Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 23 April 2016

தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,

சேலம் மாவட்ட முதுநிலை ஆட்சியராக கார்த்திகேயன் நியமிக்கப் பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட முதுநிலை ஆட்சியராக சத்தியபிரதா சாஹு நியமிக்கப் பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியராக நாகராஜன்  நியமிக்கப் பட்டுள்ளார்.

வேலூர் ஆட்சியராக ராஜேந்திர ரத்னு நியமிக்கப் பட்டுள்ளார்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில்,

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுப்புலட்சுமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமித்குமார் சிங் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை எஸ்பி ராஜேஸ்வரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் ஹதிமானி புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தருமபுரி எஸ்பி லோகநாதன் மாற்றப்பட்டு பண்டி கங்காதர் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் எஸ்பி மகேஸ்வரன் மாற்றப்பட்டு சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பி உமா மாற்றம் செய்யப்பட்டு, நிஷபா பார்த்திபன் புதிய எஸ்பியாக நியமனம் பெற்றுள்ளார்.

புதுவை மத்திய பல்கலை. பொறியியல் பருவத் தேர்வுகள் மே 20-க்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி மத்திய பல்கலை.யின் பொறியியல் பருவத் தேர்வுகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் கே.தரணிக்கரசு தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பொறியியல் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும், பாடங்கள் முழுமையாக முடிக்கப்படாததாலும், தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என பொறியியல் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கை: பல்கலைக்கழகத்தின் அனைத்து இணைப்பு பொறியியல் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்வுத் துறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பருவத் தேர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களும் பருவத் தேர்வுகளை ஒத்தி வைக்க ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து பொறியியல் பருவத் தேர்வுகள் வரும் மே மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு அட்டவணை அனைத்துக் கல்லூரிகளுக்கும் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும். மாணவ, மாணவியருக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் தரணிக்கரசு.

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடம்: 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 25-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் "இளநிலை இணை உதவியாளர்' (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) பிரிவு, இளநிலை இணை வேளாண்மை உதவியாளர் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 25-ஆம் தேதிக்குள்(திங்கள்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

28-ம் தேதி வரை அனல் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை,  வட தமிழகத்தில் ஏப்.28 -ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று வேலூரில் அதிகபட்சமாக 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் 12 இடங்களில் 100 ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது.

பகல் வேளைகளில் வெப்பத்துடன் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், பயணிகள், பாதசாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

இந்நிலையில், மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதாலும், கடல் காற்று தொடங்குவதற்கு தாமதாவதாலும் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பத்தின் அளவு ஒன்றிரண்டு டிகிரி அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கக் கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது

ALAGAPPA UNIVERSITY Directorate of Distance Education ( DDE )

Admission Notification
B.Ed Programme  (Two Years) Distance Education
2016-17

*Eligibility-10+2+3 or 11+1+3 Pattern
*Medium of Instruction -English only
*Cost of Application -Rs.500/-
*Course Fees- 18,000 Per Year
*Last date for issue and receipt of filled application forms - 24.05.2016

தினம் ஒரு புத்தகம் "அற்புத விடுகதைகள் 1001"


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "நன்னாரி--கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து"

நன்னாரி
 சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத்துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 27.04.2016 அன்று பதிவாளர் நீதிமன்றத்தில் கோர்ட் எண்.2 யில் வரிசை எண் 90 ஆவதாக விசாரணைக்கு வருகிறது.


தாய்மொழி வழி கல்வி; மத்திய அரசு திட்டம்

அலுவலகப் பணிகளில், ஹிந்தியின் பயன்பாடு குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

ஆசிரியர் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு சரியே.

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து,தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள, அரசு உதவி பெறும்பள்ளியில், சரவணபாபுஎன்பவர், இடைநிலைஆசிரியராக, 2012 பிப்., 20ல் நியமிக்கப்பட்டார்; அன்றே பணியிலும் சேர்ந்து விட்டார்.

தேர்தல் 2016 - PO, P1, P2 , P3 ஆகியோரின் கடமைகள் - தேர்தல் நாள் அன்று, மற்றும் முந்தய நாள் செய்ய வேண்டியவைகள் - EVM, MOCK POLL, SEAL பற்றிய முழுமையான தகவல்கள் - அனைத்தும் எளிய தமிழில் பட விளக்கங்களுடன்

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் அப்பிளிகேசன் !!!

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி கணினித்துறை மாணவர்கள் மாதிரி ஆப்பரேஷன் மென்பொருள் கண்டுபிடித்துள்ளனர்.மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இறந்தவர்களின் உடல்களை உரிமையாளர்களின் அனுமதியுடன்பெற்று அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் உடற் பாகங்கள்குறித்து பாடம் நடத்துவர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்கள்களுக்கும் EMIS ல் உள்ளீடு செய்து முடிக்க வேண்டும்!


தபால் ஓட்டு விண்ணப்பிக்க கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும்

தபால் ஓட்டு விண்ணப்பிக்க, 24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் வகுப்பிற்கு கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும். தபால் ஓட்டு விண்ணப்பிக்க,
24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் வகுப்பிற்கு கீழ் கண்ட ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லவும்.

1.  Voter. ID Xerox

2.  Assambly Name, No.

3.  Serial No.

4.  Part No.

5.  Election Duty Order Xerox.

புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை

புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

              இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அச்சுப்பிழையால் அதிகபட்ச 'கருணை' பிளஸ் 2 மாணவர்கள் 'குஷி'

 பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை காரணமாக மாணவர்களுக்கு இந்தாண்டு 22 மதிப்பெண் 'கருணை' மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.

பள்ளிக்கல்வி - ICT AWARD 2016 - கணினி வழி கற்பித்தலில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களிடம் இருந்து ICT AWARD காண விண்ணப்பங்கள் வரவேற்பு - இயக்குனர் செயல்முறைகள்



கோடை விடுமுறை நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பள்ளி திறக்கும் நாளில் விலையில்லா பொருட்களை வழங்குதல் குறித்து அறிவுரை !



இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறுவோர்க்கு, பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல்- தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரை



PO1,PO2, & PO3 பணிகள் என்னென்ன?




National ICT Award for School Teachers -2016 Advertisement

வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி

உங்களுடைய
👉🏼தொகுதி பெயர்,
👉🏼தொகுதி எண்,
👉🏼வாக்கு சாவடி பாகம் எண்,
👉🏼வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???

எளிமையான வழி இதோ👇🏽

👉🏼உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து
9444123456
என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.

👉🏼ஒருசில வினாடிகளில் விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்
Message மூலம் உங்கள் phone-க்கு வரும்.
வாக்கு சாவடியின் பெயரும் வரும்.

👉🏼தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க
தேவையான விவரங்களை பெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

24.04.2016 அன்று நடைபெறும் தேர்தல் பயிற்சியில்,தேர்தல் ஆணையை ரத்து செய்யவோ ,மாற்றவோ கூடாதுமாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் அறிவுறுத்தலின் படி !!!