Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 15 April 2016

*2016-17 ஆம் கல்வியாண்டு 1/6/16 அனைத்து பள்ளிகளும் திறப்பு - பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் . தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 1/5/16 அன்று முதல் கோடை விடுமுறை*

பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 பைசா, டீசல் லிட்டருக்கு ரூ.1.30 குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 1ரூ.30 பைசாவும் குறைக்கப் பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுத் தேர்வுகளுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் !

அரசுப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது. வினாத்தாள் குழப்பம்: பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி கடந்த 1-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி கடந்த 11-ஆம் தேதியும் நிறைவு பெற்றன. பிளஸ் 2 
தேர்வின்போது, இயற்பியல், வேதியியல் தேர்வுகளில் வினாத்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என மாணவர்களிடையே கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வேதியியலில் ஆறு மதிப்பெண், கணிதத்தில் தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும் ஆறு மதிப்பெண், இயற்பியலில் தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டும் இரண்டு மதிப்பெண், போனஸ் மதிப்பெண்களாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல பத்தாம் வகுப்புத் தேர்வில், கணிதப் பாடத்துக்கான வினாவில், எழுத்துப் பிழை காரணமாக, அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. எனினும் இவ்வாறு தொடர்ச்சியாக வினாத்தாள் தயாரிப்பின்போது குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தொடர் ஆய்வு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: பொதுவாகப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேர்ச்சி அடிப்படையில், பயிற்றுவிக்கும் முறை மாற்றப்பட வேண்டும். ஆனால் அரசே, இந்தப் போக்கை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களின் தேர்ச்சிக்காகக் குறைந்தபட்ச கையேட்டை வழங்குகிறது. இவ்வாறு வழங்குவதால், அந்தக் கேள்விதான் வரும் என்ற மாயை ஏற்படுகிறது. அதை மட்டும் படித்து, தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், மேற்கோள், அறிமுகப் பகுதிகளில் கேள்விகள் வந்தால் பதிலளிக்கத் திணறுகிறார்கள். பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்ததும், அதிலுள்ள நிறை, குறைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் போது, இதுபோன்று பிரச்னைகள் எழுவது வழக்கமாகி வருகிறது. எனவே, இந்தக் கல்வியாண்டு முதல் இணை இயக்குநர் தலைமையில், ஆசிரியர் சங்கங்கள், மாணவர்கள், பெற்றோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறும் அரசுப் பொதுத் தேர்வுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரதிநிதிகளிடம் இருந்து வினாத்தாள் மற்றும் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்துக் கருத்துக்கள் கோரப்பட வேண்டும். இந்த ஆய்வு மையம் தொடர்ச்சியாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் டி.எஸ். விநாயகம் கூறியதாவது: பிளஸ் 1 பாடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் நடத்தப்படுவதில்லை. அதனால், அந்தப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கும்போது பிளஸ் 2 மாணவர்கள் பதிலளிக்க முடியாமல் திணறுகின்றனர். 100 சதவீதம் தேர்ச்சிக்காக இரண்டாண்டு பாடம் நடத்துவது மாற வேண்டும். இதுபோன்று சமூக அரசியலில் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாமல் காக்கும் வகையில், நிபுணர்களின் ஆலோசனைகளின்படி வினாத்தாள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார்.

கான்பூர் ஐஐடி-யில் காத்திருக்கும் பணியிடங்கள்!!

கான்பூரிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) சீனியர் புராஜக்ட் அசோசியேட் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
இங்கு சீனியர் புராஜக்ட் அசோசியேட் பணியிடம் ஒன்று மட்டுமே 
காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர பி.டெக், எம்.எஸ்சி, எம்எஸ் ஏதாவது ஒரு படிப்பை படித்து முடித்திருக்கவேண்டும். மேலும் ஓராண்டு பணியாற்றிய அனுபவமும் இருக்கவேண்டும்.
ஊதியம் 18000-1800-36000/- என்ற அடிப்படையில் இருக்கும்.
இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பங்களை தபாலில் அனுப்பவேண்டும். Dr. Amitabha Bandyopadhyay, Faculty In-charge, Bio Incubator Facility, IIT Kanpur என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும். bioincubator@iitk.ac.in என்ற இமெயில் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.iitk.ac.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

மதுரை காமராஜர் பல்கலை.யில் பி.ஜி. படிப்புகளில் சேர விருப்பமா...!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (எம்கேயு) பி.ஜி. படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.எஸ்சி, எம்.ஏ., எம்.எட், எம்.பில், எம்பிஏ, எம்சிஏ , பி.டெக், எம்.டெக் படிப்புகள் 2016-ம் கல்வியாண்டில் வழங்கப்படவுள்ளன.
இதுதவிர பிபிஏ படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட துறையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எம்கேயு பல்கலைக்கழக இணையதளத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பின்னர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai-625 021 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 15 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு http://www.mkuniversity.org/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய http://mkuniversity.org/direct/# என்ற லிங்க்கைக் கிளிக் செய்யுங்கள்.

