Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 22 April 2016

அரசு நிர்ணயித்துள்ள இடஒதுக்கீடு படிதான் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் , மீறினால் கடும் நடவடிக்கை !!!

16.05.2016 தேர்தல் அன்று தமிழகத்தில் பொதுவிடுமுறை அரசு அறிவிப்பு !!!

தெலங்கானாவில் கோடையிலும் பள்ளிகளில் மதிய உணவு

கோடை விடுமுறையிலும் கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க தெலங்கானா அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

தெலங்கானா மாநிலத்தில் இப்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான கிராமங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில், கோடை விடுமுறையிலும் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க தெலங்கானா அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதயத்துக்கு ரத்தத்தை செலுத்தும் புதிய கருவி கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

இதயத்துக்கு ரத்தத்தை செலுத்தும் புதிய கருவி

இதய மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு உதவும் வகை யில், இதயத்துக்கு ரத்தத்தைச் செலுத்தும் புதிய கருவியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞா னிகள் கண்டுபிடித் துள்ளனர்.

இதயம் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இதய தானம் செய்வோ ரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரம் மாற்று இதயம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகமாக உள்ளது.

இதற்காக விஞ்ஞானிகள் செயற்கை இதயம் தயாரித்து பரிசோதனை முறையில் பொருத்தி ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர். எனினும், முழு அளவில் இது இன்னும் வெற்றி பெறவில்லை. அதேநேரம் செயற்கை இதயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நோயாளி களுக்கு பொருத்த கோடிக் கணக்கில் செலவாகிறது.

இந்தச் சூழ்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இதயத்துக்கு ரத் தத்தை செலுத்தும் புதிய கருவியை (பம்ப்) கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி 100 கிராம் எடை கொண்டது.

இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்தக் குழாய்க்கு பதில் இந்த புதிய பம்ப் செயல்படும். இது இதய மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு பெரிதும் உதவும். இந்த பம்ப் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் 5 பன்றிகளுக்கு பொருத்தி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது.

இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட்டு களுக்கு டைட்டானியம் என்ற உலோகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த உலோகத்தில் இருந்து இந்த பம்ப் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பம்ப் ஒரு நிமிடத்தில் 3 முதல் 5 லிட்டர் ரத்தத்தை இதயத்துக்கு செலுத்தும் திறன் கொண்டது.

வெளிநாட்டு செயற்கை இதயங் கள் கோடியில் விற்கப்படும் போது, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ள இந்த பம்ப் ரூ.1.25 லட்சம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் கிரண்குமார் கூறுகையில், “ராக்கெட் தொழில்நுட்பமும், செயற்கை கோள் தொழில்நுட்பமும் எப்படி மனிதகுலத்துக்கு பயன்படுகின்றன என்பதற்கு இந்த புதிய பம்ப் சிறந்த எடுத்துக்காட்டு. இதயத்துக்கு ரத்து ஒட்டம் சரியாக இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு இந்த கருவி மிகவும் பயன்படும்” என்றார்.

தேர்தல் பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும்: அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் தேர்தல் பணிகள் தொடர்பாக, மூன்று பயிற்சிக் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-

இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொதுப் பார்வையாளரும், 32 காவல் பார்வையாளர்களும் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று தமிழகம் வரவுள்ளனர். தொகுதிக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள செலவினப் பார்வையாளர்களும் விரைவில் வருவர்.

வைப்புத் தொகை எவ்வளவு? 

வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்வோரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தால் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும்.தனித் தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். பொதுத் தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் போட்டியிட விரும்பினால், ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகைசெலுத்தினாலே போதும். பொதுத் தொகுதியில் போட்டியிட பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.

போலி வாக்காளர்கள்: 

போலி வாக்காளர்கள் இருப்பதாக, பிற கட்சிகள் புகார் கூறியபோது பாமக எந்தப் புகாரையும் கூறவில்லை. இப்போது வாக்காளர் பட்டியல் அனைத்தும் இறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், போலி வாக்காளர்கள் இருப்பதாக அந்தக் கட்சி புகார் தெரிவிக்கிறது.வாக்காளராக இல்லாத ஒருவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவருடைய பெயர் இடம் மாறியவர்-இறந்தவரின் பட்டியலில் வைக்கப்படும். இந்தப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம்.

