Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 2 May 2016

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த "இந்திய இளைஞர் வழக்குரைஞர் சங்கம்' சார்பாக பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த பொது நல மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புது தில்லி : அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மாநில அரசுகள் மனு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.

5 கோடி மரக்கன்றுகள் நட ரயில்வே திட்டம்

பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
ரயில்வே துறையின் சுற்றுச்சூழல் இயக்குநரக மூத்த அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

தினம் ஒரு புத்தகம் 'தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி "


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "மூட்டுவலியை சரிசெய்ய சிறந்த வழிகள்"

உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மூட்டுவலி ஏற்பட்டால் நடக்க முடியாது. உட்கார்ந்து எழ முடியாது. இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது போன்ற அவஸ்தைகளால் மிகவும் வேதனை ஏற்படும்.

ஊழியர்கள் மரணம் மற்றும் ஊனம் காரணமாக சிறப்பு சலுகை - இயலாமை ஓய்வூதியம் / 2006க்கு முன்னர் இயலாமை ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் சார்பான திருத்தம் வெளியீடு



ஆசிரியர் பதவி உயர்வு ஊதியம் நிர்ணயிப்பதில் கல்வித்துறை புது உத்தரவு.

இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் நிர்ணயிக்கும்போது, தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமாக ரூ.750வழங்கப்படுகிறது.
மேலும் அவர்கள் பட்டதாரி ஆசிரியர்,தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது,ஊதியம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

சில உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாக ஊதியம் நிர்ணயிப்பதால் இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார் சென்றப்படி உள்ளன. இந்த குழப்பத்திற்கு தற்போது தொடக்கக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.இடைநிலை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்,தொடக்கப் பள்ளிதலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற்று,ஊதியம் நிர்ணயிக்கும்போது தனி ஊதியம் ரூ.750யையும் சேர்த்து கணக்கிட வேண்டும்.

மேலும் தனி ஊதியத்தை ஆண்டு ஊதிய உயர்வு,அகவிலைப்படி,ஓய்வூதியத்திற்கும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.2011ஜன., 1க்கு பின் தேர்வுநிலை பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன்3சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்.தர ஊதியத்தில் மாற்ற செய்ய கூடாது. தொடர்ந்து தனி ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

110 வன அதிகாரி பணியிடங்களுக்கான பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு.

2016-ஆம் ஆண்டுக்கான 110 இந்திய வன அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

1079 பணியிடங்களுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு.

2016-ஆம் ஆண்டுக்கான 1079 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமை பணிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

TNPSC:நூலகர் பணி அறிவிப்பு.

நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நூலகர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் நடந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை 8 சதவீதம் மாணவர்கள் எழுதவில்லை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடுமுழுவதும் 52 நகரங் களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர் கள் எழுதினர்

பள்ளி கல்வித்துறையை சேர்ந்த தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.


விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை: மே 6 வரை விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் தேதியை, மே, 6 வரை நீட்டித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.பள்ளி மாணவர்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பதற்கேற்ப நல்ல பயிற்சி, தங்கும் வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய, 23 விளையாட்டு விடுதிகள், பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

அரசு கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம்.

அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகத்தில், 62 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 2016- - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம்,இன்று துவங்குகிறது.

தேசிய தகுதிகாண் மருத்துவ நுழைவுத் தேர்வு:மத்திய அரசு அவசரச் சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல்.

தேசிய தகுதி காண் மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தேசிய தகுதிகாண் மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாய உத்தரவை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ôயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாணவர்கள் பதற்றம்; பெற்றோர் அதிகாரிகள் வாக்குவாதம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் குளறுபடி.

இந்த ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் அதிகாரிகள் பலத்த கெடுபிடிகளுடன் நடந்து கொண்டதால், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பதற்றம் அடைந்தனர்.இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க  நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிப்பார்வைக்கு பின் வட்டார வள மையத்திற்கு,ஆசிரியர் பயிற்றுநர்கள் வருகைபுரிதல் பற்றிய தெளிவுரைகள்-சேலம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்


9- மற்றும்11- வகுப்புகளில் 5%வரை பெயிலாக்க அனுமதி


TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance Education TAMIL UNIVERSITY

TANJORE

ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education

*Application issue from 24.04.2016

*Cost of Application Rs.600/-

*Course Fees
First Year- 25,300
Second Year- 25,000

*No Entrance Exam

*Last date for issue and filled in applications 31.05.2016 till 5pm

Download
Advertisement, Prospectus,Application Form& Teaching Experience Certificate avail in www.tamiluniversitydde.org

தேர்தல் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் கடமை தவறுபவர் மீது நடவடிக்கை எடுக்க மா.தொ.க. அலுவலருக்கு இயக்குநர் கடிதம்.