எஸ்பிஐ வங்கியின் எஸ்ஓ பணியிட முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீஸர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்ஓ தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி நடைபெற்றன. இந்த பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்களின் விவரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகளைக் காண எஸ்பிஐ வங்கியின் https://www.sbi.co.in/user.htm?action=SbiSpecialistCadreOfficers

என்ற இணையதள லிங்க்குக்குச் செல்லவேண்டும். அங்கு 'Marks secured by the candidates' என்ற பகுதியைக் கிளிக் செய்யவேண்டும். பின்னர் அங்கு தங்களது பதிவு எண், பிறந்ததேதி ஆகியவற்றைக் கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மூன்றாம்பருவ முடிவில் சமர்ப்பிக்க வேண்டியவை?

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தேர்வு/ தேர்ச்சி அனுமதி பெற
உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டியவைகள்~
1)மதிப்பெண் பதிவேடு
2)தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
3)மக்கள் தொகை சுருக்கம்
4)5+குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
5)இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை

6)பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
7)மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
8)குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
9)EERசுருக்கம்
10)பள்ளி வேலை நாட்கள் விபரம்
11)கோடைவிடுமுறை அனுமதி
12)ஆசிரியர் கோடை விடுமுறை கால முகவரி விவரம்.
13)2015-2016 ஆம் கல்வியாண்டு~ஆசிரியர் விடுப்பு விவரம்

திருவாரூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது !

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்வி, சமுதாய மாற்றத்திற்கான செயல்திட்ட போட்டியில், திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட நீடாமங்கலம் காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த சமூக மாற்றத்துக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்க நிறுவனமான பிரமேரிக்கா சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் 
போட்டிகளில், பள்ளி மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகள், செயல்திட்டங்களைப் பாராட்டி, பதக்கம்- பரிசுகள் வழங்கப்படுகின்றன. புது தில்லியில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான போட்டியில் 4970 பள்ளிகள் கலந்துகொண்டன. இறுதிச் சுற்றுக்கு கொல்கத்தாவில் உள்ள லா மார்டினியர் இன்டர்நேஷனல் பள்ளி, ராஜஸ்தானில் உள்ள சத்ய பாரதி சி.பி.எஸ்.இ. பள்ளி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியன தேர்வு பெற்றன. இதில் காளாச்சேரி பள்ளி மாணவர்கள் சி.விஷாமுகில், ஆ.லீலா, மு.திவ்யா, ச. சேதுபதி ஆகியோர் முதலிடம் பெற்று, ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம் வென்றனர். இதுகுறித்து ஆசிரியர் செந்தில் கூறுகையில், தற்கொலை எண்ணம் தவறானது என்ற விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்திய செயல்திட்டத்துக்கு மாநில அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தேசிய அளவிலான போட்டியிலும் விருது கிடைத்துள்ளது.

வழக்கமாக, இதுபோன்ற போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களும் வெற்றி பெற்றது மற்ற மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

சிபிஎஸ்இ ஜேஇஇ பிரதானத் தேர்வு: ஏப்ரல் 27-ல் வெளியாகிறது முடிவுகள்!!

சிபிஎஸ்இ நடத்தும் ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ளன.
நாட்டிலுள்ள ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்தத் தேர்வை 12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

பிரதானத் தேர்வின் முடிவுகள் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ளன.
இந்தத் தேர்வு முடிவுகளை அறிய http://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கு சென்றவுடன் 'JEE Main 2016 Results' என்ற பகுதியில் கிளிக் செய்யவேண்டும்.

பின்னர் உங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்துக்குப் பயன்படுத்தலாம்.
பிரதானத் தேர்வு கடந்த 3-ம் தேதி ஆஃப்-லைனில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது.

பொது சட்ட சேர்க்கை தேர்வுக்கு கிராக்கி: 45 ஆயிரம் மாணவர்கள் பதிவு!!

