Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 18 April 2016

மாணவிகளுடன் மாணவர்கள் அமர்ந்தால், நடந்தால் அபராதம்!

மாணவிகளும், மாணவர்களும் ஒன்றாக உட்காரவும், நடக்கவும் தடை விதித்து பாகிஸ்தான் பல்கலை., சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது ஸ்வாத் பல்கலைக்கழகம். பாகிஸ்தான் உயர்கல்வித்துறை கழகம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி 2012ம் ஆண்டில் இந்த பல்கலை., 124 ரேங்கில் உள்ளது. இந்த பல்கலை.,யில் தற்போது ஆண், பெண் பேதம் பிரிக்கும் விதமாக புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலை., அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பின்படி, பல்கலை., வளாகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ மாணவிகளும் மாணவர்களும் ஒன்றாக உட்காரவோ, நடக்கவோ கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு தொடர்பாக பெற்றோர்களை அழைத்து, அவசர கூட்டம் ஒன்றையும் பல்கலை., நிர்வாகம் நடத்தி உள்ளது. அதில் இந்த உத்தரவிற்கு ஒப்புதல் தெரிவித்து, பெற்றோர்களிடம் கையெழுத்தும் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதே போன்றதொரு தடை பாகிஸ்தானின் முன்னணி பல்கலை.,களில் ஒன்றான தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை.,யிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி பெறுவதற்கு மாணவர்களுக்கு ஏற்ற தூரத்தில் இருக்கக் கூடிய ஸ்வாத் பல்கலை.,யில் இது போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு நிறைந்த இப்பகுதியில் தொடர்ந்து மாணவர்களும், மாணவிகளும் கல்வியை தொடர்வதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.

23.08.10 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பின் நியமனம் பெற்றவர்களுக்கு ,தகுதி காண் பருவம் விரைவாக முடித்து ஆணை பிறப்பிக்க உத்தரவு!!!

மாணவர்களுக்கு ஓர் அதிர்ச்சிச் செய்தி: ஐஐடி கட்டண உயர்வு இந்த ஆண்டு முதலே அமல்!!

ஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் கட்டண உயர்வு இந்த ஆண்டு முதல் அமைந்துள்ளது. ஐஐடி-யில் பயில விரும்பும் மாணவர்களுக்கு பேரிடிச் செய்தியாக இது அமைந்துள்ளது.
ஐஐடி-களில் கட்டண உயர்வு தொடர்பாக பரிசீலிக்க தனிக் குழுவை மத்திய மனித வள அமைச்சகம் அமைத்திருந்தது. இந்தக் குழு தனது அறிக்கையைத் 
தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து தற்போது ரூ.90 ஆயிரமாக உள்ளது பயிற்றுக் கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த மாணவர்களுக்கு, இந்தக் கட்டண உயர்வு 2016-17-ம் கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது மத்திய மனித வள அமைச்சகம்.

ஆனால் ஏற்கெனவே ஐஐடி-களில் இணைந்து படித்து வரும் மாணவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் பழைய கட்டணத்தையே செலுத்தி படிக்கலாம். ஆனால் 2016-17-ம் ஆண்டில் புதிதாகச் சேரும் மாணவர்கள் புதிய கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று மத்திய மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு!!

இனி சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வுகளை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

நுழைவுத் தேர்வு தொடர்பாக 18 பேர் கொண்ட நிலைக்குழுழவை டெல்லி பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இந்த நிலைக்குழுவை பல்கலைக்கழக துணைவேந்தர் உருவாக்கியுள்ளார்.
இந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிப்புகள் படிக்க விண்ணப்பித்தோருக்கு வசதியாக நுழைவுத் தேர்வுகள் அந்தந்த ஊர்களில் நடத்த இந்த நிலைக்குழு முடிவு செய்துள்ளது.
தொடக்கத்தில் டெல்லியைத் தவிர 5 மையங்களில் இந்தத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு மட்டுமே டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஜி. படிக்க இடம் கிடைக்கும். பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள 5 மையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். டெல்லி பல்கலைக்கழகம் மொத்தம் 66 பி.ஜி. படிப்புகளை வழங்கி வருகிறது.
தற்போது நுழைவுத் தேர்வு விவகாரத்தால் மாணவர்கள் இந்த படிப்புகளுக்காக பதிவு செய்து தாமதமாகி வருகிறது.