இடம் மாறியவர்-இறந்தவரின் பட்டியலில் உள்ளவர்கள் வாக்கை செலுத்த வேண்டுமானால் வாக்காளர் அடையாள அட்டையுடன் கூடுதலாக ஒரு ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.மண்டல குழுக்கள்: வாக்குப் பதிவுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்கள், எழுதுபொருள்கள் ஆகியவற்றை வழங்கும் பணியை மண்டல குழுக்களே மேற்கொள்ளும். மேலும், வாக்குப் பதிவின்போது ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதனையும் இந்தக் குழுக்களே தீர்த்து வைக்கும். மொத்தமாக 5,916 குழுக்கள் வட்டாட்சியர்கள் தலைமையில் செயல்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) தொடங்கி, ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கான அறிவிக்கையை அன்றைய தினம் காலையில் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது. திரும்பப் பெற மே 2- ஆம் தேதி கடைசியாகும். வாக்குப் பதிவு 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெறுகிறது.வேட்புமனு அளிக்கும் போது, ஒவ்வொரு வேட்பாளரும் அஞ்சல்தலை அளவிலான புகைப்படத்தை அளிக்க வேண்டும். இந்த புகைப்படம் வாக்குப் பதிவின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும்.மேலும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். 

வேட்புமனு தாக்கல் செய்யும்போது மூன்று வாகனங்களில் வர வேண்டும். அதற்கு மேல் வந்தால் அதற்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் நான்கு பேர் உடனிருக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளரின் அடிப்படைத் தகவல்கள் உடனடியாக தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த வேட்புமனு அப்படியே பதிவேற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்கு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

தினம் ஒரு புத்தகம் "ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "வெங்காயத்தினால் ஏற்படும் மருத்துவ பயன்கள்"

வெங்காயத்தை சமயலுக்கு பயன்படுத்துவதோடு, மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி

தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாக்குப்பதிவின் போது பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ( Zonal Officer, Presiding Officer, Polling Officer I, Polling Officer II , Polling Officer III மற்றும் BLO ) அலுவலர்களுக்கு பயனளிக்கும் தகவல்கள், பயிற்சிக் கட்டகங்கள், Manuals, வீடியோ இணைப்புகள், வினாக்கள் மற்றும் பிற விரிவான தகவல்களை உள்ளடக்கிய செயலியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால்ஓட்டு போட படிவம் 12-பி 24ம் தேதி வழங்கப்பட உள்ளது.7 ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின் போது ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வரும் 24ம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

இ - சேவை மையங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை பெறலாம்: தமிழக அரசு

தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், அரசு இ- சேவை மையங்கள் மூலம் வழங்கும் புதியநடைமுறை இன்று தொடங்கியது.ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டில் வழங்குவதற்காக 10 கோடி புத்தகங்கள் தயார்நிலையில் உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் குரூப் தொடங்க லைசென்சு பெற வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் ஹண்ட் வாரா நகரில் சமீபத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கலவரம் வெடித்தது.கலவரத்தை அடக்க பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 5 பேர் பலியானார்கள். இதையடுத்து ஹண்ட்வாரா நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

போலி ஆசிரியர்கள் யார்: களம் இறங்கிய கல்வித்துறை: குழப்பத்திற்கும் தீர்வு

போலி ஆசிரியர்களை கண்டுபிடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உண்மைத்தன்மை சான்று பெறுவதில் இருந்த குழப்பத்தையும் ஆசிரியர் தேர்வு வாரியம் தீர்த்து வைத்துள்ளது.சமீபத்தில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர் பிடிபட்டார்.

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு தேதி நீட்டிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல் துவங்கும்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன் தெரிவித்துள்ளதாவது:

பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கை:

தேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையைகட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும்என்றார் மாவட்டத் தேர்தல்  அலுவலர் சு. கணேஷ்.சட்டப்பேரவைத் தேர்ததலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனு பெறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: