக்கிரவாண்டி-சிவா அல்லது ராதாமணி.
61. திருக்கோவிலூர்- பொன்முடி.
62. ரிஷிவந்தியம்- வசந்தம் கார்த்தி அல்லது ஆதி சங்கர்.
63. சங்கராபுரம்- உதயசூரியன்.
64. கள்ளக்குறிச்சி-காம ராஜ்.
65. கெங்கவல்லி-சின்ன துரை.
66. ஏற்காடு-தமிழ்ச் செல்வன்.
67. ஓமலூர்-அம்மாச்சி.
68. மேட்டூர்-எஸ்.ஆர். பார்த்திபன்.
69. எடப்பாடி-உமாராணி.
70. சேலம் மேற்கு- பன்னீர்
71. சேலம் வடக்கு- பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்.
72. சேலம் தெற்கு- குணசேகர்.
73. வீரபாண்டி- எஸ்.ராஜா.
74.ராசிபுரம்- வி.பி.துரை சாமி.
75. சேந்தமங்கலம்- பொன்னுசாமி அல்லது காளியப்பன்.
76. பரமத்திவேலூர்- மூர்த்தி.
77. திருச்செங்கோடு- இளங்கோ.
78. குமாரபாளையம்- பெப்பேடு செல்வராஜ்.
79. ஈரோடு கிழக்கு- சந்திரகுமார்.
80. ஈரோடு மேற்கு- முத்துச்சாமி.
81. மொடக்குறிச்சி- சச்சிதானந்தம்.
82. பெருந்துறை- என்.கே.பி.ராஜா.
83. நாகர்கோவில்- சுரேஷ்ராஜன்.
84. பாவனி-நாகராஜன்.
85. அந்தியூர்-கே.பி. வெங்கடாசலம்.
86. பவானிசாகர்- அந்தியூர் செல்வராஜ்.
87. கூடலூர்- திராவிட மணி.
88. குன்னூர்-ராமச் சந்திரன்.
89. மேட்டுப்பாளையம்- சுரேந்தர்.
90. அவினாசி-முருகன்.
91.  திருப்பூர் வடக்கு- செல்வராஜ்.
92. திருப்பூர் தெற்கு- வெள்ளக்கோவில் சாமிநாதன்.
93. பல்லடம்-திருமூர்த்தி அல்லது ராமமூர்த்தி.
94. கவுண்டம்பாளையம்- சுந்தரம்.
95. கோவை வடக்கு- கார்த்தி.
96. சிங்காநல்லூர்- பொங்கலூர் பழனிச்சாமி.
97. கிணத்துகடவு- குறிச்சி பிரபாகரன்.
98. பொள்ளாச்சி- தென்றல் செல்வராஜ்.
99. வால்பாறை- கோழிக் கடை கணேசன் அல்லது கபிலன்.
100. உடுமலைப்பேட்டை- முத்து.
101. மடத்துக்குளம்- ஜெயராமகிருஷ்ணன்.
102. பழனி-செந்தில் குமார்.
103. ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி.
104. ஆத்தூர்-ஐ.பெரிய சாமி.
105. நிலக்கோட்டை- கரிகால் பாண்டியன்.
106. நத்தம்-ஆண்டி அம்பலம்.
107. திண்டுக்கல்-பஷீர்.
108. அரவக்குறிச்சி- கே.சி.பழனிச்சாமி.
109. குளித்தலை- ஆர்.மாணிக்கம் அல்லது சிவராமன்.
110. ஸ்ரீரங்கம்-ஆனந்த் அல்லது பழனியாண்டி.
111. திருச்சி மேற்கு- கே.என்.நேரு.
112. திருவெறும்பூர்- அன்பில் மகேஷ்.
113. லால்குடி-சவுந்தர பாண்டியன்.
114. மண்ணச்சநல்லூர்- கணேசன்.
115. துறையூர்-பூபதி.
116. குன்னம்-ராஜேந் திரன்.
117. அரியலூர்-சிவசங்கர்.
118. திட்டக்குடி-கணேசன்.
119. விருத்தாச்சலம்- தங்க ஆனந்தன்.
120. நெய்வேலி- சபா.ராஜேந்திரன்.
121. பண்ருட்டி- வி.கே.வெங்கட்ராமன் அல்லது நந்தகோபால கிருஷ்ணன்.
122. கடலூர்- இளபுகழேந்தி
123. குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.
124. புவனகிரி- சரவணன்.
125. சிதம்பரம்- செந்தில்குமார் அல்லது மாமல்லன்.
126. சீர்காழி- பன்னீர்செல்வம்.
127. மயிலாடுதுறை- குத்தாலம் அன்பு.
128. மதுரை மேற்கு- தளபதி.
129. சங்கரன்கோவில்- துரை.
130. கீழ்வேளூர்- மதிவாணன்.
131. திருத்துறைப்பூண்டி- ஆடலரசன்.
132. மன்னார்குடி- டி.ஆர்.பி.ராஜா.
133. திருவிடைமருதூர்- கோவிசெழியன்.
134. கும்பகோணம்- சாக்கோட்டை அன்பழகன்.
135. திருவையாறு- நீலமேகம்.
136. தஞ்சாவூர்- கல்லணை செல்லக்கண்ணு.
137. ஒரத்தநாடு- ராஜ்குமார்.
138. பேராவூரணி- மகேஷ் கிருஷ்ணசாமி.
139. கந்தர்வகோட்டை- தமிழ்ராஜா.
140. விராலிமலை- பழனியப்பன்.
141. புதுக்கோட்டை- பெரியண்ணன் அரசு.
142. திருமயம்-ரகுபதி.
143. ஆலங்குடி- மெய்யநாதன் அல்லது தங்கவேல்.
144. திருப்பத்தூர்- பெரியகருப்பன்.
145. சிவகங்கை- மேப்பல்சக்தி
146. மானா மதுரை- மாரிமுத்து அல்லது தமிழரசி.
147. மேலூர்-ரகுபதி அல்லது உசேன்.
148. மதுரை கிழக்கு- மூர்த்தி.
149. சோழவந்தான்- ராஜாராம்.
150. மதுரை மத்தி- பி.டி.ஆர்.தியாகராஜன்.
151. மதுரை தெற்கு- குழந்தைவேல்.
152. திருப்பரங்குன்றம்- சீனியம்மாள்.
153. உசிலம்பட்டி- மணிமாறன்.
154. ஆண்டிப்பட்டி- மூக்கையா.
155. பெரியகுளம்- அன்பழகன்.
156. போடி நாயக்கனூர்- லட்சுமணன்.
157. கம்பம்-ராமகிருஷ் ணன்.
158. ராஜபாளையம்- தங்கப்பாண்டி.
159. பத்மநாதபுரம்- புஷ்பலீலா ஆல்பன்.
160. சாத்தூர்- சீனிவாசன்.
161. அருப்புக்கோட்டை- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன்.
162. திருச்சுழி-தங்கம் தென்னரசு.
163. விருதுநகர்- ஏ.ஆர்.சீனிவாசன்.
164. திருவாடானை- திவாகரன்.
165. கோவில்பட்டி- ராஜாராமன்.
166. விளாத்திகுளம்- ஜெயகுமார்.
167. தூத்துக்குடி- கீதா ஜீவன்.
168. திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்.
169. ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா.
170. திருநெல்வேலி- ஏ.எல்.எஸ்.லட்சுமணன்.
171. பாளையங்கோட்டை- மைதீன்கான்.
172. ராதாபுரம்-அப்பாவு.
173. கன்னியாகுமரி- ஆஸ்டின்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள்"