உலகிலேயே அதிக வெயில் வாட்டும் நகரம் மதுரை:ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மதுரை:'உலகிலேயே அதிக வெயில் வாட்டும் இடமாக மதுரை நகர் உள்ளது,' என பல்கலை ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மார்ச் வந்தாலே வெயில் கொடுமையை தாங்க முடியாத மக்கள் பல்வேறு முன்னேற்பாடுகளை கையாள்வர். கோடை மழை கை கொடுத்தால் வெயில் கொடுமை யில் இருந்து கொஞ்சம் தப்பிக்க வாய்ப்பிருக்கும்.ஆனால், வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருவதால் பல மாவட்டங்களில், 'வெயில் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நேரம் மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம்,' என அறிவிப்பு வெளியிடும் அளவிற்கு வெயிலின் உக்கிரம் மக்களை வாட்டி வதைக்கிறது.இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்ன வென்றால், '2015- -16ம் ஆண்டில் பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியான கார்பன் டை ஆக்ஸைடு அளவு 3.05 பி.பி.எல்., அதிகரிப்பால் உலக அளவில் ஐந்து ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெயில், மதுரை நகரை தாக்குகிறது,' என்பதுதான்.இதன்விளைவு தான் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த மார்ச் துவக்கத்தில் 40.6 டிகிரி செல்சியஸ் வெயில் அளவு மதுரையில் பதிவாகியுள்ளது. இதன் கொடூரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புஉள்ளதாகவும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.ஏன் இந்த உக்கிரம் :'மதுரையில் வெளியாகும் சராசரி கார்பன் டை ஆக்ஸைடின் (சிஓ2) அளவு, உலக சராசரி அளவான 402 பி.பி.எம்.,ஐ விட 65 பி.பி.எம்., அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்,' என மதுரை காமராஜ் பல்கலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் புலம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இப்பல்கலை புலத்தலைவரும், முன்னாள் துணைவேந்தருமான முத்துச்செழியன் தலைமையில் உதவி பேராசிரியர் விஜயபாஸ்கர், ஆராய்ச்சி மாணவிகள் சேஷபிரியா, இந்திரா ஆகியோர் மதுரை நகரில் பெரியார் பஸ் ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி, அரசரடி, ஜெய்ஹிந்துபுரம், சிம்மக்கல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர்.இதில், ஓராண்டில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 445 பி.பி.எம்.ல் இருந்து 490 பி.பி.எம்., ஆகவும், வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸில் இருந்து 42ஆகவும் பதிவாகியது தெரிய வந்துள்ளது. இதற்குமுக்கிய காரணம் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை தான் எனவும், இதனால் சுவாசம் தொடர்பான தொற்று மற்றும் நுரையீரல் புற்றுநோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து முத்துச்செழியன் கூறியதாவது:இக்குழு எடுத்த ஆய்வு முடிவு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல மேலாண்மை (NOAA) அமைப்பு வெளியிடும் ஆய்வு முடிவை ஒத்துள்ளது.மதுரையின் சராசரி வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவானது ஓராண்டாக தோராயமாக 469 பி.பி.எம்., என்ற அளவில் உள்ளது. இது உலக சராசரியை ஒப்பிடும் போது 65 பி.பி.எம்., அதிகமாகும். வாகனங்களில் இருந்து வெளியாகும் கரும்புகை மட்டுமின்றி, 'எல்-நினோ' என்ற பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவும் முக்கிய காரணம் ஆகும்.நாடு முழுவதும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வுகளில், வளிமண்டலத்தில் சராசரி கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 402.59 பி.பி.எம்.,ஆக அதிகரித்துள்ளது தெரியவந்துஉள்ளது. ஆனால் தொழில் புரட்சிக்கு முன் இது 270 பி.பி.எம்.,ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது, என்றார்.தீர்வு என்ன :நகரில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.* அதிக எண்ணிக்கையில் பசுமை தோட்டங்களை ஏற்படுத்தலாம்.காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.பழைய வாகனங்களில் இருந்து தான் அதிக புகை வெளியாகிறது. அவ்வகை வாகனங்களை கண்டுபிடித்து உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.காஸ் மூலம் இயங்கும் வாகனங்களை அதிகரிக்கலாம்.* கான்கிரீட் தளங்கள் அமைப்பதை கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையால் வெயில் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பிக்க வாய்ப்புள்ளது.