பொது சட்ட சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு (சிஎல்ஏடி) 45 ஆயிரம்மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில்இந்த ஆண்டுதான் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு அதிக அளவில் விண்ணப்பங்களைப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு நடத்தும் இந்த ஆன்-லைன் சட்ட நுழைவுத் தேர்வுக்குஆண்டுதோறும் மாணவர்கள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 9ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் 45,040 மாணவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (என்எல்யு) சட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இந்தத் தேர்வு இந்த ஆண்டு நாடு முழுவது 170 மையங்களில் மே 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு தேர்வை பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (ஆர்ஜிஎன்யூஎல்) நட்ததவுள்ளது. இதுகுறித்து ராஜீவ் காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் பரம்ஜித் ஜஸ்வால் கூறியதாவது: இந்த ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். ஆன்-லைன் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 170 மையங்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எந்த மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்ற விவரங்கள் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!

வெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர்.
77 சதவீத மாணவர்கள் இந்த மருத்துவத் தேர்வில் தோல்வியுற்று இருப்பது எம்சிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும் இந்தியாவில் டாக்டர்களாக தொழில் செய்ய வேண்டுமென்றால் எம்சிஐ நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். அவ்வாறு எம்சிஐ நடத்திய தேர்வுகளில் 77 சதவீத வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த மாணவர்கள் பெயிலாகியுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளில் நடந்தத் தேர்வு முடிவுகளாகும் இது.

இந்தத் தேர்வை எம்சிஐ, நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் (என்பிஇ) உதவியுடன் நடத்துகிறது.
தற்போது என்பிஇ கொடுத்த புள்ளி விவரங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதியவர்களில் 77 சதவீதம் பேர் தோல்வியுற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு நடக்கும் தேர்விலும் 10 முதல் 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
2008-ம் ஆண்டு நடந்தத் தேர்வில் 58.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
2014-ம் ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4, 11.4 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி கண்டுள்ளனர்.

தினம் ஒரு புத்தகம் "ஞாபக சக்தி இல்லையா?"


மாற்றுப் பாலின மாணவர்களின் எதிர்காலம்

ஏப்ரல் 15 திருநங்கைகள் தினம்
திருநங்கைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருந்தால் அவர்களது முன்னேற்றமும் தடைபடாது
ஒரு திருநங்கை எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு வாழ்ந்துவருபவர்களில் நானும் ஒருத்தி. வலிமிகுந்த எத்தனையோ கணங்களைக் கடந்துவந்திருக்கிறேன்.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

பத்திரிக்கைச் செய்தி
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும்.தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
வேண்டுகோள்.

உயிரிழப்பை தடுக்க மருத்துவ குழுஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக, நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்க வேண்டும்' என, ஆசிரியர்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

பொது நுழைவுத் தேர்வுக்கான தடை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, பொது நுழைவுத் தேர்வுக்கான தடையை தொடர, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா, கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

50 ஆயிரம் புத்தகங்கள் மாணவர்களுக்கு தயார்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்க, புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.கல்வி மாவட்டத்தில், 59 பள்ளிகளில் பயிலும், 10 ஆயிரத்து 500 மாணவ, மாணவியருக்கு வழங்க, கோட்டூர் சாலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 50 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!!

பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். பிளஸ் 1, 2 வகுப்புக்கான கணிதம், வரலாறு ஆகிய புத்தகங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது.இதனால் குழந்தைகளின் பெற்றோர் அந்தப் புத்தகங்களுக்காக மார்க்கெட்முழுவதும் தேடித் தேடி வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். 

வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை - திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்

வரும் கல்வி ஆண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் ரூ. 24 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்

எதிர் வரும் கல்வி ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியில் 10 பள்ளிகளில் ரூ. 24 கோடியில் 12 ஸ்மார்ட் வகுப்புகள்  தொடங்கப்படவுள்ளன.

பிரதமரின் "MANN KI BAAT" நிகழ்ச்சியில்பங்கேற்க ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு - இயக்குனர் செயல்முறைகள்

ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்

நடிகர் லாரன்ஸ் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டும் முடிவை எடுத்து, தற்போது அதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்"பாத வெடிப்பு நீங்க எளிய வழிகள்"

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும்.
சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.
சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் கால் வெடிப்புகள் வரும்.
கால் வெடிப்பு ஸ்கின் ட்ரை ஆவதால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும். அதே போல் காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ:

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை: கல்வி

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...

தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு.கண்காணிப்பு வலையில் ஆசிரியர்கள்

பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும்' என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர், தி.மு.க., பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர்.எனவே, அ.தி.மு.க., மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் சார்பில், ஆசிரியர்களை கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

ஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தல்: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் விரைவில் மாற்றம்

சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் சில ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
சென்னை :
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந்தேதி நடக்கிறது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி வந்த சாதாரண போலீசார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரையும் மற்றும் நிர்வாகத்துறையிலும் அதிகாரிகளும், பணியாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.