கறிவேம்பு இலை என்பதையே கறிவேப்பிலை அல்லது கருவேப்பிலை என நாம் குறிப்பிடுகிறோம். கறிவேப்பிலை சமையலில் மணமூட்டும் முக்கியமான இலையாகும்.

கறிவேப்பிலைக்கென்று தனியான வாசனை உண்டு. சாம்பார், குழம்பு, இரசம் என நாம் சாப்பிடும் அனைத்து உணவிலும் கறிவேப்பிலை சேர்க்கப்படுகின்றது. இதனால், உணவு மணமாக சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை இலைகளே அதிக மருத்துவப் பயன் கொண்டவை. இலேசான காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. மருந்தாகச் சாப்பிட்டுவர, பசியை அதிகமாக்கும்; உடலை வலுவாக்கும்.

கறிவேப்பிலை குடல் வாயுவை வெளியேற்றும்.சாப்பிடும் போது நமக்குக் கிடைக்கும் கறிவேப்பிலையை ஒதுக்கி விடாமல் சாப்பிடுவதன் மூலமாக அதன் முழுப்பயனும் நமக்கு கிடைக்கும்.

கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது சிறு மரம் வகையைச் சேர்ந்த‌து. கறிவேப்பிலை இலைகள், தண்டு மற்றும் கிளைகளின் நுனியில் இலைகள் கொத்தாகக் கிளைத்திருக்கும்.

கறிவேப்பிலை மணமுள்ளது. பூக்கள், வெண்மையானவை, உச்சியில் கொத்தாகக் காணப்படும்.கறிவேப்பிலை பழங்கள், கருப்பு நிறமானவை,தொகுப்பானவை.

கறிவேப்பிலை அன்றாட உணவில் இதன் முக்கியத்துவம் கருதி ஏராளமாகப் பயிர் செய்யப்படுகின்றது. தமிழ்நாடு முழுவதும், வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக விளைகின்றது.

வீடுகளில் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்கள் பெரும்பாலும் நுனிக்கிளையை ஒடிக்கப்பட்டு விடுவதன் காரணமாக புதர்ச்செடியாகவே காணப்படும். காய்கறி அங்காடிகளில் கறிவேப்பிலை இலைகள் சாதாரணமாகக் கிடைக்கின்றது.

தேவையான அளவு கறிவேப்பிலையை, நெய்யில் இளவறுப்பாக வறுத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 தேக்கரண்டி அளவு தூளை, சூடான சாதத்துடன் கலந்து, சிறிதளவு உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.

கறிவேப்பிலை இலைகளுடன், சிறிதளவு இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு, இடித்து, தூள் செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி அளவு தூளை, இரவு சாப்பிடும் போது, சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

2 கொத்து கறிவேப்பிலை இலைகளை எடுத்துக்கொண்டு, காம்பு நீக்கி, 2 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். 1 டம்ளர் ஆக சுண்டக் காய்ச்சிய பின்னர் இறக்கி, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ¼ டம்ளர் வீதம், ஒரு நாளைக்கு 4 வேளைகள் குடிக்க சளி இருமல் குணமாகும்.

குமட்டல், வாந்தி, சீதபேதி போன்றவைகளுக்கு கறிவேப்பிலை, சிறிதளவு மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வதக்கி, சிறிதளவு புளி, உப்பு சேர்த்து, அரைத்து, துவையல் செய்ய வேண்டும். இதனை சாதத்துடன் சேர்த்துக் பிசைந்து சாப்பிடலாம்.

தினம் ஒரு புத்தகம்"விழித்துக்கொள்ளுங்கள்"