கொளுத்தும் வெயிலில் தவிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள்

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "வெந்தயக் கீரையின் பயன்கள்"

வெந்தயக் கீரை வெந்தய செடியின் இலைகள் தான் வெந்தயக் கீரை.இது மிகவும் குளிர்ச்சி நிறைந்தது.இதை பொரியலாகவும்,பருப்புடன் சேர்த்து சாம்பாராகவும்,கூட்டாகவும் சமைத்து சாப்பிடலாம்.

தினம் ஒரு புத்தகம் "நூறு சிறந்த சிறு கதைகள் '


SCERT - தமிழ் இணைய கல்வி கழகம் - ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் காணொளி மொழி பெயர்ப்பு பணிமனை பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...
*.ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...
*.இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்...
*.ஒப்புதல் கடிதம்...
*.குழந்தை தொழிலாளர்கள் விவரம்
*.பள்ளி இடைநின்றவர் விபரம்..
*.பள்ளி செல்லாதோர் விவரம்...
*.பள்ளி வேலை நாட்கள் விவரம்...
*.மக்கள் தொகை சுருக்கம்...
*.மாற்று திறனாளிகள் விவரம்...
*.வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்...
*.முகப்பு தாள்...

நன்றி:
திரு.ரகுபதி,ஆசிரியர்.

பள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது அதிகாரி எச்சரிக்கை.

பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தரமான கல்வியை இலவசமாக வழங்குவது அரசின் கடமை - கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தல்.


கல்வித் தரத்தை முன்னேற்ற வழிகாட்டுமா கட்சிகள்?

தரமான கல்வியை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்பதுநீண்ட நாளாக, நாடு முழுவதும் பேசப்படுவதாகும். கல்விக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது, கோத்தாரி குழு தெரிவித்த கருத்தாகும்.கல்வியில் கேரளாவும், தமிழகமும் முன்னிற்கின்றன. உயர்நிலைக் கல்வியில் ஆந்திரா முன்னிற்கிறது. இந்தப் பின்னணியில், சிறந்த கல்வி, வேலைவாய்ப்பு தரும் நடைமுறை கட்டாயமாகிறது.

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் வகுப்புகளுக்கு முன் கூட்டியே தேர்வுகளை நடத்த திட்டமிடலாம்


10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு.

அரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்றுமுன்தினம் (ஏப்., 16) துவங்கியது. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தினர். இன்று (ஏப்., 18) முதல் உதவி தேர்வாளர்கள் திருத்த உள்ளனர். கணிதத் தேர்வில் பிரிவு 4 ல் 47 வது 'அ' பிரிவு 'கிராப்க்கான' (10 மதிப்பெண்கள்) வினாவில் இரு சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

முதுகலை பட்டதாரிகளுக்கு தேசிய வீட்டுவசதி வங்கியில் பணி.

ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்எச்பி) காலியாக உள்ள 7 பொது மேலாளர், உதவி பொது மேலாளர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அஞ்சல் துறையில் 374 பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அஞ்சல் துறையின் மத்தியப் பிரதேசம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 374 தபால்காரர், மின்னஞ்சல் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 1லும் ஆல் பாஸ் ஆசிரியர்கள் குழப்பம்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத தேர்ச்சிவழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன. அதனால், பல பள்ளிகள், தேர்ச்சி தகுதி இல்லாத மாணவர்களுக்கு, மாற்று சான்றிதழ் எனப்படும், 'டிசி'யை கட்டாயமாக கொடுத்து வெளியேற்ற முயற்சித்துள்ளன.

சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.

சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, டிசம்பர் மாத தேர்வுகள், கன மழையால் தள்ளி வைக்கப்பட்டு, ஜனவரியில் நடத்தப்பட்டது.

இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.

பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலை மூலம் ஒற்றை சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் விண்ணப்ப முறையை, அண்ணா பல்கலை அறிமுகம் செய்துள்ளது.